என் மலர்
மதுரை
- உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடக்கிறது.
- இளைஞரணி மாநாட்டில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்து கொள்ள–வேண்டும்.
திருமங்கலம்
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திரு–மங்கலத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
சேலத்தில் தி.மு.க.வின் இரண்டாவது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மதுரை தெற்குமாவட்டத்திலிருந்து அதிகளவில் கட்சியினர் பங்கேற்க வேண்டும். தெற்கு மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ள–வேண்டும்.
இதில் கலந்து கொள்ளும் இளைஞரணி–யினர் 20 வயது முதல் 30 வயதிற் குட்பட்டு இருக்கவேண்டும். பூத்திற்கு 25 பேர் வீதம் தேர்வு–செய்ய வேண்டும். அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
விரைவில் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள் ளும் நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து மாவட்ட செயலாளரிடம் வழங்க–வேண்டும். வடக்கு, தெற்கு, மாநகா் என மூன்று மாவட் டங்களிலிருந்து அதிகளவில் இளைஞரணி கலந்து கொண்டு முன்னணி மாவட் டமாக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் மாநாட் டில் இடம்பிடிக்க வேண்டும்.
வரும் செப்டம்பர் 20-ந்தேதி திருமங்கலத்தில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாநில இளைஞரணி செயலாளரும், விளை–யாட்டுத் துறை அமைச்ச–ருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி–களை வழங்கி பேசுகிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஏராள–மானோர் கலந்து கொள்ள–வேண்டும் என்றார்.
தெற்கு மாவட்டச் செய–லாளர் சேடபட்டி மணி–மாறன் பேசுகையில், மது–ரையில் இதுவரையில் நடைபெற்ற அனைத்து கூட்டங்களையும் சிறப்பான மாநாடாகவே நாம் நடத்தி–யுள்ளோம். தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டா–லின் கலந்து கொள்ளும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியையும் சிறப்பான மாநாடு போல நடத்த–வேண்டும். கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு திரு–மங்கலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பொற்கிழி வழங்கு–கிறார்.
சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்து கொள்ள–வேண்டும். நாம் வலிமை–யான தலைமையில் கீழ் இயங்கி வருகிறோம். இன் னும் 30 ஆண்டுகள் ஆனா–லும் தி.மு.க. ஆட்சி தமிழ–கத்தில் தொடரும். வரும் நாடாளு–மன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கதான வெற்றி பெற உழைக்கவேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் மாநில விவசாய அணி இணை செயலாளர் முத்துராமலிங் கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் லதா அதிய மான், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்த லைவர் ஆதவன், மண்டல தலைவர் சுவிதாவிமல், தக வல் தொழில்நுட்ப மதுரை மண்டல பொறுப்பா ளர் பாசபிரபு,
ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, ராமமூர்த்தி, ஆலம்பட்டி சண்முகம், தங்கபாண்டி, மதன்குமார், நகரப் பொருளாளர் சின்னச்சாமி மீனவர் அணி ஆலங்குளம் செல்வம் பலர் கலந்து கொண்டனர்.
- உசிலம்பட்டியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
- தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக் குட்பட்ட கருக்கட்டான்பட்டி ரோடு 13-வது வார்டு சின்னச்சாமி தெரு, ஜே.பி.ஆர். மகால் தெரு, வ.உ.சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த 2005முதல் தற்போது வரை சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த பகுதியில் சாலை மற்றும் குடிநீர், கழிவு நீர், சாக்கடை, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பலமுறை நகராட்சி நிர்வா கத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் சாலை, கழிவு நீர் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கை விடப்பட்டது.
- சோழவந்தான் பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
சோழவந்தான்
சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. சோழவந்தான் பிரளயநாத கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை வலம் வந்தனர். எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன், மற்றும் கோவில் நிர்வா கத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாய நல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வர முடையார் கோவில் தென்கரை அகிலாண்டே சுவரி சமேத மூலநாதசுவாமி ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டியை தடயவியல் நிபுணர்கள் 2 முறை சோதனை நடத்தினர்.
- சட்டவிரோதமாக சிலிண்டரில் கியாஸ் நிரப்பியுள்ளனர்.
