என் மலர்
மதுரை
- நுகர்பொருள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை
மதுரை மாவட்ட நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்க ஆண்டு விழா செயற்குழு கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. ஆலோசகர் இளங்கோவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
செயற்குழு கூட்டத்தில் செயலாளர் வினோத்கண்ணா, பொருளாளர் வெங்கட் சுப்பிரமணியன், வக்கீல் தியாகராஜன், பட்டய கணக்காளர் முகமதுகான் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகஸ்தருக்கான விற்பனை கமிஷன் தொகையை 0.5 முதல் 2 சதவீதம் வரை ஜூன் மாதத்திற்குள் கண்டிப்பாக உயர்த்த வேண்டும், மறைமுக வரி விதிப்புகள் நிலுவையில் உள்ள வணிகருக்கு மற்ற மாநிலங்களை போல் சமாதான திட்டம் கொண்டு வர வேண்டும், தயாரிப்பு நிறுவனங்கள் இரட்டை விலை கொள்கையில் வீடியோகஸ்தருக்கு பொருட்களை சப்ளை செய்யக் கூடாது.
நுகர்பொருள் மொத்த- சில்லறை விநியோக வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் மட்டுமின்றி உள்நாட்டு பெரிய கார்பரேட் நிறுவனங்களும் ஈடுபட தடை விதிக்க வேண்டும், நடப்பு நிதியாண்டில் 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே எந்த ஒரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி. வரி இருக்க வேண்டும், இணக்க வரி 1.5 கோடியாக ஆண்டு விற்பனை உள்ளது. அதனை ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும்.
சேல்ஸ் இன்வாய்ஸ் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருந்தால் ஈ-வே பில் எடுக்க வேண்டி உள்ளது. அதனை மற்ற மாநிலங்க ளைப் போல ரூ.2 லட்சத்துக்கு உயர்த்த வேண்டும். ஈ-வே பில்லை ரத்து செய்ய வேண்டும், புதிய வரி விதிப்பு அல்லது வரி விலக்கு போன்ற அறிவிப்பை இடையில் அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
- மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வும். அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கினார்.
இதில் மத்திய தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி 22-வது வார்டு பகுதியில் உள்ள திரு.வி.க. நகரில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
பின்னர் 58-வது வார்டு ஆரப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூடத்தை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசிய பொருட்க ளை பெறுகின்ற வகையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதா ரர்களுக்கு அத்தியாவசிய பொருட்க ளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், மதுரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் குரு மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
- துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சிக்காக விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளை சேர்ந்த செயல் அலுவலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து திடக்கழிவு செய்யும் முறையையும், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது குறித்தும் பயிற்சி மேற்கொண்டனர்.
மாவட்ட பேரூராட்சிகளின் இயக்குநர் சேதுராமன், செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மேலூர் அருகே ரூ.60 லட்சத்தில் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- என்ஜினீயர்கள் ரவிக்குமார், கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி யூனியனைச் சேர்ந்த தும்பைபட்டி ஊராட்சியில் மதுரை தொகுதி எம்.பி. நிதி ரூ.5 லட்சத்தில் செட்டியார்பட்டியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியையும், தாமரைபட்டி கிராமத்தில் கனிம மற்றும் புவியியல் துறையின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் குடிநீர் போர்வெல் அமைக்கும் பணியையும், தாமரைபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் சமையலறை கட்டும் பணியையும் பார்வையிட்டார்.
மேலூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சாலக்கிபட்டியில் சமுதாயக்கூடம் கட்டிடம் கட்டும் பணியையும் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.
