என் மலர்
மதுரை
- நேர்த்திக்கடன் செலுத்த உருவ பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- 2 குடும்பங்கள் வாழையடி வாழையாக இந்த தொழிலை செய்து வருகின்றனர்.
சோழவந்தான்
புகழ்பெற்ற சோழ வந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. 17 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள கிரா மங்களில் உள்ளவர்களும், வெளியூரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக உருவ பொம்மைகள் நேர்த்திக்கடனாக இந்த கோவிலுக்கு செலுத்து வார்கள்.
இதற்காக சோழவந்தான் அருகில் உள்ள முள்ளி பள்ளத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் உருவ பொம்மை கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பொம்மை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பிச்சை (வயது 68) என்பவர் கூறியதாவது:-
பொம்மைகள் தயாரிக்க முதலில் கரம்பை அல்லது வண்டல் மண் எடுத்து அதனை சலித்து எடுப்போம். அதனுடன் நீர் சேர்த்து வைக்கோல் சாந்து அல்லது உமி சேர்த்து உருவ பொம்மைகள் அச்சில் வார்க்கப்பட்டு பொம்மை களை தயாரிப்போம். அதன் பின்னர் 4 அல்லது 5 நாட்கள் நிழலிலும், அதன்பின் 2 நாள் வெயிலும் காய வைப்போம். இவ்வாறு ெசய்வதால் பொம்மைகளில் விரிசல் ஏற்படாது.
இதன்பின் சமதளத்தில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உறி மட்டைகள் அல்லது தேங்காய் மட்டைகள் வைத்து குறைந்தபட்சம் 4 மணி நேரம் வேக வைக்கப்படும். இந்த பொம்மைகள் சுட்டபின் கலர் வர்ணங்கள் தீட்டப்படும். எங்கள் குடும்பம் உள்பட இன்னும் 2 குடும்பங்கள் வாழையடி வாழையாக இந்த தொழிலை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி கோவில் உற்சவ விழா நடந்தது.
- விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே உள்ள வைகாசிபட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சாத்தியார் அணை அருகில் உள்ள கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி கோவில் உற்சவ விழா நடந்தது. அழகர்கோவில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கி பின்னர் அழகர்மலைக்கு திரும்பும் நாளில் இந்த கோவிலில் உற்சவ விழா நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு உப்பு, சேவல், காய்கறிகள், விைள பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.
அங்குள்ள கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமிக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிசேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.
- வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- அரிசி, காய்கறி, சேலை, இனிப்புகளை மாநில இணைத்தலைவர், மாநில பொருளாளர் வழங்கினர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். தென்மண்டல இளைஞரணி துணை செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் எம்.கே.கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் கே.என்.கணேசன் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் கருப்பையா வரவேற்றார். இதில் ஏழைகளுக்கு அரிசி, காய்கறி, சேலை, இனிப்புகளை மாநில இணை தலைவர் ஆறுமுகநாட்டார், மாநில பொருளாளர் கே.என்.நாகராஜன் ஆகியோர் வழங்கினர்.
இதில் விவசாய அணி ஒன்றிய தலைவர் வையாபுரி, மகளிரணி நிர்வாகிகள் வள்ளி, மல்லிகா, மதுரை நகர தலைவர் காளி, மாவட்ட செயலாளர்கள் மருது, திண்டுக்கல் ராமு தேவர், அந்தோணி, தொழிற் சங்க செயலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி நன்றி கூறினார்.
- திருமங்கலம் அருகே அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.ம.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
- தோப்பூர்-ஆஸ்டின்பட்டி சந்திப்பு சாலையில் தங்களது கொடிக்கம்பத்தை நடுவதற்காக குழி தோண்டினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 4வழிச்சாலையில் உள்ள தோப்பூர்-ஆஸ்டின்பட்டி சந்திப்பு சாலையில் அ.ம.மு.க. நிர்வாகிகள் தங்களது கொடிக்கம்பத்தை நடுவதற்காக குழி தோண்டினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் மற்றும் 4வழிச்சாலை ரோந்து வாகன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கொடி கம்பம் நட அனுமதி இல்லை. எனவே குழி தோண்டக் கூடாது என கண்டிப்புடன் தெரிவித்தனர். ஆனால் போலீசாருக்கும், அ.ம.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரோந்து வாகன அதிகாரி அருண்கு மார் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூத்தியார் குண்டுவை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் கண்ணன்(வயது33), வேல்முருகன்(18), சின்னன்(43), திரவியம்(53), பழனிகுமார்(35), பால முருகன்(32) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். சேகர் என்பவரை தேடி வருகின்றனர்.
- திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
- ஓமியோபதி பயிற்சி கல்லூரி மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
திருமங்கலம்:
தமிழகத்தில் உள்ள ஒரே அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி திருமங்கலத்தில் உள்ளது. இந்த கல்லூரியில் 52 மாணவர்கள் 4½ ஆண்டு கால மருத்துவ படிப்பை முடித்து ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிய வேண்டும்.
பயிற்சி மருத்துவராக பணியில் இருப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அரசு ஓமியோபதி பயிற்சி கல்லூரி மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தொடர்ந்து ஊக்கத்தொகை வழங்க மறுக்கும் பட்சத்தில் வீதியில் இறங்கி போராட தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- மேற்கண்ட தகவலை சமயநல்லூர் கோட்ட மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை
சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள அலங்காநல்லூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (11-ந்தேதி) காலை 9மணி வரை மாலை 5மணி வரை பரவை, பரவை காலனி, கோவில்பாப்பாகுடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழநெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார்நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை சமயநல்லூர் கோட்ட மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
- ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- கொலை தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து சோனைராஜை கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாடக்குளம் தனத்துவம்புதூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது20). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சோனைராஜ்(40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சோனைராஜ், ஜெயக்குமார் வீட்டுக்கு சென்று ஆபாசமாக பேசி பிரச்சினை செய்துள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சோனைராஜ் தான் மறைத்து கொண்டுவந்திருந்த அரிவாளை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயக்குமாரை சரமாரியாக வெட்டினார்.
இதனை தடுக்க வந்த அவரது தந்தை அய்யனனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அய்யனனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கொலை தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து சோனைராஜை கைது செய்தனர்.
- மதுரையில் பிடிபட்ட நபரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.
சாத்தான்குளம்:
மதுரை கீரைதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஒருவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் பிடித்தனர். அவரிடம் மதுரை போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் புதுக்குளம் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் வேனில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.
அவரது தகவலின் பெயரில் மதுரை போலீசார் உடனடியாக வேலவன் புதுக்குளம் கிராமத்திற்கு விரைந்து வந்தனர். நேற்று நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது நிறுத்தப்பட்டிருந்த வேனை சோதனை செய்தனர்.
அதில் சுமார் 500 மூட்டைகளில் 2,500 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மதுரை போலீசாருடன், சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தனர்? இதனை தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மதுரையில் பிடிபட்ட நபரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே நேற்று திருச்செந்தூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சா பிடிபட்ட நிலையில் இன்று சாத்தான்குளம் 2,500 கிலோ கஞ்சா பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.
- பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.
- மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 514 என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
திருப்பரங்குன்றம் :
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சூரக்குளத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 19). கடந்த 2021-ல் திருநகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 17 வயதில் ஆர்த்தி பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது இவர் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வை, தனித்தேர்வராக எழுதி இருந்தார்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து ஆர்த்தி தனது தேர்வு முடிவை ஆன்லைனில் பார்த்தார்.
அப்போது தமிழில் 100-க்கு 138 மதிப்பெண் என்று பட்டியலில் அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் மதிப்பெண் பட்டியலில் ஆங்கில பாடத்தில் 100-க்கு 92, கணிதத்தில் 56, இயற்பியலில் 75, வேதியியலில் 71, உயிரியலில் 82 என்று தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்று இருந்தார். மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 514 என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என 4 பாடங்களில் அவர் தேர்ச்சி பெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது மாணவியை மட்டுமல்ல அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100-க்கு 138 மதிப்பெண் இடம்பெற்று இருப்பது பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. தன் மதிப்பெண் பட்டியலில் ஏற்பட்டுள்ள பிழைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என மாணவி ஆர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
- பிறந்த பெண் குழந்தை ஒரே நாளில் இறந்தது.
- பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராம் (வயது34). இவரது மனைவி ராதிகா (32). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராதிகா மீண்டும் கர்ப்பமடைந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவ மனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று (8-ந் தேதி) அவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. அதற்கு பின்பு டாக்டர்கள் பரிசோதனைக்கு பின்பு தாயும், சேயும் நலமுடன் இருந்தனர்.
இந்த நிலையில் அந்த குழந்தை இன்று காலை இறந்தது. பிறந்து நலமுடன் இருந்த பெண் குழந்தை ஒரே நாளில் இறந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை
மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மத்திய அரசு வழங்கியது போல நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி, திருமங்கலம் தாசில்தார் அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மணல் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரையில் கடந்த 15 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் கடைவீதிகளுக்கு முன்புள்ள சாலை குண்டுகுழியுமாக மாறிவிட்டன. அதில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இேதபோல் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் சாலையோரம் சேறும், சகதியுமாகி மக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழையில் சேதமான சாலைகளை சீரமைக்கவும் ,சேறான பகுதிகளில் மணல் கொட்டவும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தாமதமின்றி சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மணல் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






