search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா
    X

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 22-ந் தேதி தெப்பத்திருவிழா தொடங்குகிறது.
    • தெப்பத்திருவிழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். தெப்பத்திருவிழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக தை கார்த்திகை அன்று தெப்பம் தள்ளுதல், தேரோட்டம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப மிதவையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளுவார்.

    அங்கு காலை, இரவில் தெப்ப மிதவையில் இணைக்கப்படும் வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தினை 3 முறை சுற்றி வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 22-ந் தேதி தெப்பத்திருவிழா தொடங்குகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி தேரோட்டமும், சிகர நிகழ்ச்சியாக 31-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.

    Next Story
    ×