மேலூரில் தி.மு.க. கூட்டம்

மேலூரில் தி.மு.க. கூட்டம் நடந்தது. மேலூர் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.
மேலூரில் தி.மு.க. கூட்டம்
Published on

மேலூர்

மேலூர் நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செக்கடி திடலில் நடந்தது. நகர செயலாளர் முகமது யாசின் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் சேகர், ரமேஷ், மணிமாலா குணா, பொருளாளர் மலம்பட்டி ரவி முன்னிலை வகித்தனர். அவை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் தமிழன் பிரசன்னா சிறப்புரையாற்றினார்.

மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திர பிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபேதா பேகம் அப்பாஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகு பாண்டி, ரகுபதி, துரைபுகழேந்தி, கென்னடியான், துரை மகேந்திரன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் எழில்வேந்தன், முருகானந்தம், அலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலூர் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com