மதுரை:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சிறப்பு சுற்றுலா ரெயில் பெட்டி மூலம் 63 பயணிகள் கடந்த 17-ந்தேதி ஆன்மீக சுற்றுலா புறப்பட்டனர். கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு கடந்த 26-ந்தேதி அதிகாலை மதுரை வந்தனர்.
அவர்கள் பயணித்த ரெயில் பெட்டி மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் போடி லைனில் நிறுத்தப்பட்டிருந் தது. அதிகாலை 5.15 மணிக்கு அந்த ரெயில் பெட்டியில் டீ போடுவதற்காக கியாஸ் சிலிண்டரை பயன்படுத்திபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 9 பேர் பலியானார்கள். பலத்த காயம் அடைந்த 8 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டியை தடயவியல் நிபுணர்கள் 2 முறை சோதனை நடத்தினர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய 2 சிலிண்டர்கள், விறகு, நிலக்கரி, மண்ணெண்ணை பாட்டில் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவத்தில் முறையான விதிகளை பின்பற்றாமல் ஏற்பாடு செய்த லக்னோ சீதாப்பூரை சேர்ந்த பேசின் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் உரிமையாளரை கைது செய்யவும் தெற்கு ரெயில்வே பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளரும், சுற்றுலா வழிகாட்டியுமான நரேந்திரகுமார், சமையல் பணியாளர் ஹர் தீப் சஹானி, சுற்றுலா உதவியாளர் தீபக், சமையல் உதவியாளர்கள் சத்ய பிரகாஷ் ரஸ்தோகி, கபம் கஸ்யப் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து வந்திருந்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி மதுரையில் 2 நாட்கள் விசாரணை நடத்தினார். அப் போது ரெயில்வே பாதுகாப்பு படையினர், தமிழக ரெயில்வே போலீசார், வர்த்தக பிரிவை சேர்ந்தவர் கள், சுற்றுலா ரெயில் பெட்டியை சோதனை நடத்த வேண்டிய கேட்டரிங் ஆய்வாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள், அலுவலர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், நாகர்கோவிலுக்கு இந்த சுற்றுலா ரெயில் சென்ற போது, அங்கு சட்டவிரோதமாக சிலிண்டரில் கியாஸ் நிரப்பியுள்ளனர். அப்போது முதலே அதில் கியாஸ் கசிவு இருந்துள்ளது. அதுவே விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது என்றார்.
தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை கண்காணிக்க தவறியதாக அதிகாரிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளபடி மருத்துவ காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது.
- வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாநில மாநாடு நடத்த உள்ளோம்.
மதுரை:
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளபடி மருத்துவ காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதாரங்கள், அடிப்படை காரணங்கள் இல்லாமல் எதையும் கூறியிருக்க மாட்டார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதால்தான் கூறியிருப்பார்.
வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாநில மாநாடு நடத்த உள்ளோம். அந்த இடத்தினை ஆய்வு செய்வதற்காக தான் தற்போது மதுரை வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரயில் பெட்டி தீ விபத்து சம்பவம் தொடர்பாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு.
- விசாரணையை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேர் அதிரடி கைது.
மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்திய பிரகாஷ், நரேந்திர கும்ஸ், கர்தீஸ் ஜஹானி, தீபக், சுபம், சுஷியப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 5 பேரும் லக்னோவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கைதானவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஐந்து பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதான ஐந்து பேரையும் செப்டம்பர் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மதுரை ரெயில் விபத்து தொடர்பாக தெற்கு சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தி வருகிறார்.
- ரெயில் தீ விபத்து தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம்.
மதுரை:
மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ரெயில் விபத்து தொடர்பாக தெற்கு சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தி வருகிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
ரெயில் தீ விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். வெடித்து சிதறிய சிலிண்டரை நாகர்கோவிலில் நிரப்பி உள்ளனர். எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது.
வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் தீ விபத்து தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம். லக்னோவில் இருந்தும் சிலரை அழைத்து விசாரிக்க வேண்டி உள்ளது.
விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில் பெட்டி தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைதான 5 பேரும் லக்னோவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை:
மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்திய பிரகாஷ், நரேந்திர கும்ஸ், கர்தீஸ் ஜஹானி, தீபக், சுபம், சுஷியப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 5 பேரும் லக்னோவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கைதானவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து நேரடியாக பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.
- விபத்து குறித்து விசாரணை நடத்த குறைந்த பட்சம் ஒரு மாதமாவது தேவைப்படும்.
மதுரை:
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுற்றுலா வந்த ரெயில் பெட்டியில் விதிகளை மீறி பயன்படுத்தப்பட்ட கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆன்மீக பயணம் வந்த 9 பேர் பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு 2 விமானங்களில் சென்னையில் இருந்து லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காயம் அடைந்த அனைவரும் உரிய சிகிச்சைக்கு பிறகு நேற்று இரவு மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு சென்ற அவர்கள் தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்களான மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பரிதாபமாக உயிரை விட்டனர்.
தீ விபத்து நடைபெற்ற ரெயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் இரு நாட்களாக சோதனை நடத்தி தீ விபத்துக்கு காரணமான பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றினர். நேற்று இரண்டாவது நாளாக விபத்து நடந்த ரெயில் பெட்டியை ஆய்வு நடத்தினர். அப்போது அதிலிருந்த ஒரு இரும்புப் பெட்டிக்குள் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக 500, 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதனையும், ரெயில் பெட்டிக்குள் இருந்த சிலிண்டர், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர்.
இந்த நிலையில் தெற்கு சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணையை தொடங்கினார். நேற்று காலை ரெயில்வே கோட்ட அலுவலக கூட்டரங்களில் முதற்கட்டமாக ரெயில் தீ விபத்தில் காயமடைந்து மதுரை ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 7 பேரிடமும் விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து ரெயில் விபத்தின்போது அதில் இருந்து குதித்து தப்பியோடிய 5 சுற்றுலா நிறுவன ஊழியர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதில் இரு சமையல் உதவியாளர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் நேரில் சென்று ரெயில் பெட்டியில் ஏறி ஆய்வு மேற்கொண்ட பின்னர் நேற்று மாலை மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ரெயில் விபத்து ஏற்பட்டவுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
முதல் நாள் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பாதுகாப்பு ஆணையர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. முதலில் தீ விபத்தின் போது தப்பியோடிய சுற்றுலா நிறுவன சமையல் உதவியாளர்கள் இருவரிடம் மீண்டும் 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் போது பொதுமக்கள் யாரேனும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களோ அல்லது வேறு ஏதேனும் ஆவணங்களோ இருந்தால் நேரடியாக தெரிவிக்கலாம் எனவும், மேலும் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் மூலமாகவும் அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் யாரும் சம்பவம் குறித்து தெரிவிக்க வருகை தரவில்லை.
விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து நேரடியாக பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் சம்பவத்தின் போது ரெயில் பெட்டி எரியும் வீடியோ வெளியானது தொடர்பாகவும், தீ விபத்தின் போது அருகில் இருந்த ரெயில் பெட்டியை இயக்கியவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
விபத்தின் போது தீயணைப்பு பணிகளில் ஈடுபட்ட ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினரிடமும், ரெயில் பெட்டி புக் செய்யப்பட்டது தொடர்பாகவும், விபத்து ஏற்பட்ட பெட்டியில் பயணிப்பதற்கான முறையாக அனுமதிக்கப்பட்டதா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தவும் ஏ.எம்.சவுத்ரி திட்டமிட்டுள்ளார்.
அதேபோல் கடைசியாக இந்த சுற்றுலா ரெயில் நாகர்கோவிலில் இருந்து மதுரை வந்தது. எனவே அங்கு ரெயில் பெட்டியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக விசாரணை நடத்தும் வகையில் நாகர்கோவிலில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், டெக்னீஷியன்கள், அதிகாரிகள் ஆகியோரை மதுரைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று விசாரணையை தொடங்கிய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி கூறுகையில், இந்த ரெயில் விபத்தில் சதிச்செயல்கள் எதுவும் அரங்கேறவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்த குறைந்த பட்சம் ஒரு மாதமாவது தேவைப்படும் என்றார்.
