என் மலர்
மதுரை
- திருமங்கலம் அருகே ஓய்வு பெற்ற துணை தாசில்தார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சிவகு மார்(வயது60). துணை தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மாலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக சென்றுவிட்டார். அவரது மகன் தாயுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனது பூர்விக வீட்டிற்கு சென்றார். அங்கு மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய புகாரின்பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்பு சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிவகுமார் தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்த நிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளார்.
- முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த பொன் காந்திமதி நாதன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலால் கொடூரமாக கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றப்படுகையில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக புகார் அளித்துள்ளார்.
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்த நிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளார். இருப்பினும் போலீசார் லூர்து பிரான்சிஸ்சுக்கு போதிய பாதுகாப்பு வழங்க தவறிவிட்டனர்.
இந்த வழக்கு முறப்பநாடு காவல் ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. முறப்பநாடு காவல் ஆய்வாளர் மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து லஞ்சத்தை பெற்றுக் கொண்டு மணல் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.
இந்த சூழலில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் இந்த வழக்கை விசாரித்தால் இந்த வழக்கின் உண்மை வெளிவராது. ஆகவே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பதற்காக நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், வழக்கு விசாரணை முறையாக சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இது மொத்த மாநிலத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அரசின் அறிக்கையின் படி தென் மண்டல காவல்துறை தலைவர் கண்காணிப்பின் கீழ், துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 4 வாரத்தில் குற்றப்பத்திரிகையை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் 3 வாரத்தில் மாவட்ட நீதிபதிக்கு வழக்கை மாற்ற வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி 2 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
- திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் 31 கி.மீ. தூரத்துக்கு முதற்கட்டமாக மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை கட்டுமான பணிகளை அடுத்த ஆண்டு தொடங்கி 2027-ம் ஆண்டு முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மதுரை:
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரு நகரங்களாக விளங்கும் கோவை, திருச்சி, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் 31 கி.மீ. தூரத்துக்கு முதற்கட்டமாக மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 கி.மீ. தூரத்திற்கு அமைய உள்ள மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் 10 ரெயில் நிறுத்தங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக திருமங்கலம் முதல் வைகை யாற்று வழியாக ஒத்தக்கடை வரை செல்லும் வழித்தடத்தில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ½ கி.மீ. தூரத்துக்கும் இந்த பரிசோதனை நடைபெறுகிறது. நவீன எந்திரம் மூலம் 30 அடி ஆழம் தோண்டப்பட்டு மண்ணின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தப்பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை கட்டுமான பணிகளை அடுத்த ஆண்டு தொடங்கி 2027-ம் ஆண்டு முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது முதற்கட்டமாக ரெயில் வழித்தடம் அமைய உள்ள பகுதிகளில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் மண்ணின் தன்மை மாறுபட்டு உள்ளது. இதனை தனித்தனியாக சேகரித்து ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்ப உள்ளோம் என்றனர்.
- அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- அமைச்சரவை மாற்றத்தால் தி.மு.க.வின் பேஸ்மட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது என்று பேசினார்.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோரது பிறந்தநாள் விழாவை திராவிட இயக்க எழுச்சி நாளாகவும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இளைஞர்கள் எழுச்சி பெருவிழாவாகவும் நடத்தி வருகிறோம்.
அதனைத்தொடர்ந்து இன்றைக்கு 1½ கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 8 கோடி மக்களை பாதுகாத்து வரும் எடப்பாடியாரின் பிறந்தநாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, வறுமை ஒழிப்பு தினமாகவும், இளைஞர் எழுச்சி திரு விழாவாகவும், ஜெயலலிதா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. சோதனை யான காலத்தில் அதனை வென்றெடுத்து சாதனைதான் படைத்துள்ளது. தற்போது தி.மு.க.வின் பேஸ்மட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. அதை சரி செய்ய அமைச்சரவை மாற்றத்தை முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ளார்.
நாட்டின் நிதி அமைச்சர் இன்றைக்கு முதல்- அமைச்சரின் வீட்டு நிதியை கையாளும் ரகசியத்தை கூறியுள்ளார். இதற்கு உரிய பதிலை சொல்ல வேண்டும். அமைச்சரவை மாற்றம் என்பது கண்துடைப்பு நாடகமாகும்.
அதி.மு.க.வை அழிக்க பல்வேறு சூழ்ச்சிகளை ஸ்டாலின் செய்து பி.டீம், சி.டீம் என்பதை இயக்கினார். அந்த டீம் எல்லாம் அதி.மு.க.வின் துரோகத்தின் டீமாக உள்ளது.
அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களில் தொன்று தொட்டு ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசலில்தான் நடைபெற்று வரும். ஜல்லிக் கட்டு விழாவிற்கு வாடி வாசல் மூடப்படுமா? என்று மக்கள் இன்றைக்கு அச்ச மடைந்துள்ளனர்.
அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டிற்கு மைதானத்தைக் கட்ட யாரும் கோரிக்கை வைக்கவில்லை. பாரம்பரியமாக வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தாமல், மூடுவிழா கண்டால் மக்களி டம் இருந்து கடும் கொந்த ளிப்பை தி.மு.க. சந்திக்க வேண்டியது வரும். இன்றைக்கு கலைஞர் நூலகம், கலைஞருக்கு பேனா அமைக்க பணம் இருக்கிறது. ஆனால் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயக்க பணம் இல்லை என்று கூறு கிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.22 கோடி வரை சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சரவணன், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார்.
- தைலக்காப்பு சாத்தப்படாததால் நேரடியாக கள்ளழகரை கோவில் மூலஸ்தானத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து 3-ந்தேதி பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மறுநாள் புதூரில் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் எழுந்தருளிய கள்ளழ கருக்கு திருமஞ்சனம் நடந்தது.
கடந்த 5-ந்தேதி உலக பிரசித்தி பெற்ற வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 6 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் வைகை யாற்றில் இறங்கிய கள்ளழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. 7-ந் தேதி இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளித்தார். மறுநாள் (8-ந்தேதி) அதிகாலை தமுக்கம் கருப்பண்ணசாமி கோவில் முன்பு வையாழியாக உருமாறி கள்ளழகர் தங்க பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார். நேற்று மதியம் 11 மணியளவில் கள்ளழகர் இருப்பிடம் சென்றார்.
3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை கள்ளழகரை பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மதியம் கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர் அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி னார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோவிலின் மூலஸ்தானத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் சுந்தரராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி, கள்ளழ கரையும் ஒருசேர தரிசனம் செய்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் கோவிலை விட்டு புறப்பாடான நேரத்தில் மூலவரான சுந்தரராஜ பெருமாளுக்கு தைலக் காப்பு சாத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் அவரை தரிசிக்க முடியவில்லை. அப்போது திருவிழாவில் பங்கேற்று இருப்பிடம் வந்த கள்ளழகர் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்படாமல் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளி னார். மூலவரை வணங்க முடியாத காரணத்தால் பக்தர்கள் கள்ளழகரை சேவித்து சென்றனர். ஆனால் இந்த ஆண்டு மூலவருக்கு தைலக்காப்பு சாத்தப்படாததால் நேரடியாக கள்ளழகரை கோவில் மூலஸ்தானத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
- மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 கிலோ எடையுள்ள தைராய்டு கட்டி அகற்றப்பட்டது.
- இது போன்ற பிரச்சினைகள் புற்றுநோயாக கூட மாறிவிடும்.
மதுரை
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ எடையுள்ள தைராய்டு கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதுகுறித்து மதுரை நரிமேடு சரவணா மருத்துவமனை டாக்டர் சரவணன் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 63 வயது பெண் எங்களது மருத்துவ மனைக்கு வெளி நோயா ளியாக வந்தார். அவரை பரிசோதித்ததில் கழுத்துப் பகுதியில் பெரிய அளவி லான தைராய்டு கட்டி இருப்பது கண்டறி யப்பட்டது.
சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அந்த கட்டி இருந்துள்ளது. உடனடியாக சரவணா மருத்துவ மனை அறுவை சிகிச்சை குழுவி னரின் உதவியுடன் அந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இந்த கட்டி சுமார் 2 கிலோ எடையுள்ளதாக இருந்தது.
கிராமப்புற மக்கள் அறியாமையால் ஆரம்ப கட்டத்திலேயே இது போன்ற கட்டிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இது போன்ற கட்டிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். இதற்காக ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும். இல்லையெனில் இது போன்ற பிரச்சினைகள் புற்றுநோயாக கூட மாறிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை அருகே தபால்காரர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
- இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்தவர் தேவராஜன் (வயது57). இவர் பழைய குயவர்பாளையம் ரோட்டில் உள்ள தபால் அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. சம்பவத்தன்று பணியில் இருந்த தேவராஜன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சக ஊழியர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் தவமணி. இவர் அரசு நில அளவை பிரிவில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதன் காரண மாக அவரது வீடு பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கும். அவ்வப் போது உசிலம்பட்டியில் உள்ள வீட்டுக்கு தவமணி வந்து செல்வார்.
