என் மலர்
மதுரை
- காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது.
- இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் பகுதியில் அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தையொட்டி கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொம்மன்பட்டி, கணேசபுரம் ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அமைப்புசாரா மாவட்ட தலைவர் சோனமுத்து தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், நடராஜன், வட்டாரத் தலைவர் சுப்புராயலு, சமயநல்லூர் செந்தில் முன்னிலை வகித்தனர். மதுரை வடக்கு மாவட்ட தலைவர் மணி வரவேற்றார். மாநிலத் தலைவர் மகேசுவரன் கொடியேற்றினர். மாவட்ட நிர்வாகிகள் முருகன், நாராயணன், முத்துமணி, வரிசை முகமது, முகமது இனியா, வீரபாண்டி, ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. அவரது படத்திற்கு மாநிலத் தலைவர் மகேசுவரன் மாலை அணிவித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், நடராஜன், மாவட்டத் தலைவர் சோனை முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- அலங்காநல்லூரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
- சமயநல்லூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை
சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்திலும், அலங்காநல்லூர் துணைமின்நிலை யத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி. கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர்,
அலங்காநல்லூர், சுகர் மில், பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளை யார்நத்தம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
- மேலூர் புலிப்பட்டி-வெள்ளிமலை சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
- அடிப்படை தேவைகளை உடனடியாக மேலூர் யூனியன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் யூனியனைச் சேர்ந்தது புலிப்பட்டி ஊராட்சி. இதனை அடுத்துள்ளது வெள்ளிமலைபட்டி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இங்கிருந்து வள்ளா ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் மற்றும் மேலூர் பள்ளிகளுக்கும், கல்லூரிக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என தினசரி வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் ரோடு சிதிலமடைந்து ஜல்லி கற்களாக பெயர்ந்து கிடக்கிறது.
வெள்ளிமலை பட்டிக்கு தினசரி மேலூரில் இருந்து அரசு டவுன் பஸ் 3 முறை இயக்கப்படுகிறது. தற்போது ரோடு பெயர்ந்து குண்டும், குழியுமாக கிடப்பதால் பஸ்கள் மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அதேபோல் இருசக்கர வாகனங்களை இயக்கவே முடியவில்லை. மேலும் அவசர சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸ் வந்து செல்ல முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
மேலும் புலிப்பட்டி ஊராட்சியில் தெருக்களில் சாக்கடைகள் ரோடுகளில் ஆங்காங்கே செல்கின்றன. இதனால் சுகாதாரக் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு அடிப்படை தேவைகளை உடனடியாக மேலூர் யூனியன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கார் உசிலம்பட்டி-மதுரை மெயின்ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தது.
- பஸ் மோதியதில் நிதீஷ், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேர் மட்டுமின்றி, இருசக்கர வாகனத்தில் வந்த முருகன், பால்பாண்டி உள்ளிட்டோரும் காயமடைந்தனர்.
உசிலம்பட்டி:
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் நிதீஷ். இவர் தனது மனைவி கீது (வயது 33), மகள் நீத்தா(10) ஆகியோருடன் மதுரைக்கு காரில் வந்திருந்தார். பின்பு இன்று காலை அவர்கள் 3 பேரும் காரில் கேரளாவுக்கு திரும்பி சென்றனர்.
அவர்களது கார் உசிலம்பட்டி-மதுரை மெயின்ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் எதிரே வந்தது.
அந்த பஸ் திடீரென எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் கேரள குடும்பத்தினர் சென்ற கார் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் கிராமத்தை சேர்ந்த முருகன், பால்பாண்டி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
கேரள குடும்பத்தினர் சென்ற கார், பஸ் மோதிய வேகத்தில் ரோட்டிற்கு வெளியே சென்றுவிட்டது. இந்தநிலையில் அவர்களது கார் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. காரில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிதீஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் வேகவேகமாக காரில் இருந்து வெளியே வந்தார.
அவர்கள் வெளியே வந்த சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த விபத்து குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீப்பிடிக்க தொடங்கியதும் நிதீஷ், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் உடனடியாக வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பஸ் மோதியதில் நிதீஷ், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேர் மட்டுமின்றி, இருசக்கர வாகனத்தில் வந்த முருகன், பால்பாண்டி உள்ளிட்டோரும் காயமடைந்தனர். அவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் கார்த்திக். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகுலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. கார்த்திக்கிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. மருத்துவரிடம் காண்பித்தும் பலனில்லை.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திக் சம்பவத்தன்று விஷம் குடித்து தல்லாகுளம் பகுதியில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஹார்வி பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுமதி (வயது 25). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுமதி எல்லீஸ் நகரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். வாழ்க்கையில் விரக்திய டைந்த அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கஞ்சா வியாபாரிகளுக்கு போதை மருந்து-ஊசிகள் சப்ளை செய்த மருந்து கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
- இவர்களிடம் இருந்து 215 கிராம் கஞ்சா, 40 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை
மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பகுதியில் கஞ்சா விற்ற ராஜேஷ்குமார் (வயது 23), சுபாஷ் சரவணன் (21), மணிகண்டன் (21), மகாராஜா (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 215 கிராம் கஞ்சா, 40 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கும்பலுக்கு போதை மருந்து, ஊசிகளை யார் சப்ளை செய்து வந்தார்கள் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில், ஆனை யூர் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் சுந்தர்ராஜ் என்பவர் சட்ட விரோதமாக அந்த கும்பலுக்கு போதை மருந்து, ஊசிகளை சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது.
- பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.
மதுரை:
மதுரை விமான நிலையத்திலும் கொரோனா கட்டுபாடுகள் இன்று அமலுக்கு வந்தன. சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு விமானங்கள் வருகின்றன. இந்த நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.
துபாய் விமானத்தில் மொத்தம் 187 பயணிகள் வந்தனர். அவர்களில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.
மதுரை
மதுரையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும் நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மதுரையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
இதற்காக அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மின்விளக்குகள் மற்றும் அலங்கார விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.
நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்க ளுக்கு சென்று இந்த பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.
இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பிரார்த்தனைக்கு செல்பவர் களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரது உத்தரவு பேரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.2,500-க்கு விற்பனையானது.
- கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
மதுரை
உலகம் முழுவதும் வெகுவி மரிசையாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை மதுரையிலும் நாளை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை கடந்த மூன்று நாட்களை ஒப்பிடு கையில் கிலோ 1500 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
இன்று 2500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய் என்று விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகை 2500 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. அது போல பிச்சி மற்றும் முல்லை பூக்கள் கிலோ 1200 ரூபாய்க்கும், அரளி, சம்பங்கி மலர்கள் கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
இது தொடர்பாக மலர் வியாபாரிகள் கூறுகையில் தற்போது பனி அதிகமாக உள்ளதால் மல்லிகைப்பூ வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது. இந்த விலை வருகிற புத்தாண்டு வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற பூக்களின் விலை வழக்கம்போல இருப்பதால் பூ மார்க்கெட்டில் பொது மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி வருகிறார்கள்.
- கிங்-ஐ.சி.ஏ.வின் அக்குபஞ்சர் இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
- அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கி யது.
மதுரை
மதுரை ஆரப்பாளையத்தில் கிங்-ஐ.சி.ஏ. சார்பில் அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பு இன்று (24-ந் தேதி) அதன் நிறுவனர் மும்தாஜ் பேகம் தலைமையில் நடந்தது.
அங்குள்ள ஆனந்த் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் காலை 10.30 மணி பயிற்சி வகுப்பு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கி யது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆண்மைக்குறைவு, பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய், சிறுநீரக நோய், தைராய்டு, குழந்தையின்மை, முதுகு வலி, மலசிக்கல், சைனஸ், தூக்கமின்மை, அஜீரன கோளாறுகள் போன்ற கோளாறுகளை குணப்படுத்திக் கொள்ள அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரசர் முறை கற்றுத்தரப்பட்டது.
இந்த பயிற்சியை டாக்டர்கள் டேனியல் சதீஷ், சிவகாமி, பரிமளக்கண், ஷேக் இப்ராகிம், பானு பிரியா ஆகியோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடு களை கிங்-ஐ.சி.ஏ. செயலாளர் ராஜா முகமது, இயக்குநர்கள் கோபிநாத், ஜான்ஜேம்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
- இன்று 35-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் திரண்டனர்.
மதுரை
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆரின் புகழை பரப்பு வகையில் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி யில் பாடல்களும் ஒலிபரப்பு செய்யப்பட்டன.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அந்த கட்சியினர் பனகல் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.
இதைத்தொடர்ந்து மதுரை கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் பொதுமக்க ளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் எம்.ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப் பட்டன.
மதுரையில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் கே.கே.நகர் ரவுண்டானாவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
- நினைவு தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- ஆரைக்குடி முத்துராம லிங்கம், கீழமாத்தூர் தங்கராஜ், கருப்பு சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
முன்னாள் முதல்வர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மதுரையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணியினர் 3 ஆயிரம் பேர் மாவட்டச்செயலாளர் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் பேரணியாக சென்று மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் பி.எஸ். கண்ணன், முத்து இருளாண்டி, மாண வரணி மாநில இணை செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், சோலை இளவரசன், ராமநாதன், வையதுரைமாரி,மார்க்கெட் ராமமூர்த்தி, வேல்முருகன், ஆரைக்குடி முத்துராம லிங்கம், கீழமாத்தூர் தங்கராஜ், கருப்பு சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






