search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சிக்கு எதிராக போராட்டம்
    X

    மாநகராட்சிக்கு எதிராக போராட்டம்

    • மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என்று துணை மேயர் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மேயர்-துணை மேயர் இடையேயான தொடர் மோதல், தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவி வகித்து வருகிறார். இவர் தி.மு.க. கட்சியை சேர்ந்தவர். மாநகராட்சி துணை மேய ராக நாகராஜன் உள்ளார். இவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்.

    மதுரை மாநகராட்சியில் பதவிக்கு வந்த புதிதில் மேயரும், துணை மேயரும் இணக்கமாகவே செயல் பட்டு வந்தனர். மாநகராட்சி நிகழ்ச்சிகளில் 2 பேரையும் பல நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்க முடிந்தது.

    ஆனால் சமீப காலமாக இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி மேய ரின் நிகழ்ச்சிகளில், பெரும் பாலும் துணை மேயரை பார்க்க முடியவில்லை. இதற்கிடையே துணை மேயர் நாகராஜன் சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத் தொடரில் பேசும் போது, என்னை மேயர் தரப்பினர் மாநகராட்சி விழாக்கள் முதல் நிர்வாக பணிகள் வரை திட்டமிட்டே புறக்கணித்து வருகின்றனர் என்று பகிரங்க குற்றம் சாட்டினார்.

    இதற்கு மேயர் தரப்பு பதில் அளிக்கையில், மாநகராட்சி நிர்வாக பணிகளில் தலையிட துணை மேயருக்கு அதிகாரம் இல்லை என்று பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் துணை மேயர் நாகராஜன் நேற்று மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். அந்த கடித த்தில் கூறப்ப ட்டு இருப்ப தாவது:-

    கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை மாநகராட்சி 5-வது மண்ட ல அலுவல கத்தில் சுதந்திர தின விழா நடந்தது. அப்போது வைக்கப்பட்ட கல்வெட்டில் எனது பெயர் விடுபட்டது. இது தொட ர்பாக நான் உங்களுக்கு கடிதம் எழுதி னேன். பல தடவைகள் நேரிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிக ளிடமும் நினை வு படுத்தினே ன். ஆனாலும் புதிய கல்வெ ட்டை வைக்க விடாமல் சிலர் தடுத்து வரு கின்றனர்.

    இந்த நிலையில் மாநக ராட்சி 29-வது வார்டில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது. இதற்காக வைக்கப்பட்டு உள்ள கல்வெட்டிலும், எனது பெயர் இடம் பெற வில்லை. அதே நேரத்தில் மேயர், கமிஷனர், மண்டல தலைவர், கவுன்சிலர் ஆகி யோரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளது.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் ஏதோ திட்டமிட்டு எனது பெயரை வைக்காமல் உள்ளதாக தெரிகிறது. ஆகவே மேற்கண்ட 2 பகுதிகளிலும் என் பெயர் சேர்க்கப்பட்ட கல்வெட்டை உடனடியாக வைக்க வேண்டும். இல்லையெனில் வருகிற 21-ந் தேதி மாநக ராட்சி 5-வது மண்டலத்தில் நடக்க உள்ள மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நான் போராட்டத்தில் ஈடுபடு வேன் என்று கூறப்பட்டு உள்ளது.

    மதுரை மாநகராட்சியில் மேயர்-துணை மேயர் இடையேயான தொடர் மோதல், தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×