என் மலர்tooltip icon

    மதுரை

    • காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஊமை காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.

    இந்த விழாவையொட்டி முதல் நாள் இரவு 10 மணிக்கு பெரிய கிணற்றில் இருந்து பூங்கரகம் ஜோடித்து மேளதாளம் முழங்க கோவிலை வந்தடைந்தது. 2-ம் நாள் பொங்கல் வைத்து தீச்சட்டி எடுத்து மாவிளக்கு ஏற்றி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

    3-ம் நாள் முளைப்பாரியோடு ஊர்வலமாக சென்று அம்மன் பூஞ்சோலை அடைந்தது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரிகள் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    4-ம் நாள் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
    • போலீசார் ஜெகன் கருப்பையாவை கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த மாணவி மதுரையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

    இதனை விசாரித்த நீதிபதி, மாணவி பாலியல் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நடவடிக்கை எடுக்க செக்கானூரணி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி போலீசார் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையா (வயது42), மற்றொரு பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஜெகன் கருப்பையாவை கைது செய்தனர். தலைமறைவான மாணவரை தேடி வருகின்றனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம்.
    • மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யலாம்.

    மதுரை

    மதுரை ஞானஒளிவுபுரம் ஏ.ஏ.ரோட்டில் 2 தளத்தில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி யுடன் முதிர்வு காலத்தில் முதலீட்டு ெதாகையுடன் திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஆயிரக் கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர்.

    அவர்கள் உறுதிமொழி அளித்தபடி பணம் செலுத்தி யவர்களுக்கு வட்டியுடன் முதலீட்டு தொகையை திருப்பி வழங்கவில்லை. இது தொடர்பாக இதுவரை 1,428 புகார்கள் பெறப்பட்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் யாரே னும் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால் இந்த மாதம் (ஏப்ரல்) இறுதிக் குள் உரிய ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யலாம்.

    இந்த தகவலை பொரு ளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குப்புசாமி, இன்ஸ்பெக்டர் கமருன்னிசா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • பிஐஎஸ் ஹால்மார்க் நகைகளை மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும்.
    • மதுரை ஸ்ரீபாலகோபாலன் ஜுவல்லரி உரிமையாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ஸ்ரீபால கோபாலன் ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.டி.செந்தில்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் தங்க நகைகளுக்கு பிஐஎஸ் ஹால் மார்க் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து ள்ளது. இனிமேல் பிஐஎஸ் தர குறியீடு கொண்ட தங்கம் மட்டுமே விற்கவும், வாங்கவும் வேண்டும்.

    ஹால் மார்க் முத்திரை என்பது 3 குறியீடுகளை கொண்டது. பிஐஎஸ் குறியீடு, தரம் மற்றும் எண் ஆகியவை இடம் பெற்று இருக்கும். எந்த தங்க நகையும் முழுமையான தங்கம் கிடையாது. கண்டிப்பாக இதர உலோகங்கள் சேர்க்கப் படும்.

    அதன் மூலம் தான் நமக்கு தேவையான தங்க நகைகளை வடிவமைக்க முடியும். எனவே தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகங்களின் அளவை பொறுத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படும்.

    ஹால் மார்க் முத்திரை 3 சதவீதமாக பிரிக்கப்ப டுகிறது. 22 கே 916 என்றால் 22 காரட் தங்கம். இதில் 91.6 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 18கே750 என்றால் 18 காரட் தங்கம். இதில் 75 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 14கே858 என்றால் 14 காரட் தங்கம். இதில் 58.5 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும்.

    உண்மையான ஹால்மா ர்க் முத்திரை பதித்த நகைகளை வாங்கும் போது அதற்கான நன்மை களும் நமக்கு கிடைக்கும். வங்கியில் தங்க நகை கடன் வாங்க, நகைகளை மீண்டும் விற்பனை செய்வதற்கு ஹால்மார்க் முத்திரை அவசியமாக உள்ளது.

