என் மலர்
மயிலாடுதுறை
- மத்திய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.
- கைது செய்த 8 பேரை போலீசார் விடுவித்தனர்.
சீர்காழி:
மத்திய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலர் கடந்த வாரம் புத்தூரில் சாலைமறியல் போரா ட்டத்தில் ஈடுப்பட்டபோது 9 ஊராட்சி மன்ற தலைவர்களை போலீசார் கைது செய்து,
அன்று மாலை 8பேரை விடுவித்தனர்.
இதனிடையே ஊராட்சி தலைவர் நேதாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் புளிய ந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி மீது போட ப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவரை விடுவிக்கக்கோரியும், போலீசாரை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு சாமுவே ல்ராஜ் கண்டன உரையாற்றினார்.
ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கேசவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
- ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில், விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
அருகில் பாரத ஸ்டேட் வங்கி நாகை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை முதன்மை மேலாளர் ராமநாதன், புதுப்பட்டினம் கிளை மேலாளர் ஹேம்நாத் மற்றும் பலர் உள்ளனர்.
- சுவாமி -அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- 4 வீதிகளிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வலம் வந்து கலந்து கோவிலை வந்தடைந்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்று முடிந்தது.
தொடர்ந்து இரவு விநாயகர், வள்ளி தெய்வானை உடனடியாக முருகப்பெருமான், சுவாமி -அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினர். தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னி லையில், சிறப்பு நாதஸ்வர கச்சேரி, நாட்டிய நிகழ்வுடன் புஷ்பப் பல்லக்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
தேரோடும் நான்கு வீதிகளிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வலம் வந்து கலந்து கோவிலை வந்தடைந்தனர்.
இதில் புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா, காசாளர் செந்தில், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, துணைத் தலைவர் கோவி. நடராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
- பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிதிஉதவி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் ஒன்றியம், இனையாளூர் ஊராட்சி வடகரை புதுத்தெருவை சேர்ந்த விவசாயி எபி. இவரது வீடு மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட எபி குடும்பத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட தேசிய சட்ட உரிமை கழகம் சார்பில் நிதி உதவி, மளிகை பொருட்களை மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், துணை செயலாளர் வெங்கட்ராமன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சங்கீதா, மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதி என்கிற பாரதிராஜா, நகர மன்ற செயலாளர் மணி கண்ட பிரபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் லியாத்அலி, செம்பை ஒன்றிய செயலாளர் ஜாபர்சாதிக் , ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 8 கால யாகசாலை பூஜைகள், பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
- கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்- உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் 3 நிலைகளில் காட்சி தருகின்றனர்.
திருஞானசம்பந்தர் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய அற்புத தலமாகும். காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவர்கள் இக்கோவிலில் தெற்குகோபுரம் அருகே தனி சன்னதியில் காட்சி தருகின்றனர். பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.
அதன் பின்னர் தற்போது கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தொடங்கி ரூ.20கோடி செலவில் நடைபெற்று வந்தது.
முத்துசட்டை நாதர்சுவாமி, திருஞானசம்பந்தருக்கு கருங்கல்மண்டபம், கருங்கல்பிரகாரங்கள், மேள்தளம் புதுப்பித்தல், வர்ணபூச்சு என திருப்பணிகள் சிறப்பாக நடந்து முடிந்து கடந்த சனிக்கிழமை 8 கால யாகசாலை பூஜைகள் 11 பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்துமுடிந்தது.
இன்று நான்கு கோபுரங்கள், சுவாமி-அம்மன் விமான கலசங்கள், மலைக்கோயில் விமானகலசம் உள்ளிட்டவைகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், பல்வேறு மடத்து ஆதீனங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, சவுந்தர்ராஜன், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷே கத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. மேலும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உஷா தலைமையில் பல்வேறு மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுப்பட்டனர்.
- இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
- எங்களுடைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் துறை சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றுகளை 100 பயனாளிகளுக்கு கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று வழங்கப்படுகின்றது. இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும். நரிக்குறவர் இன மக்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பழங்குடியினர் இன ஜாதி சான்று பெற்ற நரிக்குறவர் சமுதாய பெண் ரம்பா (வயது 26) கூறியதாவது:-
நரிக்குறவர் சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இது எங்களுடைய பல நாள் கனவு. முதல்-அமைச்சர் எங்கள் நரிக்குறவர் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இன்று மாவட்ட கலெக்டரால் இந்த பழங்குடி யினர் ஜாதி சான்றிதழ் எங்களுக்கு கிடைக்க பெற்றிருக்கிறது. எங்களு டைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது. இதற்கு முதல்- அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் நன்றி.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், பல்லவராய ன்பேட்டை ஊராட்சி தலைவர் சேட்டு, நரிக்குறவர் இன மக்கள் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.
- வேலைவாய்ப்பற்ற 26 இளைஞர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.
மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.
கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை, புகார் தொடர்பான மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள், அடிப்படை வசதிகோரியும் என மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தவிபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.
முன்னதாக, மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற 26 இளைஞர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெகடர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.
