என் மலர்
உள்ளூர் செய்திகள்

குதிரை மீது மோதியதில் கார் சேதமடைந்து இருப்பதையும், பலியான குதிரையையும் படத்தில் காணலாம்.
கார் மோதி குதிரை பலி
- மதுரை ஐகோர்ட்டு பின்புறத்தில் 4 வழிச்சாலையில் கார் மோதி குதிரை பலியானது.
- ஒத்தக்கடை சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
மேலூர்
பரமக்குடியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). இவர் மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் செல்வதற்காக காரில் புறப்பட்டார். அவருடன் 2 உறவினர்களும் வந்தனர்.
மதுரை ஐகோர்ட்டு பின்புறத்தில் 4 வழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த குதிரை திடீரென சாலையை கடப்பதற்காக காரின் குறுக்கே பாய்ந்தது. உடனடியாக பாலாஜி பிரேக் பிடிக்க முயன்றார். ஆனால் கார் வேகமாக சென்று கொண்டி ருந்ததால் குதிரை மீது பலமாக மோதியது. இதனால் சுமார் 20 அடி தூரத்துக்கு குதிரை தூக்கி வீசப்பட்டது. இதில் படு காயம் அடைந்த குதிரை சம்பவ இடத்திலேயே பலியானது. காரின் முன்பகுதி நொறுங்கி சேதமானது.
காரில் இருந்த பாலாஜியின் உறவினர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஒத்தக்கடை சப்-இன்ஸ்பெக்டர் சேது சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.






