search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bush"

    • மழைக்–காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
    • பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் முதல் ஏர்வாடி ஊராட்சி பரமநல்லூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரசலாறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

    இதனால் மழைக்–காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    ஆறுகளில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்–பட்ட அதிகாரிகள் அரசலாற்றை ஆக்கிர–மித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதரில் 2 பச்சை நிற பாலித்தீன் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • 28 பண்டலுக்கு 2 கிலோ வீதம் சுமார் 56 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் உப்பளம் செல்லும் சாலை ஓரத்தில் புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கஞ்சா மூட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றினர்.

    அதிராம்பட்டினம் நுண்ணறிவு பிரிவு காவலர் வெற்றிச்செல்வனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பசாமி மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் கோபால், பாண்டியன், நாராயணசாமி ஆகியோர் அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்பிக்கோட்டை மறவக்காடு கிழக்கு கடற்கரை சாலைக்கு கிழக்கே 200 மீட்டர் தூரத்தில் உப்பளம் செல்லும் சாலையின் இடதுபுறமாக புதரில் 2 பச்சை நிற பாலித்தீன் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதனை அடுத்து அந்த கஞ்சா மூட்டை களை கைப்பற்றி அதிராம்ப ட்டினம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இதில் 28 பண்டலுக்கு 2 கிலோ வீதம் சுமார் 56 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    மேலும் இதுதொடர்பாக நாகப்பட்டிணம் என்.ஐ.பி.சி.ஐ.டி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கால்வாயின் கரையில் குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
    • கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள இறையடிக்கால் கிராமம் வழியாக இறையடிக்கால்வாய் செல்கிறது. அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு இந்த கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இறையடிக் கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படாமல் இருக்கிறது.

    இதையடுத்து கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. கால்வாயே தெரியாதவாறு செடிகள் முளைத்து, காடு போல் காட்சி அளிக்கிறது. மேலும் மண் திட்டுகளும் ஏற்பட்டுள்ளன.

    மண் திட்டுகளால் கால்வாயில் நீரோட்டம் தடை பட்டுள்ளது. இதனால் குளங்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடை ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் வரும் போது, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கரைகளை உடைத்து கிராமங்களுக்குள் புகும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. கால்வாயில் அடர்ந்துள்ள புதர்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தஞ்சமடைந்துள்ளன.

    இவைகள் கால்வாய் கரையோரமுள்ள குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். கால்வாயின் கரையில் குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.

    எனவே புதர் மண்டி கிடக்கும் இறையடிக்கால்வாயை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×