அப்போது கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி என்ஜினீயர்கள் ரவிக்குமார், கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
- திருமங்கலம் பகுதியில் மளிகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்த வர் செந்தில்முருகன்(வயது 33). இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
செந்தில்முருகன் டி.புதுப்பட்டியில் மளி கைக்கடை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து பாப்பாத்தி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மனவேதனையில் இருந்த செந்தில்முருகன் நேற்று வீட்டின் மாடி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தெரியவந்ததும் பாப்பாத்தி திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே முத்தையன்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி செல்வி(48). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செல்வி விவசாயம் மற்றும் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாக செல்வி கடந்த 16-ந்தேதி விஷம் குடித்துவிட்டார். இதைய டுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சி கிச்சைக்காக அவரை மதுரை அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு செல்வி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அவரது மகன் தங்கராமன் சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லூர் அருகே தென்னமநல்லூரை சேர்ந்தவர் கருப்பணன்(32). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கருப்பணன் கோவையில் கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். அவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சொந்த ஊர் வந்த அவர், அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்.
இதனால் மனைவி சித்ரா கோபித்துக்கொண்டு தனது அத்தை வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கருப்ப ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின்பேரில் வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
உசிலம்பட்டி:
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 1 லட்சத்து 86 ஆயிரத்து 200 லிட்டர் பால் மதுரையில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் நிரப்பி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
பால் கொள்முதல் விலையை ரூ.7-ல் இருந்து ரூ.10 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். தனியார் பால் நிறுவனங்கள் அரசு வழங்கும் கொள்முதல் விலையை விட அதிகமாக வழங்குகிறது. எனவே ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்கள் நலனை விரும்பி உடனே கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
இதற்கு அரசு உடனடி நடவடிக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கடந்த வாரம் முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டத்தை நடத்து கின்றனர். இதனால் மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே சக்கரைப்பட்டி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் இன்று காலை மதுரை-செல்லம் பட்டி மெயின் ரோட்டில் திரண்டனர். அவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பால் உற்பத்தியாளர்களின் இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாளுக்கு நாள் மாடுகளுக்கு தீவனம், பராமரிப்பு பணிக்காக செலவுகள் அதிகரித்து வருகிறது. இந்த செலவுகளை எங்களால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவே பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை அரசு உயர்த்தி தர வேண்டும் என்றனர்.
- 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது.
- 9-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா வருகின்ற 26-ந்தேதி தொடங்கி அடுத்த (ஏப்ரல்) மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 27-ந்தேதி விநாயகர் திருநாளாக போற்றப்படுகிறது. அன்று இரவு 7 மணியளவில் விநாயகர் சப்பரம் வலம் வருதல் நடக்கிறது
திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் வலம் வருதல் நடக்கிறது. 28-ந்தேதி இரவு 7 மணிக்கு தங்ககுதிரை வாகனத்திலும், 29-ந்தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 30-ந்தேதி அன்ன வாகனத்திலும், 31-ந்தேதி சேஷ வாகனத்திலும், ஏப்ரல் 1-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 2-ந்தேதி தங்க மயில் வாகனத்திலும், 3-ந்தேதி வெள்ளி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 4-ந்தேதி பச்சைக் குதிரை வாகனத்திலும், 5-ந்தேதி தங்க குதிரை வாகனத்திலும், 6-ந்தேதி தங்கமயில், குதிரை வாகனத்திலும், 7-ந்தேதி பச்சை குதிரை வாகனத்திலும், 8-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும்,9-ந்தேதி திருத்தேரிலும், 10-ந்தேதி தங்கமயில் வாகனத்திலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 1-ந்தேதி (சனிக்கிழமை) கைப்பாரம், 5-ந்தேதி பங்குனி உத்திரம், 6-ந்தேதி சூரசம்கார லீலை, 7-ந்தேதி பட்டாபிஷேகம், 8-ந்தேதி பகல் 12.20 மணிக்கு மேல் 12.40மணிக்குள் திருக்கல்யாணம், 9-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் துணைகமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ரெயில் நிலையத்தில் 2 மார்க்கங்களிலும் ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி ரெயில்வே கேட் அடைக்கப்படுகிறது. இதன் காரணமாக தெற்கு பகுதியில் இருந்து வட பகுதிக்கும், வட பகுதி யில் இருந்து தெற்கு பகுதிக்கும் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது மட்டுமின்றி ஆம்புலன்சு வாகனமும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதி அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் சோழவந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சுமார் 12 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பால பணிகள் நடந்தன.
