காங்கேய சித்தர் பீடத்தில் பவுர்ணமி யாகம்

பவுர்ணமி அன்று சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கி கொண்டிருக்கிறது.மூலவர் போற்றிகளை பாராயணம் செய்ய ஸ்ரீ காங்கேய சித்தர் பீட வழிபாட்டு குழு ஏற்பாடு செய்திருந்தார்.
பவுர்ணமி யாகம் நடந்தது.
பவுர்ணமி யாகம் நடந்தது.
Published on: 

நாகப்பட்டினம்:

மார்கழி திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்த நாளான நேற்று நாகூரில் உள்ள காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் பவுர்ணமி யாகம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நாளில் சித்தர்கள் பீடத்தில் யாகம் செய்து வழிபடுபவர்களுக்கு உடல், மனம், ஆன்மாவால் செய்த பாவங்கள் சித்தர்கள் அருளால் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். பவுர்ணமி அன்று சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கி கொண்டிருக்கிறது.

மாதம்தோறும் பௌர்ணமியாகத்தை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், குமார், பழனிவேல் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

யாகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் சிவபுராணம் மற்றும் 108 மூலவர் போற்றிகளை பாராயணம் செய்ய ஸ்ரீ காங்கேய சித்தர் பீட வழிபாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆசிரியர் சசிகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com