என் மலர்tooltip icon

    மதுரை

    • புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவில் தி.மு.க. பங்கேற்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டிளித்தார்.

    மதுரை

    மதுரை பரவை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐ.டி. ரெய்டு மிக தாமதமாக நடக்கிறது. இது முன்கூட்டியே நடந்தி ருந்தால் கள்ளச்சாராய மரணம், போலி மதுவால் ஏற்பட்ட மரணம் உள்ளிட்ட வை நடந்திருக்காது. சோத னைக்கு வந்த ஐ.டி. அதிகாரிகளை தாக்குவதன் மூலம் தி.மு.க. வன்முறை கட்சி என்பதை காட்டுகிறது.

    முதல்-அமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்று பயணம் இன்ப சுற்றுலா போல தான் இருக்கிறது. அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை. முதலீடு செய்வதற்கு சென்றுள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர்., போல வித விதமான உடைகளை அணிந்து கொண்டு பின்னி எடுக்கிறார். அதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. தி.மு.க. ஒரு விளம்பர அரசு, செயல்படுகிற அரசு அல்ல.

    காவல்துறை டி.ஜி.பி.,யை சுதந்திரமாக செயல்பட விடவில்லை.அவருடைய கை கட்டப்பட்டுள்ளது. அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழ்நாட்டில் மதுவால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.

    புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வில் தி.மு.க. பங்கேற்க வேண்டும். செங்கோல் மீது மத சாயம் பூச கூடாது. செங்கோல் விஷயத்தில் உண்மையான தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி பெறுவதற்கு உதவாத தி.மு.க. இன்று அவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என சொல்வது வெளிவேஷம்.

    ஐ.பி.எல்., போட்டியில் சி.எஸ்.கே தான் வெற்றி பெற வேண்டும். தோனி கோப்பையை கைப்பற்ற வேண்டும். ''தல'' என சொல்லப்படுபவர்கள் யாரும் தல இல்லை.உண்மையான தல தோனி ஜெயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலங்காநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள மேலசின்னணம்பட்டி கிராமத்தில் மூங்கிலணை காமாட்சி அம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி புனித நீர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    • வாடிப்பட்டி அருகே கோவில் திருவிழா நடந்தது.
    • முளைப்பாரி ஊர்வலத்துடன், மேளதாளம் முழங்க அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நீரேத்தான் வளையல்கார தெரு காளியம்மன் கோவில் 51-ம் ஆண்டு உற்சவ வைகாசி திருவிழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் சிறப்பு அலங்காரத்தில் பட்டு உடுத்தி அம்மன் ஊஞ்சல் ஆட்டம், பூச்சொரிதல் விழாவும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. 2-ம்நாள் சுவாமி பெட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், முளைப்பாரி, மாவிளக்கு எடுக்கப்பட்டது. 3-ம்நாள் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தீச்சட்டி எடுத்தல், பால்குடம், வேல் பூட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. 4-ம் நாள் காலை முளைப்பாரி ஊர்வலத்துடன், மேளதாளம் முழங்க அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. பூஜை ஏற்பாடுகளை பூசாரி பொன் பாண்டி செய்தார்.

    • வாடிப்பட்டியில் அனுமதியின்றி இயங்கிய பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • சமயநல்லூர், சிக்கந்தர்சாவடியில் தலா ஒரு பாரும் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தாதம்பட்டி நீரேத்தான் மதுபான கடை அருகில் அனுமதியின்றி செயல்பட்ட 2 மதுபான பார்களும், சமயநல்லூர், சிக்கந்தர்சாவடியில் தலா ஒரு பாரும் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த பணியில் மதுரை தெற்கு கோட்ட கலால் தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் முகைதீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயராஜ், சிவலிங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் ஈடுபட்டனர். திடீரென்று அதிகாரிகள் சீல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் அந்தந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருவேடகத்தில் ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா- சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமணத்தை அமைச்சர் பி.மூர்த்தி நடத்தி வைத்தார்.
    • சத்ய பிரகாஷ் உள்ளிட்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர்.சரவணன் மகன் எஸ்.வி.விஷ்ணு ராமிற்கும், மாரணி வாரியேந்தல் டி. ண்ணன்-தீபா மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இந்த திருமணம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் சி.பி.ஆர். அருவுகம் மகாலில் நடந்தது. மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான பி. மூர்த்தி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

    விழாவிற்கு வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர் வரவேற்றனர்.

    ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா, சோழவந்தான் ஒன்றிய கவுன்சிலர்-பேரூர் செயலாளர் எஸ்.என். சத்ய பிரகாஷ் உள்ளிட்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    • பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • செங்கோட்டை-நெல்லை வழித் தடத்தில் இயக்கப்படும் ரெயில்களும் வழக்கமான நேரத்தை விட முன்னதாக இயக்கப்படுகிறது.

    மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான பணி நிறைவடைந்துள்ளது. மேலும், வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி வரையும், திருநெல்வேலி முதல் நாகர் கோவில் வரையும் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இரட்டை ரெயில்பாதை பணி நிறைவு பெறவுள்ள நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது கோவை-நாகர் கோவில் விரைவு ரெயில், சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி விரைவு ரெயில்கள் முன்பை விட முன்னதாக வந்து சேருகின்றன. இந்தப் பகுதியில் பணி நிறைவடையும் நிலையில் அனைத்து ரெயில்களும் முன்பை விட 10 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும்.

    மேலும், செங்கோட்டை-நெல்லை வழித் தடத்தில் இயக்கப்படும் ரெயில்களும் வழக்கமான நேரத்தை விட முன்னதாக இயக்கப்படுகிறது. ரெயில்களின் வேக அதிகரிப்பு பற்றி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சங்கர் குப்பக்கடா சிம்மக்கல் சென்றபோது மயங்கி விழுந்தார்.
    • சங்கர் குப்பக்கடாவை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மதுரை:

    கர்நாடக மாநிலம் பகல் கோர்ட்டை சேர்ந்தவர் சங்கர் குப்பக்கடா (வயது42). இவர் மனைவி மற்றும் குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிம்மக்கல் சென்றபோது மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி கலாவதி குப்பக்கடா விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்நாடக பக்தர் மரணத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஞானஒளிவுபுரத்தில் கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபரை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    மதுரை

    மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி முதல் தெருவை சேர்ந்தவர் முனியசாமி (39). இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கருதுகின்றனர். இது குறித்து முனியசாமியின் தந்தை பூபதி கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமி சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அவரது கழுத்தில் எப்படி காயம் ஏற்பட்டது? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
    • கழிவை அகற்றி தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை கோவில் நகரமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சாமி தரிசனம் செய்யவும், சுற்றுலா இடங்களை பார்வையிடமும் வருகின்றனர். ஆனால் மதுரை நகரை தூய்மையாக பராமரிப்பதில் தொடர்ந்து மெத்தனம் காட்டப்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் குப்பை மேடுகளும், கழிவுநீர் தேங்கியிருப்பதையும் காணமுடியும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக பஸ் நிலையங்களை தூய்மைப்ப டுத்தும் பணிகள் தினமும் காலையில் தாமதமாகவே தொடங்குகிறது. மக்கள் நடமாட்டம் அதிகரித்த பின் சரியாக பணிகளை மேற்கொள்ளாமல் சென்று விடுகின்றனர். இதனால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியும் கழிவுகள் தேங்கியும் கிடக்கின்றன.

    நகரின் முக்கிய பகுதிகளை தூய்மை செய்யாமலேயே விட்டு விடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மேம்பாலங்களின் அடிப்பகுதிகளில் சரியான தூய்மைப் பணிகள் நடப்பதில்லை. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதே போல் பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேம்பாலம் பகுதிகளிலும் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது.

    மேலும் இந்தப் பகுதிகளை சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பகுதியை சுத்தமாக பராமரித்து மரக்கன்றுகளை நட்டால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இங்கு மர்ம நபர்களின் நடமாட்டத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க நகரில் ஆங்காங்கே கூடு தலாக சுகாதார வளாகங்கள் கட்டப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி வரலாற்று சிறப்பு வாய்ந்த திருமலை நாயக்கர் மகாலை சுற்றி குப்பைகள், கழிவுகள் கொட்டும் இடமாக மாறி உள்ளது. மகாலை ஓட்டியுள்ள பந்தடி தெரு வில் அசுத்தம் நிலவுகிறது. தெப்பக்குளத்தில் அண்மையில் பெய்த கோடை மழை மற்றும் வைகையில் திறந்தவிடப்பட்ட நீர் மூலம் மாரியம்மன் தெப்பக்குளம் நிரப்பப்பட்டது. ஆனால் அங்கு நிரம்பிய தண்ணீரில் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தெப்பக்குளத்தில் தேங்கியிருப்பதால் தண்ணீர் மாசுபட்டுள்ளதோடு, துர்நாற்றம் காரணமாக தெப்பக்குளம் பகுதிக்கு மக்கள் செல்வதை தற்போது தவிர்த்து வருகின்றனர். எனவே தெப்பக்குளத்தில் உள்ள கழிவை அகற்றி தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • பெட்ரோல் பங்க் ஊழியருக்கு இரும்புக்கம்பியால் அடி விழுந்தது.
    • கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை 

