வெவ்வேறு விபத்துகளில் 2 முதியவர்கள் பலி

மதுரை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 முதியவர்கள் பலியாகினர்.சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு விபத்துகளில் 2 முதியவர்கள் பலி
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது60). இவர் கப்பலூரில் உள்ள மில்லில் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு பணி முடிந்து 4 வழிச்சா லையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஜெயபாண்டியின் மகன் பாண்டி கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பேரை யூர் அருகேயுள்ள துள்ளுக் குட்டி நாயக்கனூரை சேர்ந்தவர் மருதமுத்து(60). இவர் ஏ.கிருஷ்ணாபுரத்தில் நடந்த கோவில் திருவிழா விற்கு உறவினர் சமயகருப்பு வுடன் இருசக்கர வாக னத்தில் சென்றார். சமய கருப்பு வாகனத்தை ஓட்டி னார். அதிகாரிப்பட்டி-சின்ன கட்டளை சாலையில் சென்றபோது பின்னால் அமர்ந்திருந்த மருதமுத்து நிலைத்தடுமாறி வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மருத முத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com