    எனவே பொதுமக்கள் சிறிது சிறிதாக சேமித்து வாங்கும் தங்க நகைகளில் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெற்குவெளி வீதி மீனா லூர்தீன் பள்ளிவாசல் சந்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சரவணதீபக் (21). இவர் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவண தீபக்கின் தாய் வசந்தி தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவண தீபக் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.கே. நகர் மல்லிகை குடியிருப்பை சேர்ந்தவர் உதய பாரத் (21). சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் உதய பாரத்தின் தாய் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • பிச்சை எடுக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகர போக்கு வரத்து சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மேலமடை, ஆவின் சந்திப்பு, காளவாசல், பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் எண்ணற்ற குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதை பார்க்க முடிகிறது.

    இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர் மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிடம் கேள்வி எழுப்பியி ருந்தார். இதற்கு பதில் அளித்து அந்த நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 4, 2020-ல் 15, 2021-ல் 38, 2022-ல் 56பேர் உள்பட ஒட்டுமொத்தமாக 113 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். மதுரை மாநகரில் மட்டும் கடந்த 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை கடத்தி விற்க முயன்றதாக 4 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர்.

    அதேபோல் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை 19 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவரவர் பெற்றோர் வசம் ஒப்படைக் கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சிறப்பு குழுக்கள் அமைத்து பிச்சை எடுக்கும் குழந்தைளை மீட்க வேண்டும்.

    அவர்களை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சியில் வருகிற 24-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. முப்பெரும் விழாவில் 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.
    • ஓ.பி.எஸ். அணி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை அ.தி.மு.க. புற நகர் வடக்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளைஞரணி மாநில செய லாளர் ராஜ்மோகன், மாணவரணி துணை மாநில செயலாளர் ஒத்தகடை பாண்டியன், பேரவை மாநில இணைச்செயலாளர் சோலை குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன் பேசும்போது கூறியதாவது:-

    வருகிற 24-ந் தேதி திருச்சியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா, நிறுவனர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடை பெறுகிறது. இந்த விழா முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கை நாயகன் ஓ.பி.எஸ். கரத்தினை வலுப்ப டுத்தும் வகையில் மாநாடு போல நடைபெறும்.

    இந்த விழாவில் அனைத்து நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும். மேலும் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து வரிசையாக வாகனங்களில் அணிவகுத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

    • 5 பெண் குழந்தைகளின் தாய் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கலெக்டருக்கு எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது.



    தற்கொலை செய்து கொண்ட நாகலட்சுமியையும், தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள் சண்முகபிரியா, பாண்டி சிவானி.

    திருமங்கலம்

    மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி(வயது31). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்சினி, தேன்மொழி, சண்முகபிரியா, பாண்டி சிவானி ஆகிய 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கணேசன் கோவையில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். இதனால் நாகலட்சுமி தனது 5 குழந்தைகளுடன் மையிட்டான்பட்டியில் வசித்து வந்தார். 5 பெண் குழந்தைகள் இருப்பதால் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென நாகலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

    அதன்பேரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் வழங்கினார். இதையடுத்து அந்த பணிக்கு நாகலட்சுமி சென்று வந்தார்.

    அப்போது மையிட்டான் பட்டி கிராமத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகிய 3 பேரும் நாகலட்சுமியை தரக்குறைவாக பேசி, அவருக்கு வேலை தரமுடியாது என கூறியுள்ளனர். இதனால் வேதனையடைந்த நாக லட்சுமி தன்னை தரக்குறைவாக பேசியது குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

    ஆனால் அதன்பிறகும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 3 பேர் மீதும் நாகலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அவர் இன்று தனது கைக்குழந்தைகளான சண்முகபிரியா, பாண்டி சிவானி ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு மையிட்டான்பட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில் சென்றார்.

    அந்த பஸ் சிவரக்கோட்டை அருகே வந்தபோது, நாகலட்சுமி தனது 2 குழந்தைகளையும் அருகில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு திடீரென ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தார். கண்ணை மூடி திறப்பத்திற்குள் நடந்த இந்த சம்பத்தை பார்தது பஸ்சில் இருந்தவர்கள் அதிச்சியடைந்து அலறினர்.

    இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மற்றும் சக பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர். பஸ்சில் இருந்து குதித்த நாகலட்சுமி படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    தங்களுடன் பயணித்து வந்த பெண் பஸ்சில் இருந்து குதித்து படுகாயமடைந்து கிடப்பதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். படுகாய மடைந்து சாலையில் கிடந்த நாகலட்சுமியை பார்த்து அவரது 2 குழந்தைகளும் கதறி அழுதன. இதனை தொடர்ந்து நாகலட்சுமி அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே நாகலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கலெக்டரிடம் கொடுப்பதற்காக நாகலட்சுமி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிளார்க் தன்னை அவதூறாக பேசி மன வருத்தத்தை ஏற்படுத்தி யதாகவும், மேலும் வேலை தரமுடியாது என மிரட்டியதாகவும் எழுதி இருந்தார்.

    இந்த காரணத்தாலேயே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் எனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகியோர்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அந்த கடிதத்தை கைப்பற்றி, அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • நீதிபதி, தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் இங்கு இருக்கும்போது குருத்திகா பட்டேலை ஏன் அழைத்து வரவில்லை? என கேள்வி எழுப்பினார்.
    • மனுதாரர்கள் தரப்பில் குருத்திகாவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துகிறோம் என்று கேட்டனர்.

    மதுரை:

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் வினீத் மாரியப்பன், என்ஜினீயர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா பட்டேல் என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து குருத்திகாவின் பெற்றோர் குற்றாலம் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் மீதான விசாரணைக்கு வினீத், குருத்திகா ஆகியோர் சென்று விட்டு திரும்பியபோது வினீத்தை தாக்கி விட்டு குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் சென்று விட்டனர். இது தொடர்பாக 12-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவாகி விட்டனர்.

    இந்தநிலையில் தலைமறைவாக இருக்கும் சிலர் தங்களுக்கு முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு இது தொடர்பாக குருத்திகாவிடம் விசாரிக்க வேண்டும். அவரை ஆஜர்படுத்துங்கள் என்று உத்தரவிட்டது. அதன் பேரில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் குருத்திகாவை ஆஜர்படுத்தவில்லை.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு. முன் ஜாமீன் கோரிய குருத்திகாவின் தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் ஆகியோர் எங்கு உள்ளனர்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் அனைவரும் தமிழகத்தில் தான் உள்ளனர் என்று வக்கீல் தெரிவித்தார்.

    இதனையடுத்து நீதிபதி, தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் இங்கு இருக்கும்போது குருத்திகா பட்டேலை ஏன் அழைத்து வரவில்லை? என கேள்வி எழுப்பினார்.

    இதைத்தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் குருத்திகாவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துகிறோம் என்று கேட்டனர். ஆனால் அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி தெரிவித்தார்.

    • மேலூர் தெற்குபட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகர் தெற்குப்பட்டியல் ஸ்ரீ காஞ்சி குளம் சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தெற்குப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. 2 பிரிவுகளாக நடந்த இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 7வண்டிகளும், சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 17வண்டிகளும் பங்கேற்றன.

    இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ேபாட்டியினை காண சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர்.

    • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • இதுகுறித்து சிறார் பாலியல் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக திருமங்கலம் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சிறார் பாலியல் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் மதுரம் விசாரித்து வந்தார்.

    விசாரணை முடிவடைந்த நிலையில், முத்துக்குமாருக்கு 10ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீஸ் ஏட்டு வெங்கடேஷ் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பாராட்டு தெரிவித்தார்.

    • மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்தனர்.
    • அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கங்காணி சந்தை சேர்ந்தவர் நாகவேல்மணி (32). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று நள்ளிரவு இவர் வைத்தியநாதபுரம் ஆட்டோ நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 4 பேர் கும்பல், நாகவேல்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.800-ஐ பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகபூப்பாளையம் ஜான் மகன் சக்தி கவுதம் (23), வைத்தியநாதபுரம் சுரேஷ் மகன் சஞ்சய் (22), பாரதியார் மெயின் ரோடு செந்தில்குமார் மகன் அஜித் குமார் (24), கங்காணி சந்து கண்ணன் மகன் மாயகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மதுரை எம்.எம்.சி. காலனி, காவிரி நகரை சேர்ந்தவர் யுவராஜா (26). இவர் நேற்று மாலை செம்பூரணி ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அங்கு வந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.300-ஐ பறித்து தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் போஸ் மகன் ராமகிருஷ்ணனை (19) கைது செய்தனர்.

    ×