என் மலர்tooltip icon

    மதுரை

    • ரோடு இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தை பொருத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன.
    • டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அமுதவாணன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா ராமசாமியாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ரோடு இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதன்படி 761 ரோடு இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான தகுதியாக கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    அந்த வகையில் நாங்கள் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்று உள்ளதால், ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தோம். ஆனால் இந்த பணிக்கு சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்தவர்கள் தான் தகுதியானவர்கள் என்று கூறி, அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    விதிமுறைகளின்படியும், அரசு ஊழியர்கள் சட்டத்தின்படியும் இந்த நடைமுறை சட்டவிரோதமானது. இதனால் எங்களை போன்ற பலரின் அரசு வேலை கனவாகவே போய்விடுகிறது. எனவே சட்டப்படி ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரோடு இன்ஸ்பெக்டர் பணி வழங்கவும், டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ரோடு இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தை பொருத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர். இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. இது ஏற்புடையதல்ல.

    எனவே கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்து சான்றிதழ் பெற்றுள்ள மனுதாரர்கள் தான் ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விதிமுறைகளின்படி தகுதியானவர்கள். எனவே அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • திருமண ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகேயுள்ள ஐராவதநல்லூர் விநாயகர் காலனியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகள் லாவண்யா(வயது22). இவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக லாவண்யாவுக்கு குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவரது பெற்றோர் வரன் பார்ப்பதை தீவிரப்படுத் தினர். ஆனால் திருமணத்தில் நாட்டமில்லாத லாவண்யா தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என பெற்றோ ரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஆனாலும் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.

    இதனால் மன வேதனை அடைந்த லாவண்யா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மூதாட்டி எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • படித்துறையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    மதுரை

    மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்தவர் சரோஜா(வயது80). இவர் சம்பவத்தன்று பேச்சியம்மன் படித்துறையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே சரோஜாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சரோஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் சரவணன், திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை யாராவது எரித்துக்கொலை செய்தார்களா? அல்லது தனக்கு தானே உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவ கல்லூரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கின்றனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள பாட்டம் கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு அந்த பெண் கல்லூரி அருகேயுள்ள திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அந்த பெண்ணை மறித்து மிரட்டியுள்ளார்.

    தொடர்ந்து மறைவான இடத்திற்கு அழைத்துச் ெசன்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. அதன் பின் அந்த நபர் அங்கிருந்து தப்பினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரி, திருமண மண்டபம் பகுதியில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கின்றனர்.

    • மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2,752 தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவத்தை அணிவகுப்பின் மூலம் காட்டினர்.
    • சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் மதுரையில் உள்ள தூய்மை பணியாளர்கள் அனைவரும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை திரண்டனர்.

    சாதனை முயற்சியாக 2752 தூய்மை பணியாளர்களும் கருணாநிதியின் தத்ரூப உருவத்தை தங்களது அணிவகுப்பின் மூலம் காட்டினார்கள். இதனை டிரோன் மூலம் படம் எடுக்கப்பட்டது. அப்போது கருணாநிதியின் சாதனை திட்டங்களை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

    100 மீட்டர் நீளமும், 70 மீட்டர் அகலத்திலும் கருணாநிதி உருவ வடி வத்தில் தூய்மை பணி யாளர்கள் நின்றிருந்தனர். காலை 7.23 மணிக்கு தொடங்கிய இந்த சாதனை நிகழ்ச்சி 8.43 மணிக்கு முடிவடைந்தது. தூய்மை பணியாளர்களின் கருணாநிதி உருவம் பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சாதனை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டி ருந்தது.

    தூய்மை பணியாளர்க ளின் கருணாநிதி உருவ அணிவகுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கயலெக்டர் சங்கீதா, தளபதி எம்.எல்.ஏ., மேயர் இந்தி ராணி, மாநகராட்சி கமிஷ னர் பிரவீன்குமார், பூமி நாதன் எம்.எல்.ஏ. மற்றும் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள், பொது மக்கள் பார்வையிட்டனர்.

    இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் உலக சாதனை புத்தகமான டிரம்ப்பில் இடம் பெற்றது. இதற்கான சான்றிதழ்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜ னிடம், சாதனை புத்தக நிர்வாகிகள் வழங்கினர்.

