என் மலர்
மதுரை
- மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் சிறுவர்கள்-வாலிபர்கள் திரண்டனர்.
- நீண்ட வரிசையில் வயது வித்தியாச மின்றி அனைவரும் காத்திருந்தனர்.
மதுரை
மதுரை தல்லாகுளத்தில் மாநகராட்சியின் நீச்சல் குளம் உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த நீச்சல்குளம் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
புதுபொலிவுடன் காணப்படும் இந்த நீச்சல்குளத்தில் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து குளித்து சென்றனர். இங்கு குளிப்பதற்கு சிறுவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 40 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த கட்டணத்தை செலுத்தி தினமும் ஏராளமானோர் குளித்து வந்தனர்.
இந்நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயில் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்க சிறுவர்கள், வாலிபர்கள் நீர்நிலைகளுக்கு சென்று நீண்ட நேரம் நீராடி மகிழ்கின்றனர்.
அதிலும் மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு வருகின்றனர். விடுமுறை தினமான இன்று இன்று ஏராளமான சிறுவர்கள், வாலிபர்கள் திரண்டனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் நுழைவு கட்டண சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் வயது வித்தியாச மின்றி அனைவரும் காத்திருந்தனர்.
வாலிபர்களும், சிறுவர்க ளும் நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.
- 25 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தனர்.
மதுரை
மதுரை திருப்பாலையை அடுத்துள்ள மேனேந்தல் மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால பொதுவாழ்வு மற்றும் அரசியல் பயணம் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
இதில் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை காண வரும் மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கும் வகையில் அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது.
மிசா காலத்தில் மு.க. ஸ்டாலின் சிறையில் பட்ட துன்பங்களை காணும் வகையில் சிறைச்சா லைக்குள் அவரை போலீ சார் தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.
மாணவ- மாணவிகள் மற்றும் குழந்தைகள் கண்காட்சியை பார்வையிட்ட பிறகு பொழுது போக்கு வதற்காக மைதானத்தில் ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு ஸ்டால்கள், குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், இந்த புகைப்பட கண்காட்சி வருங்கால இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும்போது வாரிசு அரசியலுக்கு இடமில்லை. உழைப்பால் உயர்ந்தவர் முதல்வர் என்பது தெரிகிறது என்றார்.
அமைச்சர் மூர்த்தி கூறுகையில், 10 நாட்கள் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட உள்ளனர். இன்று மாலை 5 மணி அளவில் நடிகர் வடிவேல் பார்வையிட உள்ளார். 25-ந் தேதி மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை காண வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி மதுரை வடக்கு, மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடை பெறுகிறது என்றார்.
திறப்பு விழாவில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி எம்.எல்.ஏ. மணிமாறன், எம்.எல்.ஏ. க்கள் சோழவந்தான் வெங்கடேசன், புதூர் பூமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன்.முத்து ராமலிங்கம், உயர்மட்ட செயல் திட்ட குழு உறுப்பி னர் குழந்தைவேல்,மாநில தீர்மானக் குழு உறுப்பினர் அக்ரி.கணேசன்.
பொதுக்குழு உறுப்பினர் உசிலை சரவண குமார், மகிழன், அவைத் தலைவர்கள் பாலசுப்ர மணியன், ஒச்சுபாலு, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி, வக்கீல் கலாநிதி, இளைஞரணி மாநில இணைச்செயலாளர் ஜி.பி. ராஜா, மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டி.
பகுதி செயலாளர்கள் சசிகுமார், ஈசுவரன், கிருஷ்ணபாண்டி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், வேட்டையன், இளைஞரணி மூவேந்திரன், வைகை மருது, மதி வெங்கட், அரசு வக்கீல் ஸ்ரீதர், பேரூர் தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ரேணுகா ஈசுவரி, மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார், முகேஷ் சர்மா, கவுன்சிலர்கள் வக்கீல் குட்டி என்ற ராஜரத்தினம், கருப்புசாமி, ரோகிணி பொம்மதேவன் மற்றும் அமெரிக்கன் கல்லூரி, யாதவா் கல்லூரி, லேடி டோக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தனர்.
