search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா
    X

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா தொடங்குகிறது.
    • ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலை மையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்,

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

    ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா இந்த ஆண்டு வருகின்ற 26-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது.

    விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம் நாள் கை பார திருவிழா கொண்டாடப் படும். வெள்ளி யானை வாகனத்தை பக்தர்கள் தங்கள் உள்ளங்கைகளின் ஏந்தியபடி வலம் வருவார்கள்.

    தொடர்ந்து ஏப்ரல் 5-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெறும். 6-ந்தேதி திருப்பரங்குன்றம் சன்னதி தெரு பகுதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து மீனாட்சியம்மன், சொக்க நாதருடன் பிரியாவிடை ஆகியோர் மதுரையிலிருந்து புறப்பாடாகி திருப்பரங் குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருள்வார்கள். அங்கு மீனாட்சியம்மன், சொக்கநாதர் பிரியாவிடை முன்னிலையில் சுப்பிர மணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ந்தேதி பெரிய வைர தேரோட்டம் நடைபெறும். விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 5 மணி அளவில் தேரில் எழுந்தருள்வார்.

    தேரோட்டம் திருப்பரங் குன்றம் கிரிவலப்பாதை வழியாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருப்பரங்குன்றம் வயல்வெளி பகுதிகளில் தேர் வரும் காட்சி கண் கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலை மையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×