- 11 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனை அடுத்து திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இதனிடையே கோவிலில் உள்ள பரிவார மூர்த்தி தெய்வ சன்னதிக ளுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், ருணம் தீர்த்த விநாயகர், காழிபுரீஸ்வரர், காழி கணநாதர், மண்டப குமாரர், 63 நாயன்மார்கள், நவக்கிரக சன்னதி, திருஞானசம்பந்தர் ஆர்ச் உள்ளிட்ட சுமார் 11 பரிவார மூர்த்தி சன்னதிக ளுக்கு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் சங்க தலைவர் மார்கோனி, துணைத் தலைவர் கோவி.நடராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், திருமுல்லைவாசல் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
- கங்கை நீர் வழிந்து ஓடுவது போல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கு கோபுரவாயில் நந்தவனத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட யாகசாலை பந்தலில், 82 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் 120 சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க பிரம்மாண்டமான அளவில் யாகசாலைக்கு முகப்பு கோபுரங்களுக்கு இணையாக கயிலாய மலையில் சிவன் பார்வதியுடன் காட்சி அளிக்கும் வண்ணம் ஒருபுறம் கங்கை நீர் வழிந்து ஓடுவது போலவும் பிரம்மாண்டமான முறையில் செட் அமைக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இன்றி ஆலயத்தின் அனைத்து பகுதிகளிலும் கோபுரங்கள் சுற்றுச்சுவர்கள் வண்ண மின் விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நாட்டிய நிகழ்ச்சி ஆகிய வையும் நடைபெறுகிறது.
இவற்றைக் காண இரவு நேரங்களில் சீர்காழி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில்2ம் கால யாகசாலை பூஜையில் தர்மபுரம் ஆதீனம் மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
- ஆபதுதாரணர் மாலை என்ற ஆன்மீக நூலை தருமபுர ஆதீனம் வெளியிட்டார்.
- தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் நூலின் விபரங்கள் குறித்து கூறினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
பிரசித்தி பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே உயர்நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயி லுக்கு வருகை புரிந்தார்.
தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
தொடர்ந்து மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சார்பில் அச்சிடப்பட்ட ஆபதுதாரணர் மாலை என்ற ஆன்மீக நூலை தருமபுரம் ஆதீனம் வெளியிட அதனை நீதிபதி மகாதேவன் பெற்றுக் கொண்டார்.ஆன்மீகப் பேரவை நிறுவனர் இராம.சேயோன் உடன் இருந்தார்.
தொடர்ந்து கோயிலுக்கு சென்ற நிதியரசர் மகாதேவன் சுவாமி, அம்பாள், பைரவர் ஆகிய சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்தார்.
அப்போது கோயில் நந்தவனத்தில் கடந்த மாதம் யாகசாலை பூஜைக்காக பள்ளம் வெட்டிய போது கிடைத்த சாமி சிலைகள், தேவாரப் பதிகம் தாங்கி செப்பேடுகள் கோயில் பாது காப்பு அறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதனை நிதிபதி மகா தேவன் பார்வையிட்டார்.
அவருக்கு தருமபுரம் ஆதீனம் அதன் விவரங்கள் குறித்து கூறினார்.
- முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
- ஜபம், ஹோமம் நடைபெற்று, பின்னர் பூர்ணாஹூதி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது.
திருநிலை நாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வ ரர்சுவாமி அருள்பாலி க்கிறார்.
இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சித ருகிறார்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து 8கால யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கியது.
சுவாமி, அம்பாள்,தோணியப்பர்,சட்டைநாதர்,முத்துச்சட்டைநாதர் ஆகிய தெய்வங்களுக்கு நவாக்கினியும், பரிவாரங்கள் சேர்த்து 82 யாக குண்டங்கள் அமைக்க ப்பெற்று,120 வேதவி ற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் தொடங்கியது.முன்னதாக கலாகர்ஷணம், யாத்ராஹோமம், யாகசாலை பிரவேசம் நடந்தது.
பின்னர் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. ஜபம், ஹோமம் செய்து பின்னர் பூர்ணாஹூதி, மகாதீபாரா தனை நடந்தது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.
திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர்தம்பிரான் சுவாமிகள், தமிழ் சங்கத்த லைவர் இ.மார்கோனி, காசாளர் செந்தில், மகாலெட்சுமி அம்மாள், உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- மாணவர்களுக்கு எளிய கணித செயல்பாடுகள், அறிவியல் செயல்பாடுகளை கற்றுக்கொடுத்தனர்.
- மூளைக்கு வேலை, மந்திரமா?தந்திரமா? போன்றவற்றை குறித்தும் கற்றுக்கொடுத்தனர்.
சீர்காழி:
எடமணலில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா அரசினர் உயர்நிலைப்பள்ளி நடைபெற்றது.
இதில் பள்ளி தலைமையாசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர் கார்த்திக் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக ப.தமிழ்ச்செல்வன், பஞ்சாயத்தார் க.அறிவழகன் மற்றும் வார்டு உறுப்பினர் லெட்சுமி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ப.பவஸ்ரீ,ர.ரஞ்சிதா,வி.ரேகா,மு.அலமேலு, கு.கலைவாணி மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வானவில் மன்ற கருத்தாளர் மீனாட்சி குழந்தைகளுக்கு எளிய கணித செயல்பாடுகள், அறிவியல் செயல்பாடுகள், மூளைக்கு வேலை, மந்திரமா? தந்திரமா? போன்றவற்றை மிகவும் சிறப்பான முறையில் கற்றுக் கொடுத்தார்கள்.
முடிவில் தன்னார்வலர் பவஸ்ரீ நன்றி கூறினார்.