- காவல் நிலையத்தில் 2, 3 நாட்களுக்கு முன்பு நடந்த தி.மு.க.வினரின் சம்பவங்களை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
- சட்டம்-ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும்.
திருமங்கலம்:
திருமங்கலத்தில் உள்ள வீட்டில் முன்னாள் எம்.பி. சித்தனை இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-
காவல் நிலையத்தில் 2, 3 நாட்களுக்கு முன்பு நடந்த தி.மு.க.வினரின் சம்பவங்களை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல. சட்டம்-ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும். அதற்கு முதல் உரிமை கொடுக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளது.
மத்திய அளவில், அகில இந்திய அளவில் பா.ஜ.க. வலுவான நிலையில் இருக்கிற காரணத்தால் பெரும்பாலான மாநிலங்களில் வலுவோடு வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் தேர்தலை சந்தித்து இந்த முறை நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிவிப்பு அந்த கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வருகிற நாட்களில் இந்த கூட்டணி வலுப்பெறுவதற்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணி தொடர்பாக நாங்கள் மையக்குழுவில் எங்களது கருத்துக்களை தெரிவிப்போம்.
- ஒரு முடிவை மாற்ற வேண்டும் என்றால் அது மத்தியில் இருக்கும் பா.ஜனதாதான் முடிவு செய்யும்.
மதுரை:
பா.ஜனதா தேசிய செயலாளரும், மூத்த நிர்வாகியுமான எச்.ராஜா டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் அரங்கத்திற்குள் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் தலைவர் அவ்வாறு பேசினார், இவ்வாறு பேசினார் என்று வதந்தி பரவி கொண்டிருக்கிறது. அதனை பொருட்படுத்த வேண்டாம். அவை முறையாக கூறப்பட்ட தகவல் அல்ல. அவர்கள் சொன்னதாக கசிந்த வார்த்தைகள்.
கூட்டணி தொடர்பாக நாங்கள் மையக்குழுவில் எங்களது கருத்துக்களை தெரிவிப்போம். எங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்களே முடிவு செய்து அறிவித்தாலும் அதனை செயல்படுத்துவது தான் எங்கள் கடமை.
கூட்டணி குறித்து உறுதியான முடிவுகள் அறிவிக்கும் வரை பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் பொது வெளியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்.
சமீபத்தில் நான் டெல்லிக்கு செல்ல கோவை விமான நிலையத்தில் காத்திருந்தபோது அங்கு எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோரை பார்த்து பேசினேன். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஒரு முடிவை மாற்ற வேண்டும் என்றால் அது மத்தியில் இருக்கும் பா.ஜனதாதான் முடிவு செய்யும். இது மாநிலத்தில் உள்ள தலைவர்களோ, நிர்வாகிகள் குழுவோ முடிவு செய்ய முடியாது. எங்கள் கருத்துக்களை மத்திய குழுவிடம் சொல்லலாம்.
தி.மு.க. உடைந்த பானை. இனி ஒட்டாது. தி.மு.க. தமிழகத்தில் ஒரு கட்சியாக இருக்காது. பல்வேறு கட்டங்களில் விரிசல் ஏற்படும். தி.மு.க.வின் டி.என்.ஏ. மாறிவிட்டது. கருணாநிதிக்கு பிறகு தலைவர் சொல்வதற்கு கட்டுப்படும் நிலை இல்லை. இதனை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரம் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- தவணை தவறிய கடன் தொகைக்கான வட்டி-அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிற.
- சலுகை காலம் 3.3.2023-ல் இருந்து 6 மாதங்களுக்கு அதாவது 2.9.2023 வரை மட்டும் அமலில் இருக்கும்.
மதுரை
மதுரை மண்டல துணை பதிவாளர் (வீட்டுவசதி) வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்று தவணை செலுத்த தவறிய கடன்தாரர்கள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தின் கீழ், செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி முழுவதும் செலுத்தும்பட்சத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். அதற்கான சலுகை காலம் 3.3.2023-ல் இருந்து 6 மாதங்களுக்கு அதாவது 2.9.2023 வரை மட்டும் அமலில் இருக்கும்.
