என் மலர்tooltip icon

    மதுரை

    • திருமங்கலம் அருகே சாலையோர சருகுகளில் ஏற்பட்ட தீ குடியிருப்பு பகுதியில் பரவியது.
    • இந்த சம்பவம் திருமங்கலத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருமங்கலம்

    திருமங்கலம் - மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் சுங்குராம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே தரிசு நிலங்கள் உள்ளன.

    தரிசு நிலத்தில் கிடந்த காய்ந்த சருகுகளில் நேற்று இரவு திடீரென்று தீப் பிடித்தது. மளமளவென பரவிய தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதி வரை பரவியது. இதனால் பொது மக்கள் பீதியடைந்தனர்.

    இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் ஆர்.ஐ. அருண், வடகரை வி.ஏ.ஓ.ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் திருமங்கலத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சாப்டூரை சேர்ந்தவர் சதீஷ்(வயது36). இவரது மனைவி ஜெயமுத்து(27). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக ஜெயமுத்து வுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலிக்கு சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கணவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சதீஷ் வெளியில் சென்று விட்டு சிறிது நேரத்தில் வந்து அழைத்துச் செல்கி றேன் என கூறிவிட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாழ்க்கையில் வெறுப் படைந்த ஜெயமுத்து விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் பேரை யூர் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • திருக்கல்யாணம் முடிந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர்.
    • அன்றைய தினம் காலை 4 மணி முதல் இரவு சுவாமி கோவிலை வந்தடையும் வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா அடுத்த மாதம் 8-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    அங்கு திருக்கல்யாணம் முடிந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர். எனவே அன்றைய தினம் காலை 4 மணி முதல் இரவு சுவாமி கோவிலை வந்தடையும் வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். மேலும் பக்தர்கள் ஆடி வீதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை காண வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உசிலம்பட்டி, மேட்டுப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு வேன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
    • மேட்டுப்பட்டி-தாழையூத்து ரோட்டில் சென்றபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் பயங்கரமாக மோதியது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இன்று காலை மாணவ-மாணவிகளை அழைத்துவர பள்ளி வேன் புறப்பட்டு சென்றது. வேனை அதே பகுதியை சேர்ந்த சாந்த குமார் என்பவர் ஓட்டினார். கிளீனரான டி.கரிசல்பட்டியை சேர்ந்த போதராஜ் (50) உடன் சென்றார்.

    உசிலம்பட்டி, மேட்டுப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு வேன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பட்டி-தாழையூத்து ரோட்டில் சென்றபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் முன்னால் அமர்ந்திருந்த போதராஜ் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். வேனில் பயணித்த உசிலம்பட்டியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர் கிஷோர், எல்.கே.ஜி. மாணவி பர்வினாஸ்ரீ உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் லேசான காயம் அடைந்தனர்.

    உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக சிந்து பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவர் சாந்த குமாரை தேடி வருகின்றனர்.

    • பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும்.
    • போராட்டம் நீடித்தால் குழந்தைகளுக்கு பால் கிடைக்காது.

    மதுரை

    தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி இன்று முதல் ஆவினுக்கு பால் நிறுத்த போராட்டம் நடத்தப்பட இருப்பதாக பால் உற்பத்தி யாளர்கள் அறிவித்துள்ளனர்.

    பராமரிப்பு செலவு அதிகரித்து இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதால், ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமைப்பாலுக்கு 51 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் போராடி வருகிறார்கள்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பத்தாண்டுகளில், பால் தட்டுப்பாடு என்றால் என்ன என்ற நிலை இருந்தது. தற்போது மாறி, இன்றைக்கு மக்கள் குடிப்பதற்கு பால் இல்லாத ஒரு அவல நிலை தி.மு.க. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    அம்மாவின் ஆட்சிக்கா லத்திலும் சரி, எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் சரி, 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக, ஒரு நாளைக்கு தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில் பாலின் தரத்தை குறைத்தும், அதிக அளவில் இருக்கும் பாலுக்கு 12 ரூபாயாக உயர்த்தியும், இரண்டாம் ரகமாக விற்கும் பாலில் கொழுப்பு சத்தை ஒரு சதவீதம் குறைத்ததும், ஆவின் பொருள்களின் தயிர், மோர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பால் பவுடர் போன்ற இதர பொருள்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, தனியார் நிறுவனங்கள் பயன டைய வழிவகை செய்ததும், 50 சதவீதத்திற்கு மேல் முக வர்களுக்கு பால் சப்ளையை குறைத்ததும், முக்கியமாக பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதலை குறைத்ததால், இதன் கார ணமாக பால் உற்பத்தி யாளர்கள் தனியார் நிறுவ னங்களுக்கு தங்களுடைய பாலை விற்க தொடங்கி இருக்கிறார்கள்.

