என் மலர்tooltip icon

    மதுரை

    • கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நகர் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வைகாசி பெருந்திரு விழா விமரிசை யாக கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நாளை(26-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றம் நடக்கிறது.

    14 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் பெருமாள் சிம்மம், கருடன், அனுமார், சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. 5-ந்தேதி சுவாமி குதிரை வாக னத்தில் வைகையாற்றில் இறங்கி ராமராயர் மண்ட பத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசா வதார நிகழ்ச்சி நடக்கிறது.

    6-ந்தேதி குதிரை வாகனத்தில் கோவிலுக்கு திரும்புகிறார். 8-ந்தேதி உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • மேலூர் அருகே பட்ட சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி கிராமத்தில் உள்ள பிரான்மலை திருமலைசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி பிரான்மலை ராமசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் யாகசாலையில் இருந்து காப்புகட்டிய பக்தர்கள் புனித தீர்த்ததை எடுத்து சென்றனர். பின்னர் கோபுர கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கோவில் முன்பு நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கூத்தப்பன்பட்டி பெரியஅம்பலம், சின்னஅம்பலம் வகையாறவினர் செய்திருந்தனர்.

    • மதுரை தாதம்பட்டியில் பால விநாயகர் கோவில் மண்டல பூஜை நடந்தது.
    • இந்த சிறப்பு பூஜையை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார் கிருஷ்ணகுமார் செய்தார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டு தாதம்பட்டி சடையாண்டி கோவில் வளாகத்தில் பால விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடந்தது. இதனை தொடர்ந்து தினமும் மண்டலபூஜை நடந்து வந்தது. 48-வது நாளான நேற்று மண்டல பூஜை நிறைவடைந்தது. இதையொட்டி வெள்ளை நிறபால விநாயகருக்கு பால், பன்னீர், தேன், நெய், திரவிய பொடி, திருநீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடந்தது. விநாயகர் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். இந்த சிறப்பு பூஜையை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார் கிருஷ்ணகுமார் செய்தார்.

    • ஜல்லிக்கட்டு மைதான பணிகளை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • கலெக்டர் சங்கீதா, யூனியன் ஆணையாளர் வள்ளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுமான பணிகளை பொதுபணித்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, யூனியன் ஆணையாளர் வள்ளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • திருமங்கலம் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகேயுள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணி(75). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கல்யாணியின் மகன் தங்கப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 முதியவர்கள் பலியாகினர்.
    • சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது60). இவர் கப்பலூரில் உள்ள மில்லில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு பணி முடிந்து 4 வழிச்சா லையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஜெயபாண்டியின் மகன் பாண்டி கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் பேரை யூர் அருகேயுள்ள துள்ளுக் குட்டி நாயக்கனூரை சேர்ந்தவர் மருதமுத்து(60). இவர் ஏ.கிருஷ்ணாபுரத்தில் நடந்த கோவில் திருவிழா விற்கு உறவினர் சமயகருப்பு வுடன் இருசக்கர வாக னத்தில் சென்றார். சமய கருப்பு வாகனத்தை ஓட்டி னார். அதிகாரிப்பட்டி-சின்ன கட்டளை சாலையில் சென்றபோது பின்னால் அமர்ந்திருந்த மருதமுத்து நிலைத்தடுமாறி வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மருத முத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அலங்காநல்லூர் அருகே பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
    • இதற்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் செல்வ விநாயகர், மாசான கருப்புசாமி திருக்கோவில் வைகாசி உற்சவ விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த இந்த விழாவில் சாத்தவுராயன் சுவாமிக்கு வாண வேடிக்கையுடன் பக்தர்கள் பழக்கூடை எடுத்து சென்றனர். இதை தொடர்ந்து செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கிடாய் வெட்டுதல் நடந்தது. ஏற்பாடுகளை 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • வசந்த உற்சவம் ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.
    • 2-ந்தேதி சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடக்கும். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபம் என்று அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட இந்த மண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மேலும் மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

    வைகாசி வசந்த உற்சவத்தின் போது மீனாட்சி, சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி தருவார். அப்போது கோடை காலமாக இருப்பதால் சூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக அகழி வெட்டப்பட்டது. சுற்றிலும் தண்ணீரால் சூழ்ந்த இந்த மண்டபத்தை நீராழி மண்டபம் என்றும் அழைப்பர்.

    மேலும் இந்த மண்டபத்தில் புராண கதைகளை தெரிவிக்கும் வகையில் வடிவமைத்த சிலைகள், எங்கும் காணமுடியாத சிவனின் திருவிளையாடல் புராணத்தை விளக்கும் சிலை வடிவங்கள், நாயக்கர் காலத்தை சிறப்பிக்கும் வகையில் செதுக்கப்பட்ட தத்ரூபமான சிற்பங்கள் உள்ளன. திருமலைநாயக்கர் காலத்தில் இருந்து வசந்த உற்சவம் இங்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    திருவிழா நாட்களை தவிர இந்த மண்டபம் பக்தர்கள் அங்கு ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. பின்பு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோவிலில் பூஜைக்கு தேவையான குங்குமம், தாலி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணி கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் சில்வர் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் அங்கு செயல்பட்டு வந்தது. வணிக மண்டபமாக மாறியதால் அங்குள்ள சிறப்புகள் நாளடைவில் பக்தர்களுக்கு தெரியாமல் போனது.