அதன் பிறகு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்காது என அரசு அறிவித்துள்ளது. எனவே தவணை தவறிய அனைத்து உறுப்பினர்களும் இச்சலுகையை தவறாமல் பயன்படுத்தி அசல் மற்றும் வட்டியினை மட்டும் செலுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
மேலும், இச்சலுகை தொடர்பாக விவரங்களுக்கு தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
- மண்டல தலைவர் டி.எஸ். மைக்கேல்ராஜ் தலைமை தாங்குகிறார்.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம் செல்லூர் கண்மாய்கரை ரோடு லூர்து அன்னை பேப்பர் ஸ்டோர் வளாகத்தில் நாளை(19-ந் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது.
மண்டல தலைவர் டி.எஸ். மைக்கேல்ராஜ் தலைமை தாங்குகிறார். தங்கராஜ், சில்வர்சிவா, குட்டி என்ற அந்தோணிராஜ், ஸ்வீட்ராஜன், ஜெயகுமார், தேனப்பன், வழக்கறிஞர் கண்ணன், சூசை அந்தோணி முன்னிலை வகிக்கின்றனர்.
ஆன்லைன் வர்த்த கத்துக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் சுதேசி வணிகத்தை வலியுறுத்தும் வணிகர் தின சிறப்பு மாநாடு சென்னையில் நடத்துவது குறித்து ஆலோசனை பெறப்படுகிறது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நிர்வாகிகள் சுருளி, ஆனந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், பிச்சைப்பழம், சரவணன், தேனப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம் என்று மதுரை மண்டல தலைவர் டி.எஸ். மைக்கேல்ராஜ் தெரிவித்தார்.
- இரவு நேர பஸ்கள் குறைப்பால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
- இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?
மதுரை
மதுரையின் மையப் பகுதியில் பெரியார் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ரெயில் நிலையமும் உள்ளது. வெளி யூரில் இருந்து பல்வேறு பணி நிமித்தமாக வரும் பயணிகள் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம் சென்று பல்வேறு இடங்களுக்கு செல்வார்கள். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் ஆரப்பாளையம் மற்றும் பெரியார் பஸ் நிலையங்களுக்கு சில பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் சில நாட்களில் இரவு திருமங்கலத்துக்கு 4 பஸ்கள் இயக்கப்படுவதற்கு பதிலாக ஒரு பஸ் மட்டுமே இயக்கப்ப டுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதனால் பெரியார் பஸ் நிலையத்தில் பயணிகள் அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்து இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு வழியின்றி ஆட்டோக்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். அப்போது சில ஆட்டோ டிரைவர்கள் முதலில் ஒரு தொகையை கூறுகின்றனர். பின்னர் கூடுதல் தொகையை கேட்கின்றனர்.
இது பற்றி கேட்டால் தாங்கள் சொல்வது தான் சரியான தொகை என்று அடம்பிடித்து பணத்தைப் பெற்றுச் செல்கின்றனர். இப்படி தில்லு முல்லு செய்யும் ஆட்டோ டிரைவர்களால் மற்ற ஆட்டோ டிரைவர்களின் பெயரும் கெடுகிறது.
எனவே இது போன்ற அடாவடியில் ஈடுபடும் ஆட்டோ டிரைவர்களை சங்க நிர்வாகிகள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.மேலும் பயணிகள் நலன் கருதி இரவு நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
திருமங்கலத்துக்கும் தேவையான அளவில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை
- பா.ஜ.க. தலைவர் சொந்த செலவில் பொது சேவை செய்தார்.
- காளிதாசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை
மதுரை அவனியாபுரம், இந்திரா நகர், 100-ம் வார்டில் உள்ள போக்கு வரத்து சாலைகளில், கழிவு நீர் குப்பைகள் கொட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்தன.
எனவே அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள், இது தொடர்பாக மாநகராட்சிக்கு புகார் கொடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.
