சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பரிசு

பொதுமக்களுக்கு குப்பையை தரம் பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என் குப்பை எனது பொறுப்பு தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை  எம்.பி,  பி.ஆர்.நடராஜன் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு  வழங்கிய காட்சி.
கோவை எம்.பி, பி.ஆர்.நடராஜன் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.
Published on

மங்கலம் :

சாமளாபுரம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் திட்டத்தின் சார்பில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் என் குப்பை எனது பொறுப்பு தலைப்பில் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. கோவை எம்.பி, பி.ஆர்.நடராஜன் தூய்மை பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பரிசு வழங்கினார். இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், தி.மு.க. சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி.வேலுச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com