- பெரியார் பஸ் நிலையத்தில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரை திடீர்நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் போலீசார் சம்பவத்தன்று பெரியார் பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மாநக ராட்சி கட்டண கழிப்பிடம் அருகே 5பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சோதனையிட்டனர்.
அப்போது அவர்கள் வாள், அரிவாள், மிளகாய் பொடி பாக்கெட் ஆகியவை வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, தனியாக செல்பவர்களை குறிவைத்து கொள்ளையடிக்க திட்ட மிட்டிருந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், அவர்கள் திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் பாபு மகன் சதீஷ்குமார் என்ற தக்காளி சதீஷ் (வயது23), ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெரு பத்மநாபன் மகன் பத்ரு ஹரி (23), பசுமலை செல்வ குமார் மகன் எபிநேசர் தினேஷ் குமார் என்ற பேபி தினேஷ் (23), மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மாரியப்பன் மகன் இளங்கா பாண்டி என்ற அஜித் (25), திடீர் நகர் பர்மா காலனி ராம்குமார் மகன் சண்முக பாண்டி (22) என்று தெரியவந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- அவனியாபுரத்தில் நிழற்குடை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.
- உட்காரக்கூட இட வசதியின்றி மாணவ, மாணவிகள் தவித்த வண்ணம் உள்ளனர்.
மதுரை
மதுரை அவனியாபுரம் பகுதியில் சுமார் ஒரு லட் சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இப்ப–குதியில் இருந்து மதுரை பெரியார், அண்ணா, மாட் டுத்தாவணி, ஆரப்பாளை–யம் ஆகிய பேருந்து நிலை–யங்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆயி–ரத்திற்கும் மேற்பட்டோர் காலையில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அவனி–யாபுரத்தில் இரண்டு நிழற் குடைகள் இருந்தன. இதில் ஒன்று மிகவும் பழு–தடைந்து உடையும் தருவா–யில் இருந்த–தால் ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டு விடும் என்று கருதி சமீபத்தில் இடித்து அகற்றப் பட்டு விட்டது.
மீதமுள்ள ஒரு நிழல் குடையும் இலை கடை ஆக்கிரமிப்பில் இருக்கிறது. இதனால் பொது மக்கள், மாணவ, மாணவிகள் உட்கா–ரவோ, நிற்கவோ கூட இட மின்றி தவித்து வருகிறார் கள். அதிலும் தற்போது கொளுத்தி வரும் வெயிலின் தாக்கத்தால் அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.
இந்த நிழற்குடையில் இருந்த பயணிகள் அமரும் இருக்கைகளையும், 92-வது வார்டு பகுதியில் தண்ணீர் திறந்து விடும் ஒப்பந்த ஊழியர்கள் உடைத்து சென்று தங்கள் அமர்வதற் காக நீர் தேக்கும் மேல் நிலைத் தொட்டிக்கு கீழே வைத்துள்ளனர்.
எனவே வயது முதிர்ந்த பயணிகள் பேருந்து நிலை–யத்தில் நிழற்குடை இல்லாம–லும், அமருவதற்கு வசதி இல்லாமலும் மிகவும் தவித்து வருகின்றனர். இந்த நிழற்குடை ஆக்கிரமிப்பை அகற்ற அரசு அதிகாரிகள், உதவி பொறியாளர் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மதுரையில் வீரன் அழகுமுத்து கோன் சிலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
- மாவட்ட தலைவர் நாட்டாமை ஜெயக்குமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை
மதுரையில் தமிழ்நாடு யாதவா மகா சபை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் நாட்டாமை ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் வருகிற செப்டம்பர் 2-ந்தேதி திருச்சியில் நடைபெறும் யாதவா மாசபை மாநாட் டில் மதுரையிலிருந்து 10 ஆயிரம் பேருடன் பங்கேற்போம் என்றும் மதுரையில் முக்கிய சாலை சந்திப்புகளில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனுக்கு தமிழ்நாடு அரசு சிலை அமைக்க வேண்டும், மேலும் தமிழ் இனத்தின் மூத்த குடியாக திகழும் யாதவ சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சுப்பையா, சுடலை,கருணாநிதி, ராஜேந்திர பிரசாத், வெங்க டாஜலம், செல்லையா, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்