இந்த விஷயம் பா.ஜனதா நிர்வாகிகள் கவனத்திற்கு வந்தது. அப்போது பா.ஜ.க. மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ், சொந்த செலவில் போக்குவரத்து ரோட்டில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவது என்று முடிவு செய்தார்.
எனவே அங்கு உடனடியாக ஜே.சி.பி எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதன் மூலம் அவனியாபுரம் சாலையில் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
மதுரை அவனியாபுரத்தில் சொந்த செலவில் ஜே.சி.பி. எந்திரம் வைத்து போக்குவரத்து சாலையை சுத்தம் செய்த பா.ஜ.க. தலைவர் காளிதாசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா தொடங்குகிறது.
- ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலை மையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா இந்த ஆண்டு வருகின்ற 26-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது.
விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம் நாள் கை பார திருவிழா கொண்டாடப் படும். வெள்ளி யானை வாகனத்தை பக்தர்கள் தங்கள் உள்ளங்கைகளின் ஏந்தியபடி வலம் வருவார்கள்.
தொடர்ந்து ஏப்ரல் 5-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெறும். 6-ந்தேதி திருப்பரங்குன்றம் சன்னதி தெரு பகுதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து மீனாட்சியம்மன், சொக்க நாதருடன் பிரியாவிடை ஆகியோர் மதுரையிலிருந்து புறப்பாடாகி திருப்பரங் குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருள்வார்கள். அங்கு மீனாட்சியம்மன், சொக்கநாதர் பிரியாவிடை முன்னிலையில் சுப்பிர மணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ந்தேதி பெரிய வைர தேரோட்டம் நடைபெறும். விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 5 மணி அளவில் தேரில் எழுந்தருள்வார்.
தேரோட்டம் திருப்பரங் குன்றம் கிரிவலப்பாதை வழியாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருப்பரங்குன்றம் வயல்வெளி பகுதிகளில் தேர் வரும் காட்சி கண் கொள்ளாக்காட்சியாக இருக்கும்.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலை மையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- மதுரை விரகனூரில் அப்பலோ டயக்னாஸ்டிக்ஸ் திறப்புவிழா நடந்தது.
- இந்த மையத்தில் 7 நாட்களுக்கு இலவச ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.
மதுரை
மதுரை விரகனூரில் அப்பலோ டயக்னாஸ்டிக்ஸ் ரத்த பரிசோதனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. டாக்டர் ஏ. ஜே. பாலாஜி ஏற்பாட்டில் நடைபெற்ற ரத்த பரிசோதனை மைய திறப்பு விழாவில் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ரத்த பரிசோதனை ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம். ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மதுரை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் மோகன் குமார், திருச்சி எம்.எஸ்.ஆர். ராஜேந்திரன், அரசு வழக்கறி ஞர்கள் கோட்டைச்சாமி, தீபக் மற்றும் முக்கிய பிர முகர்கள் டாக்டர்கள் திர ளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் விரகனூர் ஜெயச்சந்திரன், அமுதா சாமுண்டீஸ்வரி மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
இந்த ரத்த பரிசோதனை மையத்தில் வருகிற 23- தேதி வரை 7 நாட்களுக்கு இலவசமாக ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமாறு ரத்த பரிசோதனை நிலைய பொறுப்பாளர் டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
- மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என்று துணை மேயர் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- மேயர்-துணை மேயர் இடையேயான தொடர் மோதல், தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவி வகித்து வருகிறார். இவர் தி.மு.க. கட்சியை சேர்ந்தவர். மாநகராட்சி துணை மேய ராக நாகராஜன் உள்ளார். இவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்.
மதுரை மாநகராட்சியில் பதவிக்கு வந்த புதிதில் மேயரும், துணை மேயரும் இணக்கமாகவே செயல் பட்டு வந்தனர். மாநகராட்சி நிகழ்ச்சிகளில் 2 பேரையும் பல நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்க முடிந்தது.
