மருத்துவ கல்லூரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை

மருத்துவ கல்லூரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கின்றனர்.
மருத்துவ கல்லூரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
Published on

மதுரை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள பாட்டம் கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு அந்த பெண் கல்லூரி அருகேயுள்ள திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அந்த பெண்ணை மறித்து மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து மறைவான இடத்திற்கு அழைத்துச் ெசன்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. அதன் பின் அந்த நபர் அங்கிருந்து தப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரி, திருமண மண்டபம் பகுதியில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com