கோவில் கும்பாபிஷேகம்

சோழவந்தான் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
கோவில் கும்பாபிஷேகம்
Published on

சோழவந்தான்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள எரவார்பட்டி கிராமத்தில் உள்ள சீலைக்காரி அம்மன், தோட்டி கருப்பச்சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் பிரகாஷ் தலைமையில் 2 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தது. மேளதாளத்துடன் பூசாரிகள் மொக்கமாயன், அழகன் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டன. விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com