மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை

மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மணல் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை
Published on

மதுரை

மதுரையில் கடந்த 15 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் கடைவீதிகளுக்கு முன்புள்ள சாலை குண்டுகுழியுமாக மாறிவிட்டன. அதில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இேதபோல் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் சாலையோரம் சேறும், சகதியுமாகி மக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழையில் சேதமான சாலைகளை சீரமைக்கவும் ,சேறான பகுதிகளில் மணல் கொட்டவும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தாமதமின்றி சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மணல் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com