ஆனால் சமீப காலமாக இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி மேய ரின் நிகழ்ச்சிகளில், பெரும் பாலும் துணை மேயரை பார்க்க முடியவில்லை. இதற்கிடையே துணை மேயர் நாகராஜன் சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத் தொடரில் பேசும் போது, என்னை மேயர் தரப்பினர் மாநகராட்சி விழாக்கள் முதல் நிர்வாக பணிகள் வரை திட்டமிட்டே புறக்கணித்து வருகின்றனர் என்று பகிரங்க குற்றம் சாட்டினார்.
இதற்கு மேயர் தரப்பு பதில் அளிக்கையில், மாநகராட்சி நிர்வாக பணிகளில் தலையிட துணை மேயருக்கு அதிகாரம் இல்லை என்று பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் துணை மேயர் நாகராஜன் நேற்று மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். அந்த கடித த்தில் கூறப்ப ட்டு இருப்ப தாவது:-
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை மாநகராட்சி 5-வது மண்ட ல அலுவல கத்தில் சுதந்திர தின விழா நடந்தது. அப்போது வைக்கப்பட்ட கல்வெட்டில் எனது பெயர் விடுபட்டது. இது தொட ர்பாக நான் உங்களுக்கு கடிதம் எழுதி னேன். பல தடவைகள் நேரிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிக ளிடமும் நினை வு படுத்தினே ன். ஆனாலும் புதிய கல்வெ ட்டை வைக்க விடாமல் சிலர் தடுத்து வரு கின்றனர்.
இந்த நிலையில் மாநக ராட்சி 29-வது வார்டில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது. இதற்காக வைக்கப்பட்டு உள்ள கல்வெட்டிலும், எனது பெயர் இடம் பெற வில்லை. அதே நேரத்தில் மேயர், கமிஷனர், மண்டல தலைவர், கவுன்சிலர் ஆகி யோரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் ஏதோ திட்டமிட்டு எனது பெயரை வைக்காமல் உள்ளதாக தெரிகிறது. ஆகவே மேற்கண்ட 2 பகுதிகளிலும் என் பெயர் சேர்க்கப்பட்ட கல்வெட்டை உடனடியாக வைக்க வேண்டும். இல்லையெனில் வருகிற 21-ந் தேதி மாநக ராட்சி 5-வது மண்டலத்தில் நடக்க உள்ள மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நான் போராட்டத்தில் ஈடுபடு வேன் என்று கூறப்பட்டு உள்ளது.
மதுரை மாநகராட்சியில் மேயர்-துணை மேயர் இடையேயான தொடர் மோதல், தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
- ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சூரியசக்தி பயணிகள் நிழற்கு டை அமைக்கப்பட்டது.
- மேலூர் நான்கு வழிச்சாலையில் விபத்தை தவிர்க்க ரூ.100 கோடியில் 7 மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
மேலூர்
மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு நாடாளு மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சூரியசக்தி பயணிகள் நிழற்கு டை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கலந்து கொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.10 கோடியில் பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற உள்ளது. மேலூர் பகுதியில் அதிக சாலை விபத்துகளும், அதன் மூலம் மாதத்தில் 15 உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் ரூ.100 கோடியில் மதிப்பீட்டில் 7 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.
மேலூர் அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவு நிறுவப்பட்டு அவசர சிகிச்சைக்காக வருப வர்களை மதுரைக்கு அனுப்பாமல் மேலூர் அரசு மருத்துவ மனையிலேயே சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மதுரை மாவ ட்டத்தில் 73 பள்ளிகள் தற்போது தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்ப ட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேலூர் பள்ளிகளையும் இந்த திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், துணைத் தலைவர் இளஞ்செழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் பாலா, பொன்னுத்தாய், தாலுகா செயலாளர் கண்ணன். மேலூர் தாலுகா குழு உறுப்பினர் மணவாளன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கென்னடியான், கவுன்சிலர் பாண்டி, தி.மு.க. நிர்வாகிகள் மலம்பட்டி ரவி, முருகானந்தம், ஒப்பந்ததாரர் லத்தீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