    எனவே தொல்லியல், சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து அந்த புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை காணும் வகையில் அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்தது. அதற்காக அங்குள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று தொடங்கி வருகிற ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும்.

    பின்பு சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சென்றடைவர். வருகிற 2-ந்தேதி அன்று காலையிலேயே சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும். மேலும் மண்டபத்தை சுற்றி கடந்த ஆண்டு லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. ஆனால் இந்தாண்டு மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பணிகள் நடப்பதால் தண்ணீர் நிரப்பப்பட வில்லை. மேலும் அரசு உத்தரவின்படி புதுமண்டபத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் அடுத்தாண்டு தண்ணீர் நிரப்பி திருவிழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சுகாதார நிலையம் பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
    • வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை

    மனிதநேய மக்கள் கட்சியின் வக்கீல் அணி மாநில துணை செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அஞ்சுகோட்டை அரசு துணை சுகாதார நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த துணை சுகாதார நிலையத்தில் தங்கி பணிபுரியும் வகையில் கிராம சுகாதார செவிலியர் ஒருவரும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு செவிலியரும் அங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த துணை சுகாதார நிலைய எல்கைக்குள் உள்ள அஞ்சுகோட்டை, மேலக்கோட்டை, பொட்டக்கோட்டை, கரையக்கோட்டை, வாணியேந்தல், செங்கமடை, அழகமடை, குஞ்சங்குளம், வெளியங்குடி உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சளி, காய்ச்சல், விஷ வண்டுகள், பாம்புகள் கடித்தல் உள்ளிட்ட நோய்களுக்காக இங்கு வரும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்பட அனைவருக்கும் முதலுதவி சிகிச்சையும், அந்த பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டி பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தற்சமயம் கட்டிட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் அடிக்கடி கீழே விழுந்து வருகிறது.

    இதனால் கடந்த சில மாதங்களாக அங்கு பணியில் உள்ள 2 செவிலி யர்களும் இந்த துணை சுகாதார நிலையத்திற்குள் வர அச்சப்படுகின்றனர். எனவே அந்த கட்டிடம் பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. மேலும் கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் பருவ மழை காலங்களில் அப்பகுதியில் பெய்த தொடர் மழையால் இந்த கட்டிட சுவர்களில் மழைநீர் இறங்கி பழுதானதால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    எந்த நேரத்திலும் இந்த கட்டிடம் இடிந்து கீழே விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அப்பகுதி மக்கள் விபத்து மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள திருவாடானை மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. போர்க்கால நடவடிக்கை யாக அஞ்சுகோட்டை துணை சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நோயாளிகளின் சிகிச்சை பெற வரும் சுகாதார நிலையம், பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு வக்கீல் வஞ்சிக்கோட்டை, துணை சுகாதார நிலைய கட்டிடம் விரைவில் அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    விசாரணை முடிவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தது குறித்து அரசு தரப்பில் வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா இன்று தொடங்குகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காப்பு கட்டுதளுடன் தொடங்கு கிறது. விழாவையொட்டி இன்று மாலை 6 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு உற்சவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் எழுந்தரு ளுவார்.

    அங்கு சிறப்பு தீப, தூப, ஆராதனைகள் நடைபெற்று ஓதுவார்களால் பாடல் பாடப்படுகிறது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் மீண்டும் உற்சவர் வருகிற 1-ந் தேதி வரை மாலை தோறும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 2-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி வருடத்திற்கு ஒருமுறை சண்முகர் சன்னதியில் இருந்து வள்ளி தெய்வானை யுடன் கோவில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரும் பாலால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால் காவடி, பறவை காவடி, பால்குடம் உள்ளிட்ட பல்வேறு வகையில் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 3-ந் தேதி மொட்டை அரசு திருவிழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • மேலூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
    • மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகு வலையபட்டியில் பெரிய கருப்பசாமி மற்றும் பூத கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த பகுதி மக்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இன்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி அங்குள்ள கம்புலியன் கண்மாயில் தொழு அமைக்கப்பட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து 220 காளைகள் கொண்டு வரப்பட்டன. கிராம முக்கியஸ்தர்கள் வேட்டி, துண்டுகளை மாடுகளுக்கு அணிவித்தனர். மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    இதில் மாடுகளை பிடித்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மேலூரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்.
    • ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இளைஞ ரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட செய லாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு பேசியதாவது:-

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு 1 லட்சம் பேர் வீதம் 3 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வருகின்ற 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.

    தி.மு.க.வை கண்டித்து வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) மேலூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் ஏராள மானோர் கலந்து கொள்ள வேண்டும்.

    தமிழக முதல்வர் ஏற்கனவே முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றார். அங்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரிவித்தனர்.ஆனால் அது தொடர்பாக புதிய நிறுவனங்களோ, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளோ பெற்றதாக தெரியவில்லை.

    தற்போது மீண்டும் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் செல்லும் முதல்வர் ஜப்பானில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்திற்கு நிதி உதவி அளிக்கவுள்ள ஜிகா நிறுவனத்தின் அதிகாரி களை சந்தித்து விரைந்து நிதிகளை அனுப்ப கோரிக்கை விடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×