புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை

புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை
Published on

மதுரை

மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் கார்த்திக். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகுலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. கார்த்திக்கிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. மருத்துவரிடம் காண்பித்தும் பலனில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திக் சம்பவத்தன்று விஷம் குடித்து தல்லாகுளம் பகுதியில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ஹார்வி பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுமதி (வயது 25). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுமதி எல்லீஸ் நகரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். வாழ்க்கையில் விரக்திய டைந்த அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com