என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலம் அருகே தொடர் விக்கலால் புதுமாப்பிள்ளை பரிதாப பலி
    X

    திருமங்கலம் அருகே தொடர் விக்கலால் புதுமாப்பிள்ளை பரிதாப பலி

    • குடும்பத்தினர் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜெயபாண்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் முத்தையன்பட்டியை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் ஜெயபாண்டி (வயது29). அரிசி வியாபாரியான இவருக்கும் திவ்யா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    நேற்று இரவு ஜெயபாண்டி வீட்டில் உணவு அருந்தும் போது திடீரென விக்கல் எடுத்துள்ளது. தண்ணீர் குடித்தும் தொடர்ந்து விக்கல் நிற்கவில்லை. சிறிது நேரத்தில் ஜெயபாண்டி மயங்கி விழுந்தார்.

    உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜெயபாண்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×