தற்போது இந்த பணிகள் நிறை வடையும் தறுவாயில் இருக்கிறது. விரைவில் ரெயில்வே மேம்பாலம் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. ரெயில்வே மேம்பாலம் திறந்தவுடன் ரெயில்வே கேட் நிரந்தரமாக அடைக்கப்படுகிறது. இதனால் சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு நடவடிக்கை எடுத்து சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களுக்காக மதுரை அருகே பரவையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை போன்று சோழவந்தானிலும் அமைக்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சோழவந்தான் ரெயில்வே கேட்டுக்கு வடபுறம் பெரும்பாலும் விவசாய பகுதியாகும். இங்கு விவசாய பணிக்கு செல்லக்கூடிய தொழிலா ளர்கள் நடந்து செல்லக் கூடியவர்கள். இவர்கள் செல்வதற்கு கண்டிப்பாக சுரங்கப்பாதை அவசியமாகும்.
அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சோழவந்தானில் சுரங்கப்பாதை அமைத்து நடந்து செல்லக் கூடியவர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ரூ. 22 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்
- பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலூர்
மேலூர் கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 15லட்சம், பொது நிதியில் இருந்து ரூ.7லட்சம் என மொத்தம் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூட கட்டித்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைதொடர்ந்து குமரப்பட்டியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணியையும் பெரியபுள்ளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கரு.முருகேசன் வரவேற்றார். கொட்டாம் பட்டி யூனியன் சேர்மன் வளர்மதி குணசேகரன் தலைமை தாங்கினார்.
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் ராஜேந்திரன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் துணை சேர்மன் குலோத்துங்கன், பள்ளப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் வள்ளி மயில் முருகேசன், துணைத்தலைவர் நாகஜோதி, கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய பொருளாளர் சேதுராமன், விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் பொதியாடி, பள்ளபட்டி கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மூதாட்டி கிணற்றில் பிணமாக மிதந்தார்.
- இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தாதம்பட்டி நகர்ப்புற சாலையில் பக்கத்தில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் தெரியவில்லை. இது குறித்து தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- ஜெயிலுக்கு சென்றவர் வீட்டில் நகைகளை திருடி ஆடம்பரமாக செலவு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது
மதுரை
மதுரை கோரிப்பாளை யம் கான்சாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி (வயது 83). இவர் மதுரா கோட்ஸ் நிறு வனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படு கிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தோணி ஒரு கொலை வழக்கில் கைதானார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 110 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். வீடு திரும்பிய அந்தோணி கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந் தார். இதுபற்றி அவர் தல்லா குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.
இதுபற்றி அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷ னர் ஜெகன்நாதன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (36), கணேசன் (46), செல்வகுமார் (33)ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் கைதான விஜயகுமார் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார்.
நகையை கொள்ளை யடித்த 3 பேரும் தனியார் வங்கியில் அடகு வைத்து ரூ.24 லட்சம் வாங்கி உள்ள னர். அந்த பணத்தை 3 பேரும் ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
- விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.
மதுரை
மதுரை நரியம்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 53), விவசாயி. இதே பகுதியில் கணேஷ்குமார் (31) என்பவரும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நரியம்பட்டி கோவில் திருவிழா நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடம் வரி வசூல் செய்யப்பட்டது. அப்போது பணம் விவகாரம் தொடர்பாக சுகுமாறன்- கணேஷ்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சுகுமாறன் நரியம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த கணேஷ்குமார் அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து கணேஷ்குமார் கல்லால் சுகுமாறனை தாக்கினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
இதுதொடர்பாக சுகுமாறன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.






