என் மலர்
உள்ளூர் செய்திகள்

வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்களை வழங்கிய காட்சி.
ராதாபுரம் யூனியனில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, உபகரணங்கள் - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வழங்கினார்
- பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்களை வழங்கினார்.
திசையன்விளை:
ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் 15-வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து யூனியனில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ் தலைமை தாங்கினார். யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் முன்னிலை வகித்தார்.
நெல்ைல மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் தூய்மை உபகரணங்களை வழங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிளாரன்ஸ் விமலா, நடராஜன், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், சாந்திகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், மேகலா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.