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி விக்கிர மங்கலத்தை சேர்ந்தவர் காசி. இவரது மகன் விக்ரம் (வயது24). இவர் மேலூர் மெயின் ரோடு உத்தங்கு டியில் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் வேலை பார்ப்பவர் ஆசாத்அலி. இவர்கள் பணியில் இருந்த போது உத்தங்குடி பாண்டிகோவில் தெருவை சேர்ந்த வேலு மகன் மணிவண்ணன் (27) என்பவர் ஒரு வேனில் வந்தார். அவர் அங்கு பெட்ரோல் நிரப்பும்போது ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் மோதி கொண்டனர். மணி வண்ணன், அஜித்குமார், கவுதம் ஆகிய 3 பேரும் அவதூறாக பேசிய, ஆசாத் அலியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து விக்ரம் கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மணிவண்ணன், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பி சென்ற கவுதமை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தொழிலாளர்கள் நலனுக்கான திட்டங்கள் பயனாளிகளை முழுமை யாக சென்ற டையவில்லை.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு கட்டுமானத் தொழி லாளர்கள் நலவாரி யத்தலைவர் பொன்குமார், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழி லாளர்கள் என மொத்தம் 362 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 3 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த அரசு பொறுப்பு வகித்த 10 ஆண்டுகால ஆட்சியில் தொழிலாளர்கள் நலனுக்கான திட்டங்கள் பயனாளிகளை முழுமை யாக சென்ற டையவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ஏதும் உயர்த்தி வழங்கப்பட வில்லை. முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற வுடன் ஏறத்தாழ 1 லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக் கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிலுவையில் இருந்தது கண்டறியப்பட்டது.

    இந்த நலத்திட்டங்கள் சம்பந்தப்பட்ட பயனாளி களுக்கு உடனடியாக சென்றடைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் சம்பந்தப்பட்ட பயனாளி களுக்கு முழுமை யாக சென்றடைய இந்த திராவிட மாடல் அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நிழல் தரும் மரங்கள் இல்லாததால் மதுரை நகர சாலைகளில் வெயில் சுட்டெரிக்கிறது.
    • வருங்காலங்களில் மதுரையில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என்பதில் அய்யமில்லை.

    மதுரை

    'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்', மரங்களை வெட்டக்கூடாது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், மரத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறியவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழை, ஆக்சிஜன், காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணிகளுக்கு மரங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அத்தகைய முக்கியத்துவம் உள்ள மரங்களை வெட்டக்கூடாது,  மரத்தை அப்புறப்படுத்தி னால் அதற்கு பதிலாக 5 மரங்களை நட வேண்டும் என நீதிமன்றமும் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் நடப்பது அதற்கு மாறாக உள்ளது.

    ஒரு காலத்தில் கடம்பவனம் என்றழைக்கப்பட்ட மதுரை நகரை சுற்றி மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. சாலையின் இருபுறமும் பசுமை போர்வை போல் மரங்கள் வளர்ந்து காணப்படும். காலப்போக்கில் வளர்ச்சி திட்டங்கள், நகர மயமாக்குதல் என்ற பெயரில் மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்தன.

    மதுரை நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் இருந்த ஆல, அரச மரம் என ஆயிரக்கணக்கான மரங்கள் சாலை விரிவாக்கம் காரணமாக வெட்டப்பட்டது.மதுரை- திருப்பரங்குன்றம் ரோடு, கே.கே. நகர் - ஒத்தக்கடை வேளாண் கல்லூரி சாலை, அழகர் கோவில் ரோடு, மாவட்ட நீதிமன்ற சாலை, நத்தம் ரோடு, வைகை கரை சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை, வில்லாபுரம், அவனியாபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை மற்றும் சிறிய தெருக்கள் முதல் பெரிய தெருக்களில் இருந்த மரங்கள் சாலை விரிவாக்கம் செய்ய வெட்டப்பட்டது. சில இடங்களில் மின் கம்பங்கள் நடுவதற்கும் மரங்கள் அகற்றப்பட்டன.

    சில மாதங்களுக்கு முன்பு மதுரை புதூர் பகுதியில் இருந்து அழகர் கோவிலுக்கு சாலை விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக சாலையோரத்தில் பல ஆண்டுகள் வளர்ந்து இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் அகற்றப்ப ட்டது.

    இதன் காரணமாக தற்போது சாலை வசதி மேம்படுத்தப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் வெயில் சுட்டெரிக்கும் போது நிழலுக்கு ஒதுங்க கூட மரங்கள் இல்லாதது வருத்தத்துக்குரிய விஷயம். இதுபோன்று நகரின் பல்வேறு சாலைகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு விட்டது.

    தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியில் நடந்து செல்ல முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் கடும் அவதி அடைகின்றனர். மதுரையில் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் சராசரி அளவு குறைந்து கொண்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வெப்பநிலையும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு இடத்தில் தட்பவெப்பநிலையை அங்குள்ள மரங்கள் நிர்ணயிக்கின்றன. ஆனால் நகரில் இருந்த மரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டதால் வருங்காலங்களில் மதுரையில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என்பதில் அய்யமில்லை.

    ×