என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்தனர்.
    • அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கங்காணி சந்தை சேர்ந்தவர் நாகவேல்மணி (32). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று நள்ளிரவு இவர் வைத்தியநாதபுரம் ஆட்டோ நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 4 பேர் கும்பல், நாகவேல்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.800-ஐ பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகபூப்பாளையம் ஜான் மகன் சக்தி கவுதம் (23), வைத்தியநாதபுரம் சுரேஷ் மகன் சஞ்சய் (22), பாரதியார் மெயின் ரோடு செந்தில்குமார் மகன் அஜித் குமார் (24), கங்காணி சந்து கண்ணன் மகன் மாயகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மதுரை எம்.எம்.சி. காலனி, காவிரி நகரை சேர்ந்தவர் யுவராஜா (26). இவர் நேற்று மாலை செம்பூரணி ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அங்கு வந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.300-ஐ பறித்து தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் போஸ் மகன் ராமகிருஷ்ணனை (19) கைது செய்தனர்.

    • தொழில் நிறுவனங்களின் 721 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
    • இறுதி ஒப்புதல் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம்.

    மதுரை

    மதுரை கோர்ட்யாட் மேரியாட் விடுதியில் இன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில், தொழில் மற்றும் வர்த்த கத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னி லையில் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங் களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் பிரிதிநிதி கள் பங்கேற்ற தொழில் நிறுவ னங்களுக்கான இணையவழி ஒற்றை சாளர முனையம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலெக்டர் அனீஷ்சேகர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காகவும், தொழில் நிறுவனங்களின் வணிக மேம்பாட்டிற்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க இணையவழி ஒற்றை சாளர முனையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒற்றை சாளர முனையத்தில் 200-க்கும் மேற்பட்ட அனுமதிகள் 25-க்கும் மேற்பட்ட அரசுத்து றை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த ஒற்றை சாளர முனையத்தின் மூலம் விண்ணப்பத்தில் உள்ள குறைகளை களைய ஒரே முறை குறைநிவர்த்தி வினவல் அனுப்பப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

    இறுதி ஒப்புதல் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம். உரிய கால வரம்பிற்குள் வழங்க ப்படாத ஒப்புதல்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதப் படும்.

    ஒற்றை சாளர முனை யத்தின் செயலாக்கத்திற்கு பிறகு தமிழ்நாட்டின் வணிக வசதியாக்கல் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே ஒப்புதல் பெறும் நடைமுறை கள் தெளிவுபடுத்த ப்பட்டுள் ளது. இணைய வழியில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால் கால விரையம் தவிர்க்கப்படு கிறது.

    ஒற்றை சாளர முனை யத்தின் மூலம் தமிழ்நாட்டில் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 15 ஆயிரம் விண்ணப்பங் களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 865 விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 771 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளன. தொழில் நிறுவனங்கள் வசதிக்காக செயல்படுத்தப் பட்டு வரும் இந்தத் திட்டத்தை தொழில் முனை வோர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் கணேசன் (மதுரை) மாரிமுத்து (ராமநாதபுரம்) உள்பட அரசு அலுவலர்கள், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நகர்ப்புற மைய டாக்டர்களின் நோட்டீஸ்க்கு 3 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் கடந்த 34 மாதங்களில் எத்தனை பிரசவங்கள் நடந்தன? என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 592 பிரசவங்கள் மட்டுமே நடந்தது தெரிய வந்தது. அதே காலகட்டத்தில் சுமார் 14 ஆயிரத்து 291 கர்ப்பிணிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்து ரைக்கப்பட்டு உள்ளனர்.

    மதுரை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையங் களில் குறைவான பிரசவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் விசார ணைக்கு உத்தரவிட்டனர்.

    அப்போது மதுரை மாநக ராட்சிக்கு உட்பட்ட கரிசல் குளம், தெற்குவாசல், வண்டியூர், விராட்டிபத்து, முனிச்சாலை, அனுப்பா னடி, பைக்காரா, திருப்பரங் குன்றம் ஆகிய 8 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் குறைவான பிரசவம் நடந்தது தெரிய வந்தது.

    எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சுகாதார மையங்களின் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் "நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் எதற்காக குறைவான பிரசவம் நடந்து உள்ளது? இதற்கான விளக்கங்களை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரை மாநக ராட்சி நகர்நல அலுவ லர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • பெண்-கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பூப்பாண்டி அம்மாள் (27). இவர் மதுரை ஐராவதநல்லூர், அந்தோணியார் தெருவை சேர்ந்த வாலிபருடன், திருமணம் செய்யாமல் வாழ்க்கை நடத்தினார். நேற்று அவர் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அங்கு பூப்பாண்டி அம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைக்காரா, வயக்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (41). இவர் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார். அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. சம்பவத்தன்று நள்ளிரவு ஆனந்த் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மதுபான பார் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்தனர்.
    • தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மீனாம்பாள்புரம் புலித்தேவன் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரவீன்குமார்(வயது21). இவர் சென்னையில் செயல்படும் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் பிரவீன்குமார் சமீபத்தில் மதுரைக்கு வந்தார். அப்போது அவர் சக நண்பர்களுடன் பி.பி.குளத்தில் உள்ள ஒரு மதுபான பாருக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து அவர் குடித்துள்ளார். இதற்கு பார் உரிமையாளர் பிரேம்குமார் எதிர்ப்பு தெரி வித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து பிரவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் பார் உரிமையாளரிடம் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பார் உரிமையாளர் தரப்பினர் பிரவீன்குமாரை தாக்கினர்.

    இந்த சம்பவத்தில் பிரவீன்குமாரின் பற்கள் விழுந்து ரத்தகாயம் ஏற் பட்டது. அவரை நண்பர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பிரவீன் குமார், தல்லாகுளம் போலீ சில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மதுபான உரிமையாளர் பிரேம்குமார், ஊழியர்கள் சேகர், சோனைமுத்து ஆகியோர் பிரவீன்குமாரை தாக்கியது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து எஸ்.ஆலங்குளம் தேவேந்திரன் நகரை சேர்ந்த பார் உரிமையாளர் பிரேம்குமார்(29), திருப்புவனம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்த சேகர்(55), அண்ணாநகர் சோனைமுத்து(வயது 49) ஆகிய 3 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

    • ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தமிழக மக்களின் எதிர்ப்பு-போராட்டத்துக்கு கவர்னர் பணிந்துள்ளார்.
    • பசும்பொன் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் செயல் திட்டத்தை கவர்னர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு நிறைவேற்ற துடிப்பவர் தான் கவர்னர் ஆர்.என்.ரவி. அவர் தமிழ்நாடு என் பதை மறுதலித்து தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் எனப் பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி னார். பின்பு வலுவான கண்டனம் எழுந்த பின்னர் குடியரசு தின அழைப்பி தழில் தமிழ்நாடு என்று அச்சிட்டார்.

    அதே போல அமைச்சரவை தயாரித்து ஒப்புதல் அளித்த அறிக்கையில் சில வாக்கியங்களை தவிர்த்தும், திரித்தும் வாசித்தார். இதன்மூலம் அரசியலமைப்பு சட்டத்தையும், தார்மீக நெறிகளையும் மீறினார்.

    ஆன்லைன் சூதாட்டத்தில் பாதிக்கப்பட்ட 60பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர்.

    இதற்கு முடிவு கட்டும் வகையில் கடந்த ஆண்டு ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்பதலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவரை நேரில் சந்திந்து மாநில அரசின் தரப்பில் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    இருந்தபோதிலும் 6மாத காலம் அந்த மசோதாவை கிடப்பில் போட்ட கவர்னர் இப்படி ஒரு சட்டத்தை இயற்ற தமிழ்நாட்டு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்ப்பட்ட மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார்.

    இதற்கிடையே குடிமை தேர்வு எழுதும் மாணவர்களி டையே உரையாற்றிய கவர்னர் அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட்டாலே அதற்கு ஒப்புதல் இல்லை என்று தான் அர்த்தம் என்று பேசியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் மசோதா வுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு கால நிர்ணயம் செய்யும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தின் காரணமாக வேறு வழியின்றி கவர்னர் ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுரங்கப்பாதை பணிகள் காரணமாக செங்கோட்டை ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
    • தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து இயக்கப்படும்.

