search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
    X

    மதுரை கூடழலகர் கோவில் தெருவில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    • தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
    • கழிவை அகற்றி தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை கோவில் நகரமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சாமி தரிசனம் செய்யவும், சுற்றுலா இடங்களை பார்வையிடமும் வருகின்றனர். ஆனால் மதுரை நகரை தூய்மையாக பராமரிப்பதில் தொடர்ந்து மெத்தனம் காட்டப்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் குப்பை மேடுகளும், கழிவுநீர் தேங்கியிருப்பதையும் காணமுடியும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக பஸ் நிலையங்களை தூய்மைப்ப டுத்தும் பணிகள் தினமும் காலையில் தாமதமாகவே தொடங்குகிறது. மக்கள் நடமாட்டம் அதிகரித்த பின் சரியாக பணிகளை மேற்கொள்ளாமல் சென்று விடுகின்றனர். இதனால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியும் கழிவுகள் தேங்கியும் கிடக்கின்றன.

    நகரின் முக்கிய பகுதிகளை தூய்மை செய்யாமலேயே விட்டு விடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மேம்பாலங்களின் அடிப்பகுதிகளில் சரியான தூய்மைப் பணிகள் நடப்பதில்லை. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதே போல் பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேம்பாலம் பகுதிகளிலும் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது.

    மேலும் இந்தப் பகுதிகளை சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பகுதியை சுத்தமாக பராமரித்து மரக்கன்றுகளை நட்டால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இங்கு மர்ம நபர்களின் நடமாட்டத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க நகரில் ஆங்காங்கே கூடு தலாக சுகாதார வளாகங்கள் கட்டப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி வரலாற்று சிறப்பு வாய்ந்த திருமலை நாயக்கர் மகாலை சுற்றி குப்பைகள், கழிவுகள் கொட்டும் இடமாக மாறி உள்ளது. மகாலை ஓட்டியுள்ள பந்தடி தெரு வில் அசுத்தம் நிலவுகிறது. தெப்பக்குளத்தில் அண்மையில் பெய்த கோடை மழை மற்றும் வைகையில் திறந்தவிடப்பட்ட நீர் மூலம் மாரியம்மன் தெப்பக்குளம் நிரப்பப்பட்டது. ஆனால் அங்கு நிரம்பிய தண்ணீரில் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தெப்பக்குளத்தில் தேங்கியிருப்பதால் தண்ணீர் மாசுபட்டுள்ளதோடு, துர்நாற்றம் காரணமாக தெப்பக்குளம் பகுதிக்கு மக்கள் செல்வதை தற்போது தவிர்த்து வருகின்றனர். எனவே தெப்பக்குளத்தில் உள்ள கழிவை அகற்றி தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×