    இது போன்ற கார ணங்களால் தமிழக முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த பால் உற்பத்தியாளர் அறி விப்பு கொடுத்திருக்கிறார்கள்.

    ஆகவே இந்த நிலை தொடர்ந்தால், பச்சிளங் குழந்தைகள் குடிப்பதற்கு கூட பால் இல்லாத நிலை ஏற்படும் என்பதை அரசு அறிந்திருக்கிறதா? என்பது தான் இன்றைய வேதனை யான கேள்வியாக இருக்கிறது.

    ஆவின் பால் தட்டு பாட்டால் மக்கள் கவலையில், துயரத்தில், வேதனையில் இருக்கிறார்கள். தி.மு.க. அரசு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது தொடர்பான புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கூடல் புதூர் பொதிகை நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் குமர வடிவேல். இவரது மகள் ஹரிணி (வயது16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் ஹரிணி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். அவர் சரியாக தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது. அவர் இது தொடர்பாக குடும்பத்தி னரிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் ஹரிணி சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை அண்ணாநகர், கோமதிபுரம், வித்தகர் தெருவை சேர்ந்தவர் பேபி பாலசுப்ரமணி(வயது26). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லா மல் இருந்து வந்தார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர் பான புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா-லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் போலீசார் ஜம்புராபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆஸ்பத்திரி அருகே வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவரிடம் 3 லாட்டரி சீட்டுகள் இருந்தன. அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள், 2 ஏ.டி.எம். கார்டு, ரூ.4075 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை கீரைத்துறை போலீசார் காமராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இந்திரா நகரில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அண்ணா மேலவீதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அதேபகுதியில் வசிக்கும் கணேசன் மகன் பிரேம்குமார்(வயது22) என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கீரைதுறை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை அனுப்பானடி பஸ் நிலையம் அருகே 100 கிராம் கஞ்சாவுடன் சுந்தர்ராஜபுரம், ரகுராமன் மனைவி பஞ்சு(32) என்பவரை போலீசார் பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை வழியாக செல்லும் 3 ரெயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • வருகிற 24-ந்தேதி நாகர்கோ விலில் இருந்து புறப்பட வேண்டிய எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12668) ஆகியவை விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.

    மதுரை

    திருவனந்தபுரம் கோட்டத்தில் மேலப்பாளை யம்-நாங்குநேரி இடையே இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் தாம்பரத்தில் இருந்து நாளை (18-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை புறப்படும் நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் (20691) மற்றும் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா ரெயில் (20692) ஆகியவை நெல்லை- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும்.

    அதேபோல திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி விரைவு ரெயில்கள் (22627/22628) இரு மார்க்கங்களிலும் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். திருவனந்த புரம் இண்டர்சிட்டி ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும். அதேபோல வருகிற 22-ந்தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை விரைவு ரெயில் (22657) மற்றும் நாகர்கோவிலில் இருந்து வருகிற 23-ந்தேதிபுறப்படும். தாம்பரம் வாரம் மும்முறை சேவை ரெயில் (22658) ஆகியவை விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும்.

    இதேபோல சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 23-ந்தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12667) மற்றும் வருகிற 24-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12668) ஆகியவை விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.

    • மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறி யாளர் பிரபா கரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்ட லத்துக்குட்பட்ட திண்டு க்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் தேனிமின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது குள்ளபுரம், வைகை டேம், பாளையம், கோட்டூர், கோழையனூர், வீரபாண்டி, காமாட்சிபுரம், வேப்பம்பட்டி, உத்தமபாளையம், அங்கூர்பாளையம், கம்பம், எச்.என்.பட்டி, ஆண்டி ப்பட்டி, மார்கேயன் கோட்டை மற்றும் பெரிய குளம் உள்பட 18 இடங்களில் மின்திருட்டு கண்டறி யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கை யாளர்களிடம் ரூ. 24 லட்சத்து 57 ஆயிரத்து 325 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட வாடிக்கை யாளர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் அபராதம் பெறப்பட்டது.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ. 26 லட்சத்து 7 ஆயிரத்து 325 அபராதம் பெறப்பட்டுள்ளது.

    மதுரை மண்டலத்தில் எவரேனும் மின் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறியாளர் செல்போன் எண் 94430-37508 மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று

    மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப்பிரிவு செயற்பொறி யாளர் பிரபா கரன் தெரிவித்துள்ளார்.

    • அலங்காநல்லூர் அருகே புதிய ரேஷன் கடையை வெங்கடேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • செயல் அலுவலர் ஜீலான் பானு, துணை சேர்மன் சுவாமிநாதன், நகர் செயலாளர் ரகுபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி ஊராட்சி வைகாசிபட்டி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    அய்யூர் கூட்டுறவு சங்க தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பழனிநாதன், ஒன்றிய கவுன்சிலர் விமலாதேவி தயாளன், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், விவசாய அணி நடராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு புதிதாக வழங்கப்பட்ட 9 பேட்டரி வாகனங்களையும், வெங்கடேசன் எம்.எல்.ஏ. கொடியசைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் ஜீலான் பானு, துணை சேர்மன் சுவாமிநாதன், நகர் செயலாளர் ரகுபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி பகுதியில் சில தினங்களுக்கு முன்பு 5-க்கும் மேற்பட்ட கூரை கடைகள் தீ பற்றி எரிந்தன.

    இதனை பார்வையிட்ட வெங்கடேசன் எம்.எல்.ஏ. கடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் தி.மு.க. அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், துணைச் சேர்மன் ராமராஜ், நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மக்களின் பாதுகாப்பு-நம்பிக்கைக்கு உரிய அரசாக தி.மு.க. இல்லை என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டினார்.
    • இதனால் பால் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலா ளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கட்சியினருக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கேடாக உள்ளது. காவல் நிலையத்தில் சென்று தாக்கும் சம்பவம் தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது. இந்த அரசு மக்களின் பாதுகாப்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய அரசாக இல்லை.

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பின்பு தமிழகத்தில் புதிய தடுப்பணைகள் மற்றும் புதிய திட்டங்கள் ஏதும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் வைகை அணை, குண்டாறு சீரமைத்தல் உள்ளிட்ட எந்த ஒரு புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை.

    ஆவின் நிறுவனமும் மக்களுக்கு தேவையான பால் பொருட்களை வழங்குவதில் சிரமப்படுகிறது. இதனால் பால் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமிழக அரசிடம் வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கும் எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பகுதி துணைச்செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் பொன்.முருகன், நாகரத்தினம், பாலமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
    • சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுமைக்கும், உடல் இயக்க குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மற்றும் மன வளாச்சி குன்றியோர்களுக்கு கல்விக்காக, பணிபுரிவ தற்காக, பயிற்சிபுரிவதற்காக மற்றும் பயனுள்ள கார ணத்திற்காக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவ னத்திற்கு சென்று வர இலவச பஸ் பயண சலுகை பெற்று பயனடையும் வித மாக சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

    பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 23, 24-ந்தேதியும் இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

    ஏற்கனவே இலவச பயண அட்டை பெற்றுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ் போட்டோ, பழைய பஸ் பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் மேற்கண்ட தேதிகளில் மதுரை எல்லீஸ் நகர், அன்சாரி நகர் 7-வது தெருவில் அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ. மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளியில் நடைபெறவுள்ள இலவச பஸ் பயண சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×