    மதுரை

    திண்டுக்கல்-திருச்சி பிரிவில் தாமரைப்பாடி-வடமதுரை இடையே சுரங்கப்பாதை பணிகள் நடக்கிறது. அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில், இன்றும் நாளையும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நிற்கும். குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நிற்கும்.

    எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். மானா மதுரையில் மட்டும் நிற்கும். மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானா மதுரையில் மட்டும் நிற்கும். சென்னை எழும்பூரில் இருந்து நாளை புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மதுரையில் இருந்து இன்று புறப்படுவதாக இருந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து இயக்கப்படும்,

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • மேலூர் அருகே கம்பூரில் நடந்த மீன் பிடி திருவிழாவில் கிராம மக்கள் போட்டி போட்டு பிடித்தனர்.
    • வசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கம்பூரில் தேனக்குடிப்பட்டி செல்லும் சாலையில் மருதன் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தண்ணீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

    விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று இந்த கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடந்தது. இதையொட்டி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் இன்று காலை முதல் குவிந்தனர். கிராம முக்கி யஸ்தர்கள் அதிகாலையில் வெள்ளை துண்டு வீசியதும் சுற்றி இருந்த கிராம மக்கள் கண்மாய்க்குள் இறங்கி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர்.

    இதில் நாட்டு மீன்களான குறவை, கட்லா, ஜிலேபி மற்றும் விராமீன்களும் அதிக அளவில் கிடைத்தன. இந்த மீன்கள் சுமார் 3 கிலோ வரை இருந்தது. மீன்களை பிடித்த கிராமமக்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்தும், மீதமுள்ள மீன்களை விற்காமல் உறவி னர்களுக்கு கொடுத்தனர்.

    மீன்பிடித் திருவிழாவின் மூலம் வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    • மேலூர் அருகே கோவில் திருவிழாவில் உடலில் வைக்கோல் பிரி சுற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    • சிறுவர்கள் உடலில் வேஷம் பூண்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள மங்களாம்பட்டி கிராமத்தில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக ஆண்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றி பூதம் போல வந்தனர். சிறுவர்கள் உடலில் வேஷம் பூண்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.

    முன்னதாக ஊர் பெரிய கோவிலில் இருந்து மந்தையம்மன் கோவிலுக்கு ஆட்டம், பாட்டத்துடன் வந்தனர். அங்கு பெண்கள் உரலில் பச்சரிசி மாவு இடித்து அதனுடன் சர்க்கரை கலந்து அம்மனுக்கு படையலிட்டனர்.

    பின்னர் அங்கிருந்த பக்தர்களுக்கு சமமாக வழங்கப்பட்டது. இதுபோன்று விழா கொண்டாடுவதால் மழை பெய்து விவசாயம் செழித்து, மக்கள் நோய்நொடியின்றி வாழலாம் என்பது இந்த பகுதி மக்களின் ஐதீகமாக உள்ளது.

    • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் சந்தைவாசல் முன்பு கோடை கால நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது. பேரூர் செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார்.

    மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜ், மாநில இணைச்செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, ராமகிருஷ்ணன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, வக்கீல் திருப்பதி, அவைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர் இளங்கோவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசினார். இதில் பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை, பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் சூர்யா, திருப்பதி, சங்கு, நிர்வாகிகள் ரவி, வில்லி ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி. உதயகுமார் பேரூர் செயலாளர் அசோக்குமாரிடம் வழங்கினார்.

    • தராசுகளில் போலி முத்திரை வைத்த வியாபாரிக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    • ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை கீழமாசி வீதியில் உள்ள தராசு நிறுவனத்தில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு போலி முத்திரை உளிகள் கண்டறியப்பட்டன.

    தரப்படுத்தப்படாத எடை அளவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அரசு சார்பில் வக்கீல் காளீஸ்வரி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • மேலூர் நகராட்சி பகுதியில் உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்

    மேலூர்

    மேலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள மனித கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

    கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் அரசு விதிப்படி போதிய பாதுகாப்பு அமைப்புகள் செய்திருக்க வேண்டும்.தகுந்த ஆவணங்களுடன் வாகன உரிமையாளர்கள் ரூ.2 ஆயிரம் கட்டணத்துடன் நகராட்சியில் விண்ணப்பித்து 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    அவ்வாறு உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    ×