என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதிஉதவி வழங்கப்பட்டது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதிஉதவி வழங்கல்
- மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
- பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிதிஉதவி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் ஒன்றியம், இனையாளூர் ஊராட்சி வடகரை புதுத்தெருவை சேர்ந்த விவசாயி எபி. இவரது வீடு மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட எபி குடும்பத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட தேசிய சட்ட உரிமை கழகம் சார்பில் நிதி உதவி, மளிகை பொருட்களை மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், துணை செயலாளர் வெங்கட்ராமன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சங்கீதா, மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதி என்கிற பாரதிராஜா, நகர மன்ற செயலாளர் மணி கண்ட பிரபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் லியாத்அலி, செம்பை ஒன்றிய செயலாளர் ஜாபர்சாதிக் , ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