    • மதுரை ஐகோர்ட்டு பின்புறத்தில் 4 வழிச்சாலையில் கார் மோதி குதிரை பலியானது.
    • ஒத்தக்கடை சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    மேலூர்

    பரமக்குடியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). இவர் மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் செல்வதற்காக காரில் புறப்பட்டார். அவருடன் 2 உறவினர்களும் வந்தனர்.

    மதுரை ஐகோர்ட்டு பின்புறத்தில் 4 வழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த குதிரை திடீரென சாலையை கடப்பதற்காக காரின் குறுக்கே பாய்ந்தது. உடனடியாக பாலாஜி பிரேக் பிடிக்க முயன்றார். ஆனால் கார் வேகமாக சென்று கொண்டி ருந்ததால் குதிரை மீது பலமாக மோதியது. இதனால் சுமார் 20 அடி தூரத்துக்கு குதிரை தூக்கி வீசப்பட்டது. இதில் படு காயம் அடைந்த குதிரை சம்பவ இடத்திலேயே பலியானது. காரின் முன்பகுதி நொறுங்கி சேதமானது.

    காரில் இருந்த பாலாஜியின் உறவினர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒத்தக்கடை சப்-இன்ஸ்பெக்டர் சேது சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    • சோழவந்தான் அருகே உள்ள பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
    • காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் பூசாரி மகாமுனி தலைமையில் நடந்தது. பட்டர்கள் பாலாஜி, செந்தில் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகபூஜை நடந்து இதை தொடர்ந்து பூர்ணாஹூதி செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு மரக்கன்று, அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உலக நன்மைக்காக சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிப்பாடு நடைபெறுகிறது. 5 பேர்ஆண்டித்தேவர் வகையறா, எட்டூர் கிராம பொதுமக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மதுரை பாலமேடு அருகே பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பஸ் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி அலங்காநல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் கோசபெருமாள், மாவட்ட துணை தலைவர் கோவிந்த மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் சித்ரா, பூமா, சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, அலங்காநல்லூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, முத்துகுமரன், மாரிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    • திருமங்கலம் அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • சேடப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் விழாவை தொடங்கி வைத்தார்.

    திருமங்கலம்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை திருமங்கலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சார்பில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிக்கான தொடக்க விழா நடந்தது. திருமங்கலம் சேடப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் விழாவை தொடங்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலை துறை உதவிக்கோட்ட பொறியாளர் லாவண்யா, இளநிலை பொறியாளர் சுந்தரவடிவேல், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • அம்மனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள எரவார்பட்டி கிராமத்தில் உள்ள சீலைக்காரி அம்மன், தோட்டி கருப்பச்சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் பிரகாஷ் தலைமையில் 2 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தது. மேளதாளத்துடன் பூசாரிகள் மொக்கமாயன், அழகன் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டன. விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

    • வடபழஞ்சிக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தரவேண்டும்.
    • காலை, மதியம், மாலை வேளைகளில் பஸ்கள் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    மதுரை

    மதுரை அருகே உள்ளது வடபழஞ்சி ஊராட்சி. இவ்வூராட்சிக்குட்பட்ட முத்துப்பட்டி, நாகமலை புதூர் பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பொது போக்கு வரத்தையே பிரதானமாக பயன்படுத்தி வந்தனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வடபழஞ்சிக்கு காலை, மதியம், மாலை என 3 வேளைகளில் காளவாசல், நாகமலை புதுக்கோட்டை வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.

    கொரோனா தாக்கம் ஏற்பட்டபோது இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டு காலை 6 மணிக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. தற்போது வரை அந்த பஸ் மட்டுமே சென்று கொண்டி ருக்கிறது.

    இதனால் போதிய பஸ் வசதி இல்லாமல் பொது மக்கள் பெரிதும் சிரமத்திற் குள்ளாகின்றனர். மேலும் இப்பகுதியில் காமராஜர் பல்கலைக்கழகம், தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளி உள்ளன. வடபழஞ்சியில் இருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் சுமார் 2 கிலோமீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது.

    வடபழஞ்சியில் இருந்து கரடிபட்டி செல்லும் சாலை யில் அரசு உயர்நிலைப்பள்ளி, செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிக்கு நடந்தே செல்லும் நிலையும் உள்ளது. கோடை விடுமுறைக்கு பின் நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மீண்டும் காலை, மதியம், மாலை வேளைகளில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே இந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர்.
    • டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை திரண்ட 2752 தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர்.

    டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம்.

    ×