search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CLEANLINESS WORKERS"

    • பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்களை வழங்கினார்.

    திசையன்விளை:

    ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் 15-வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து யூனியனில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ் தலைமை தாங்கினார். யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் முன்னிலை வகித்தார்.

    நெல்ைல மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்களை வழங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிளாரன்ஸ் விமலா, நடராஜன், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், சாந்திகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், மேகலா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு குப்பையை தரம் பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
    • என் குப்பை எனது பொறுப்பு தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மங்கலம் :

    சாமளாபுரம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் திட்டத்தின் சார்பில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் என் குப்பை எனது பொறுப்பு தலைப்பில் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. கோவை எம்.பி, பி.ஆர்.நடராஜன் தூய்மை பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பரிசு வழங்கினார். இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், தி.மு.க. சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி.வேலுச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கொரோனா காலம் முதல் தற்போது வரை பணியாற்றி வந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாநகராட்சியில் கோ. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை உள்ளிட்ட ஐந்து மண்டலங்கள் உள்ளன. இந்த 5 மண்டலங்களில் நிரந்தர பணியாளர்கள் தவிர்த்து கூடுதலாக 1,700 சுய உதவிக்குழுவினர் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஒரு தனியார் நிறுவனம் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கி வந்தது. இந்நிலையில் 1,200 பணியாளர்களை சமீபத்தில் அந்த தனியார் நிறுவனம் திடீரென்று பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில், ராமசாமி, விஜயன், ராஜன், சுந்தரி விமலா, அம்மாசி ஆகியோர் முன்னிலையில் திருச்சி-தஞ்சை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர்கள் கூறும்போது, முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக கடந்த 25-ந்தேதி முதல் 15 தினங்களாக வேலை பார்த்து வந்த தங்களுக்கு மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

    மேலும் கொரோனா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தூய்மை பணியில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் போராடி பெற்ற தினக்கூலி ரூ.575 என்பதை குறைத்து ரூ.500 மட்டுமே ஒப்பந்ததாரர்கள் வழங்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ், கவுன்சிலர் தாஜூதீன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    நாளை முதல் மீண்டும் பணி வழங்காவிட்டால் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2,752 தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவத்தை அணிவகுப்பின் மூலம் காட்டினர்.
    • சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் மதுரையில் உள்ள தூய்மை பணியாளர்கள் அனைவரும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை திரண்டனர்.

    சாதனை முயற்சியாக 2752 தூய்மை பணியாளர்களும் கருணாநிதியின் தத்ரூப உருவத்தை தங்களது அணிவகுப்பின் மூலம் காட்டினார்கள். இதனை டிரோன் மூலம் படம் எடுக்கப்பட்டது. அப்போது கருணாநிதியின் சாதனை திட்டங்களை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

    100 மீட்டர் நீளமும், 70 மீட்டர் அகலத்திலும் கருணாநிதி உருவ வடி வத்தில் தூய்மை பணி யாளர்கள் நின்றிருந்தனர். காலை 7.23 மணிக்கு தொடங்கிய இந்த சாதனை நிகழ்ச்சி 8.43 மணிக்கு முடிவடைந்தது. தூய்மை பணியாளர்களின் கருணாநிதி உருவம் பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சாதனை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டி ருந்தது.

    தூய்மை பணியாளர்க ளின் கருணாநிதி உருவ அணிவகுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கயலெக்டர் சங்கீதா, தளபதி எம்.எல்.ஏ., மேயர் இந்தி ராணி, மாநகராட்சி கமிஷ னர் பிரவீன்குமார், பூமி நாதன் எம்.எல்.ஏ. மற்றும் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள், பொது மக்கள் பார்வையிட்டனர்.

    இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் உலக சாதனை புத்தகமான டிரம்ப்பில் இடம் பெற்றது. இதற்கான சான்றிதழ்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜ னிடம், சாதனை புத்தக நிர்வாகிகள் வழங்கினர்.

    • ஏர்வாடியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
    • தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் உடையார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செல்வத்துரை அனைவரையும் வரவேற்றார். கடலாடி ஊராட்சி ஒன்றியம் சார்பில் பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டார். ஏர்வாடி ஊரக வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி கிராம ஊராட்சி திட்டம் உறுதி செய்யபட்டன. உலக தண்ணீர் தின சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    ஊராட்சித்தலைவர் செய்யது அப்பாஸ் பேசும்போது, பொதுமக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும், ஏர்வாடியை தூய்மை நகரமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,நெகிழி பயன்படுத்தாமல் மஞ்சள் பை உபயோகப்படுத்த வேண்டும், தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
    • தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் ரங்கசாமி, துணை தலைவர்கள் ராமசாமி, மூர்த்தி, சுப்பையா முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சிந்தனை வளவன் வரவேற்றார்.

    பேரூராட்சி பணியாளர்கள் சங்க தலைவர் பிச்சைமுத்து சிறப்புரையாற்றினார். இதில் 15 பேரை கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மாவட்ட பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் அமைத்து செயல்படுவது, அரசாணை எண் 115, 139, 152-ல் உள்ள பேரூராட்சி, மாநகராட்சி பகுதியில் பகுதி நேரமாக பணியாற்றும் கீழ்த்தல பணியாளர்களை நீக்கி தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும், வருகிற 9-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகள் உட்பட 3 அரசாணையை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.

    • தூய்மை பணியாளர்கள் சங்க பிரசார கூட்டம் நடந்தது.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தின் சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் அன்பரசு வரவேற்று பேசினார். மாநில செயலாளர் கனி, மாநில தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா ஊக்கத் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தாமதமின்றி உரிய நேரத்தில் ஊதிய உயர்வு வழங்க பணி பதிவேடு, ஊதிய உயர்வு பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். வாரிசு வேலையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டது. வட்டாரத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் திரளாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

    ×