இந்தநிலையில் சம்பவத் தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த நகை-பணத்தை திருடிக்கொண்டு தப்பினர். மறுநாள் காலையில் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தவமணி வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடையந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
வீட்டில் யாரும் இல்லா ததால் கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு உடனடியாக தெரிய வில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
- திருவேடகம் நீலமேகம், ஒன்றிய இளைஞரணி பால்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தில் தி.மு.க. கிளை சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சேகர், மாநில பொதுக்குழு ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கேபிள்ராஜா வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பேரூராட்சி சேர்மன்கள் ஜெயராமன், பால்பாண்டி, பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ், நகர துணைசெயலாளர் ஸ்டாலின், பொருளாளர் கண்ணன், அண்ணாதுரை, இளைஞரணி வெற்றிசெல்வம், ஊராட்சி தலைவர்கள் ஆனந்தன், சிறுமணி, சகுபர் சாதிக், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, கோகிலா சரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகா வீரபாண்டியன், விவசாய அணி முருகன் மற்றும் ராஜாராம், ராஜா, பெரியகருப்பன், திருவேடகம் நீலமேகம், ஒன்றிய இளைஞரணி பால்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மேலூரில் தி.மு.க. கூட்டம் நடந்தது.
- மேலூர் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.
மேலூர்
மேலூர் நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செக்கடி திடலில் நடந்தது. நகர செயலாளர் முகமது யாசின் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் சேகர், ரமேஷ், மணிமாலா குணா, பொருளாளர் மலம்பட்டி ரவி முன்னிலை வகித்தனர். அவை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் தமிழன் பிரசன்னா சிறப்புரையாற்றினார்.
மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திர பிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபேதா பேகம் அப்பாஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகு பாண்டி, ரகுபதி, துரைபுகழேந்தி, கென்னடியான், துரை மகேந்திரன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் எழில்வேந்தன், முருகானந்தம், அலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலூர் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.
- தற்கொலை செய்த வாலிபர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது.
- 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு காலனியை சேர்ந்தவர் காஞ்சி வனத்துரை. இவரது மகன் வருண்(23). நேற்று இவர் குடும்ப பிரச்சி னை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தந்தை காஞ்சி வனத்துரை, உறவின ர்களுடன் சேர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் வருணின் உடலை கூத்தியார் குண்டு சுடுகாட்டில் எரித்து விட்டனர்.
தகவல் அறிந்த நிலையூர் கிராம நிர்வாக அதிகாரி கந்தவேலு இதுகுறித்து ஆஸ்டின் பட்டி போலீசில் புகார் செய்தார். இதை யடுத்து போலீசார் காஞ்சி வனத்துரை, மகன் பாவ ஈஸ்வரன், உறவினர்கள் கார்த்திக், பிரவீன், பிச்சை ராஜா, வேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வைகாசி மாதம் புது வீடு கட்டுவது தொடர்பாக பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கமளித்தார்.
- கட்டிட வேலைகள் தள்ளி போகலாம் அல்லது பணப்பிரச்சனை, காரியத்தடை வரலாம் என்றார்.
மதுரை
பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா வீடு கட்டுவது தொடர்பாக கூறியதாவது:-
பொதுவாக தை மாதத்திற்கு பிறகு மாசி, பங்குனி, புது வீடு கட்ட தொடங்க மாட்டார்கள். ஆனால் எல்லோரும் வைகாசி மாதத்தில் புது வீடு கட்ட தொடங்குவது வழக்கமாகும். சித்திரை மாதத்தில் சிலர் திருமணம் செய்வார்கள். வைகாசி மாதம் சுப காரியங்கள் செய்யலாமா? என்றால் தாராளமாக செய்யலாம். ஆனால் புது வீடு கட்ட தொடங்கலாமா? என்றால் சற்று யோசித்து தான் செயல்பட வேண்டுமாம். ஏனென்றால் வைகாசி மாதம் புதியதாக வீடு கட்ட தொடங்கினால், கட்டட வேலைகள் தள்ளி போகலாம் அல்லது பணப்பிரச்சனை, காரியத்தடை வரலாமாம்.
கிரகப்பிரவேசம் வைப்பதிலும் தாமதம் ஏற்படலாமாம். ஆனால் வைகாசி மாதம் புதியதாக உள்ள வீட்டில் தாராளமாக குடி போகலாம். வீடு கட்ட தொடங்குவதை மட்டும் வைகாசி மாதத்தில் தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.






