பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம்

சோழவந்தான் அருகே உள்ள பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது. காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம்
Published on

சோழவந்தான்

சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் பூசாரி மகாமுனி தலைமையில் நடந்தது. பட்டர்கள் பாலாஜி, செந்தில் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகபூஜை நடந்து இதை தொடர்ந்து பூர்ணாஹூதி செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு மரக்கன்று, அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உலக நன்மைக்காக சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிப்பாடு நடைபெறுகிறது. 5 பேர்ஆண்டித்தேவர் வகையறா, எட்டூர் கிராம பொதுமக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com