என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்
  X

  ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  சோழவந்தான்

  சோழவந்தான் ரெயில் நிலையத்தில் 2 மார்க்கங்களிலும் ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி ரெயில்வே கேட் அடைக்கப்படுகிறது. இதன் காரணமாக தெற்கு பகுதியில் இருந்து வட பகுதிக்கும், வட பகுதி யில் இருந்து தெற்கு பகுதிக்கும் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

  இது மட்டுமின்றி ஆம்புலன்சு வாகனமும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதி அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் சோழவந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சுமார் 12 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பால பணிகள் நடந்தன.

  தற்போது இந்த பணிகள் நிறை வடையும் தறுவாயில் இருக்கிறது. விரைவில் ரெயில்வே மேம்பாலம் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. ரெயில்வே மேம்பாலம் திறந்தவுடன் ரெயில்வே கேட் நிரந்தரமாக அடைக்கப்படுகிறது. இதனால் சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  எனவே அரசு நடவடிக்கை எடுத்து சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களுக்காக மதுரை அருகே பரவையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை போன்று சோழவந்தானிலும் அமைக்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  சோழவந்தான் ரெயில்வே கேட்டுக்கு வடபுறம் பெரும்பாலும் விவசாய பகுதியாகும். இங்கு விவசாய பணிக்கு செல்லக்கூடிய தொழிலா ளர்கள் நடந்து செல்லக் கூடியவர்கள். இவர்கள் செல்வதற்கு கண்டிப்பாக சுரங்கப்பாதை அவசியமாகும்.

  அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சோழவந்தானில் சுரங்கப்பாதை அமைத்து நடந்து செல்லக் கூடியவர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  Next Story
  ×