பெட்ரோல் பங்க் ஊழியருக்கு இரும்புக்கம்பி அடி

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு இரும்புக்கம்பியால் அடி விழுந்தது. கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் ஊழியருக்கு இரும்புக்கம்பி அடி
Published on

மதுரை 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி விக்கிர மங்கலத்தை சேர்ந்தவர் காசி. இவரது மகன் விக்ரம் (வயது24). இவர் மேலூர் மெயின் ரோடு உத்தங்கு டியில் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் வேலை பார்ப்பவர் ஆசாத்அலி. இவர்கள் பணியில் இருந்த போது உத்தங்குடி பாண்டிகோவில் தெருவை சேர்ந்த வேலு மகன் மணிவண்ணன் (27) என்பவர் ஒரு வேனில் வந்தார். அவர் அங்கு பெட்ரோல் நிரப்பும்போது ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் மோதி கொண்டனர். மணி வண்ணன், அஜித்குமார், கவுதம் ஆகிய 3 பேரும் அவதூறாக பேசிய, ஆசாத் அலியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து விக்ரம் கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மணிவண்ணன், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பி சென்ற கவுதமை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com