என் மலர்
மதுரை
- இணையதளத்தில் குறவன்-குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாசமான வீடியோக்களை நீக்கவேண்டும் என மனுதாரர் கேட்டிருந்தார்.
- குறவன் - குறத்தி என்ற தலைப்பில் ஆபாச நடனத்திற்கு தடை கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டது
மதுரை:
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரணியன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் நடப்பதாகவும், இது குறவர் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும் கூறியிருந்தார். இந்த நடனத்திற்கு தடை விதிக்கவேண்டும், இணையதளத்தில் குறவன்-குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாசமான வீடியோக்களை நீக்கவேண்டும் என கேட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, தமிழகத்தில் குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், 'ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குறவன் சமூக மக்களை பாதிக்கும் விதமாகவோ, இழிவுப்படுத்தும் வகையிலோ இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் விதமாக ஆடலும் பாடலும் நிகழ்ச்சி வீடியோ பதிவுகள் இருந்தால் சைபர் கிரைம் போலீசார் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
- அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.
- தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு திருணமாகி ஓராண்டு ஆகிறது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காளீஸ்வரி கடந்த 3-ந் தேதி பிரசவத்திற்காக உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்கள் 5-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் காளீஸ்வரி வழக்கம்போல் பால் கொடுத்துவிட்டு குழந்தையை உறங்க வைத்துவிட்டு தானும் தூங்கினார். இன்று அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.
இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் உடனே குழந்தையை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குழந்தை எப்படி இறந்தது? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தை இறப்புக்கான காரணம் என்ன? உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- குடும்பத்தினர் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜெயபாண்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் முத்தையன்பட்டியை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் ஜெயபாண்டி (வயது29). அரிசி வியாபாரியான இவருக்கும் திவ்யா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
நேற்று இரவு ஜெயபாண்டி வீட்டில் உணவு அருந்தும் போது திடீரென விக்கல் எடுத்துள்ளது. தண்ணீர் குடித்தும் தொடர்ந்து விக்கல் நிற்கவில்லை. சிறிது நேரத்தில் ஜெயபாண்டி மயங்கி விழுந்தார்.
உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜெயபாண்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறோம்.
- உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வரும் அலங்காநல்லூர் விழாக்கமிட்டியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
இதையொட்டி 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறோம். கடந்த முறை எங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் எங்களது காளைகள் போட்டியில் பங்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு வலைதளம் மூலமாக நாங்கள் பதிவு செய்தோம். அதிலும் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது.
அந்த குளறுபடிகளை நீக்கி உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களது காளைகளும் பங்கு பெறுவதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களது காளைகள் பங்கு பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் திருநங்கைகள் தாங்கள் வளர்த்து வரும் காளைகளும் போட்டியில் பங்கு பெற செய்ய வேண்டும் என்று மனு கொடுத்திருப்பது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மேலூர் ஒன்றிய செயலாளர் கருப்பணன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தில் மேலூர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறேன்.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக நான் முதலிடம் பெற்றேன். ஆனால் அரசு விதிமுறைகளை மீறி ஆள் மாறாட்டம் செய்த வேறு ஒரு நபருக்கு முதலாவது பரிசு அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதனை விசாரித்த நீதிபதி, அலங்காநல்லூர் விழாக்குழு முடிவு எடுத்து எனக்கு பரிசை வழங்கலாம் என தீர்ப்பளித்துள்ளார். ஆனால் இதுவரை பரிசை வழங்கவில்லை.
எனவே மேற்படி உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வரும் அலங்காநல்லூர் விழாக்கமிட்டியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு சேரவேண்டிய முதல் பரிசை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரையில் கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
- கீரைத்துறை, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை தெற்கு வாசல் போலீஸ் சரகத்தில் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை போலீசார் தினமும் ரோந்து சென்று வருகின்றனர். கண்மாய்கரை, ராஜமான் நகரில் ரோந்து சென்றனர். கங்கை அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் காமராஜர்புரம் இந்திரா நகரை சேர்ந்த முத்துக்குமார் மகன் எலி தினேஷ் (வயது 22) என்பது தெரியவந்தது.
இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் வலதுகரமாக திகழ்ந்தவர். எனக்கு நிறைய எதிரிகள் உண்டு. தற்காப்புக்காக அரிவாள் வைத்திருந்தேன்" என்று தெரிவித்தார். ஆயுதங்களுடன் திரிந்த எலி தினேஷை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பட்டி, அழகப்பன் நகரை சேர்ந்தவர் செல்வம் (45), ஆட்டோ டிரைவர். நேற்று இவர் சோலையழகுபுரம் தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் மது குடிக்க பணம் கேட்டார். செல்வம் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த வாலிபர், 'கத்தியால் குத்தி விடுவேன்' என்று மிரட்டி, செல்வத்தின் சட்டைபையில் இருந்த ரூ.385-ஐ பறித்து தப்பினார்.
இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலையழகுபுரம், இந்திரா நகரை சேர்ந்த ஆட்டோ பிரவீன் (32) என்பவரை கைது செய்தனர். அவர் மீது அவனியாபுரம், ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
- மதுரை தியேட்டர்களில் அஜித்-விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
- மேளதாளம் முழங்க கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடந்தது.

காளவாசலில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் கோஷமிட்டபடி மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர்.
மதுரை
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு, நடிகர் விஜய் நடித்த வாரிசு ஆகிய 2 திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் திரை யரங்குகளில் இன்று அதி காலை ரிலீஸ் செய்யப்பட்டது.
மதுரையில் 19 தியேட்டர் களில் துணிவு திரைப் படமும்,14 தியேட்டர்களில் வாரிசு திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் துணிவு சிறப்பு காட்சிகள் தொடங்கின.முதல் காட்சியை காண தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் கூட்டம் களை கட்டியது.பட்டாசு வெடித்து கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து மேளதாளம் முழங்க ரசகர்கள் ஊர்வலமாக வந்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அதே நேரத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணியளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் அதிகாலையில் விஜய் ரசிகர்களும் திரளாக பங்கேற்று தியேட்டர்களில் குவிந்தனர்.பின்னர் பட்டாசு களை வெடித்து மேள தாளம் முழங்க ரசிகர்களை வரவேற்று அவர்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டன.
ரசிகர்களின் இந்த வெற்றி கொண்டாட்டத்தால் மதுரை தியேட்டர்களில் ரசிகர் களின் ஆரவாரங்களால் விசில் சத்தம் பறந்தது. ஒரே தியேட்டர்களில் அஜித்- விஜய் படங்கள் திரையிடப்பட்டுள்ளதால் ரசிகர்களின் மோதலை தவிர்க்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வரை இந்த 2 திரைப்படங் களுக்கும் சிறப்பு காட்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது .துணிவு, வாரிசு திரைப்படங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆயிரம் ரூபாயை தாண்டி டிக்கெட்டுகள் ரசிகர் களுக்கும் பொது மக்களுக்கும் கொடுக்கப்படு வதாக தெரிய வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட தியேட்டர்களை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுதவிர ரசிகர் மன்ற காட்சிகள் என்ற பெயரில் ரசிகர் மன்றங்கள் அதிக அளவில் டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாகவும் புகார் இருந்து உள்ளது.இதனால் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை பொதுமக்கள் பொங்கலுக்கு வழக்கமான கட்டணத்தில் திரையில் பார்ப்பதில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் திரையிடப்பட்டன. அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து இன்று துணிவும், வாரிசும் திரைக்கு வந்து உள்ளது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சி யுடனும், ஆரவாரத்துடனும் கொண்டாட தொடங்கி உள்ளனர்.
- அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற பொங்கல் தினத்தன்று (15-ந்தேதி) நடைபெற உள்ளது.
மதுரை
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற பொங்கல் தினத்தன்று (15-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துகிறது. அதற்கான பணிகள் தொடங்கியது.
தடுப்பு கம்புகள் ஊன்றும் பணி நடைபெற்று வந்த நிலையில் காளைகளுக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், வாடிவாசல் மற்றும் மாடுகள் வெளியே செல்லும் ''கலெக்சன் பாயிண்ட்'' உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் எவ்வாறு நடைபெற வேண்டும்? என்பது குறித்து இன்று கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வாடிவாசலின் இரு புறமும் தடுப்பு கம்புகள் கட்டும் பணியை, கலெக்சன் பாயிண்ட் வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஆய்வில் கலெக்டருடன் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன், மாநகர போலீஸ் துணை ஆணையாளர் (தெற்கு) சாய் பிரனீத், உதவி ஆணையாளர் செல்வ குமார், இன்ஸ்பெக்டர் சந்திரன், மாநகராட்சி உதவி ஆணையாளர் சையது முஸ்தபா கமால், உதவி பொறியாளர் செல்வ நாயகம், சுகாதார ஆய்வாளர் வனஜா, மண்டத் தலைவர் சுவிதா விமல், கவுன்சிலர் கருப்புசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அவனியாபுரம்- முத்துப்பட்டி சந்திப்பில் இருந்து வாடிவாசல், வீரர்களுக்கு சோதனை செய்யுமிடம், மருத்துவ பரி சோதனை மேற்கொள்ளும் இடம், கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் சுமார் 2 கி.மீட்டர் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டி யில் நடைபெற்ற குளறுபடிகள், உயிரிழப்புகள் மீண்டும் நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் துணை கமிஷனர் ஆகியோர் உத்தரவிட்டனர்.
- மதுரை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பேன்.
- புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.
மதுரை
மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் பொறுப்பேற்றுக் கொண் டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து நரேந்திரன் நாயர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
பேசும் போது, மதுரை மாநகரில் மக்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்று வேன், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல், மற்றும் சித்திரை திரு விழாவை கொண்டாட மாநகர காவல்துறை பாதுகாப்பு அளிக்கும், மாநகரில் ரவுடிசம், கஞ்சா குற்றச்சம்பவங்களை முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தால் செயல்படுத்தபடும் அனைத்து திட்டங்களும் மேம்படுத்தப்பட்டு செயல் படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் நாயர், 2005-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் ஈரோடு, கமுதி, வந்தவாசி, சிதம்பரம் ஆகிய இடங்களில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி, 2009-ம் ஆண்டு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.பி.யாக தூத்துக்குடியிலும், எஸ்.பி.யாக திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங்க ளிலும் , கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் துணை ஆணையராகவும், ஆளு நரின் பாதுகாப்புப்பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும் , கேரளா மாநிலத்தில் ஐ.பி.பிரிவு எஸ்.பி.யாகவும் நரேந்திரன் நாயர் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற நரேந்திரன் நாயர் சென்னை தலைமையிட டி.ஐ.ஜி. பணியாற்றிய பின்னர், கோவை சரக டி.ஐ.ஜி.யாகவும் பணி புரிந்தார். அதன் பின்பு சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்து வந்தார்.
- மதுரை அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவப்பு நாடா சங்கம் சார்பில் நடந்தது.
மதுரை
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவப்பு நாடா சங்கம் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மல்லிகா தலைமை வகித்தார். முத்தமிழ் மன்ற தலைவர் சங்கரலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். உதவிப் பேராசிரியை சங்கீதா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேவகி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பி.எஸ். நாகேந்திரன் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் மது, புகையிலை, சிகரெட், வெற்றிலை, பாக்கு என எந்த போதைப் பொருள்களுக்கும் அடிமையாகிவிடக் கூடாது. போதைப் பொருள்களுக்கு அடிமையானால் மனநல பாதிப்பு, இதயம், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்ற உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வாழ்க்கை அழிவுப்பாதைக்கு சென்றுவிடும். ஆகையால் மாணவர்கள் விழிப்புணர்வுடன் உண்மை, உழைப்பு, உயர்வு ஆகியவற்றை மட்டும் மனதில் வைத்து செயல்படுங்கள் என்றார்.
நிகழ்ச்சியில் நடந்த வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் நாகேந்திரன் பரிசுகள் வழங்கினார். உதவிப் பேராசிரியை கோதைக்கனி நன்றி கூறினார்.
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களுடன் மதுரை மேலவெளி வீதியில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
மதுரை
பொங்கல் பண்டிகையை யொட்டி மதுரை அலங்காநல்லூரை அடுத்த குறவன்குளம் கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் வருகிற 15-ந் தேதி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா பயணிகளும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக அவர்கள் மதுரை சுற்றுலா அலுவ லகத்தில் இருந்து 15-ந் தேதி காலை தனி பஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். குறவன்குளம் கிராமத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு கிராம மக்களுடன் இணைந்து சுற்றுலா பயணி கள் பொங்கல் வைக்கும் முறையை நேரடியாக கண்டு மகிழலாம். இதனைத்தொடர்ந்து பரதம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
அலங்காநல்லூரில் 17-ந் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும் சுற்றுலாப் பயணிகள் பஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம். மதுரை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் 15, 17-ந் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களுடன் மதுரை மேலவெளி வீதியில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 22-ந் தேதி தெப்பத்திருவிழா தொடங்குகிறது.
- தெப்பத்திருவிழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். தெப்பத்திருவிழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக தை கார்த்திகை அன்று தெப்பம் தள்ளுதல், தேரோட்டம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப மிதவையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளுவார்.
அங்கு காலை, இரவில் தெப்ப மிதவையில் இணைக்கப்படும் வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தினை 3 முறை சுற்றி வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 22-ந் தேதி தெப்பத்திருவிழா தொடங்குகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி தேரோட்டமும், சிகர நிகழ்ச்சியாக 31-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
- பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- 16 வயது மாணவி அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மைக்குடியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். மைக்குடியை சேர்ந்த அஜித்(எ)அழகு பாண்டி (வயது21) என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்ளவதாக கூறி அவரை தொந்தரவு செய்து வந்தார்.
இது குறி்த்து மாணவியின் தாய் கொடு்த்த புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து வாலிபர் அஜித்(எ)அழகுபாண்டியை தேடி வருகின்றனர்
திருமங்கலத்தை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கப்பலூர் சின்னகாமன் மகன் கார்த்திக்(20) என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதனால் மாணவி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






