என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train Coach Fire"

    • மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
    • சமையல் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்

    இந்திய ரெயில்வே மூலம் நாடு முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி புண்ணிய ஸ்தலமான ராமேசுவரத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா ரெயில்கள் இயக்கட்டு வருகிறது.

    அதன்படி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தமிழகத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கடந்த 17-ந்தேதி புறப்பட்ட சுற்றுலா ரெயிலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். வட மாநிலத்தவர்கள் ரெயிலில் பயணம் மேற்கொள்ளும்போது விதிகளை மீறி ரெயில் பெட்டியிலேயே கியாஸ் சிலிண்டர் வைத்து சமைத்து சாப்பிடுவது வழக்கம். அதன்படி இந்த சுற்றுலா ரெயிலிலும் பயணிகள் ரெயிலுக்குள் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தடைந்த ரெயில் நேற்று நாகர்கோவிலுக்கு சென்றடைந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் பத்மநாப சுவாமி கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். பின்னர் இரவு ரெயில் மூலம் அவர்கள் மதுரைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை சுற்றுலா ரெயில் மதுரை வந்தடைந்தது. இணைப்பு ரெயில் வந்தபிறகு ராமேசுவரத்துக்கு சுற்றுலா ரெயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்குள் சுற்றுலா பயணிகள் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    இன்று காலை சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மதுரை வழியாக ரெயில்கள் வரும் என்பதால் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த சில பயணிகள் ரெயிலிலேயே தூங்கினர்.

    மற்றவர்கள் இறங்கி ரெயில் நிலையத்திற்குள் வந்து பிளாட்பாரத்தில் ஓய்வெடுத்தனர். இந்த நிலையில் அதிகாலை 5 மணியளவில் ரெயிலில் இருந்த சிலர் டீ தயாரிக்க அவர்கள் கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான கியாஸ் அடுப்புகளை பற்ற வைத்ததாக தெரிகிறது.

    அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் தீ ரெயில் பெட்டியில் பரவ தொடங்கியது. கரும்புகையால் ரெயிலுக்குள் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கினர். இதற்கிடையில் ரெயில் பெட்டியில் தீ மளமள வென பரவ கொழுந்து விட்டு பயங்கரமாக எரிந்தது. மேலும் அருகில் இருந்த பெட்டிக்கும் பரவியது.

    இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் திடீர்நகர், தல்லா குளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ரெயில் பெட்டியில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 தீயணைப்பு வாகனங்கள் வந்த நிலையில் கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ரெயில்வே, மாநகர போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர்.

    மேலும் தீயணைப்பு வீரர்கள் ரெயில் பெட்டியின் அவசர வழியை உடைத்து உள்ளே சென்று சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி பலியாகினார். அவர்களது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயில் பெட்டியில் சிக்கியிருந்தவர்களின் விபரம் உடனடியாக முழுமையாக தெரியவில்லை. தீ விபத்து நடந்தபோது 20-க்கும் மேற்பட்டோர் ரெயில் பெட்டியில் இருந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் 9  பேர் இறந்த நிலையில் மற்றவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை.

    இந்த தீ விபத்தில் ரெயில் பெட்டி முழுவதும் எரிந்து சேதமானது. மற்றொரு பெட்டி பாதி எரிந்து சேதமானது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்கு கொண்டு வந்தனர். அதன்பின் ரெயில் பெட்டியில் சிக்கியவர்களை காயங்களுடன் மீட்டு ரெயில்வே மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

    தீ விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை ரெயில்வே கோட்ட மேலா ளர் அனந்த் பத்மநாபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி னர்.

    தீ விபத்தில் உத்தரபிர தேசம் லக்கிம்பூர் பகுதியைச் சேர்ந்த சப்தமன்சிங் (வயது 65), மிதிலேஸ்வரி (64) ஆகிய 2 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டு உள்ளது. மற்றவர்களின் விபரம் தெரியவில்லை. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் பெட்டி தனியாக நிறுத்து வைத்திருந்த போது தீ விபத்து
    • சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்

    மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் சிலிண்டர் மூலம் சமைக்க முயற்சி மேற்கொண்டபோது, சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளார்.

    • ரெயிலில் ரெயில்வே விதியை மீறி சுற்றுலா பயணிகள் அடுப்பு மற்றும் சிலிண்டர்களை எடுத்து வந்தது எப்படி?
    • பொதுவாக வீட்டு உபயோக சிலிண்டர்களை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது.

    உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுற்றுலா ரெயிலில் 2 பெட்டிகள் மதுரை ரெயில் நிலையத்துக்கு முன்னதாகவே 1 கிலோ மீட்டர் தொலைவில் பிரித்து தனி தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிக களைப்புடன் அயர்ந்து தூங்கினர். சிலர் காலை கடன்களை முடிப்பதற்காக ரெயில் பெட்டிகளில் இருந்து இறங்கி நின்றனர்.

    இந்த நிலையில் சிலர் டீ, காபி கேட்டதால் அடுப்புகள் பற்ற வைக்கப்பட்டன. இந்த நேரத்தில் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே இருந்த இன்னொரு சிலிண்டரும் வெடித்துச் சிதறியதால் ரெயில் பெட்டி முழுவதும் தீயில் கருகி சாம்பலானது.

    பயணம் செய்த சிலர் அலறியடித்து உயிர் தப்பிய நிலையில் 9 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 15 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தென்னக ரெயில்வே முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைக்க மளிகை பொருட்கள், சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வருவது வழக்கம். ஆனால் ரெயில்வே விதிப்படி ரெயில் பெட்டிக்குள் தீப்பற்றக்கூடிய எந்தவிதமான நடவடிக்கைகளிலும் பயணிகள் ஈடுபடக்கூடாது என்பது கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 4 நாட்களாக இந்த ரெயில் பெட்டிகளில் தான் இவர்கள் சமையல் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்படியே மதுரையிலும் சமையல் செய்ய தீப்பற்ற வைத்தபோது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஆனால் இந்த ரெயிலில் ரெயில்வே விதியை மீறி சுற்றுலா பயணிகள் அடுப்பு மற்றும் சிலிண்டர்களை எடுத்து வந்தது எப்படி?

    இதனை ரெயில்வே அதிகாரிகள் கண்காணிக்க தவறி விட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுவாக ரெயிலில் பயணிகள் ஏறும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதையும் எடுத்து வருகிறார்களா? என்பதை ரெயில்வே ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும். அந்த வகையில் இந்த சுற்றுலா பயணிகளை சம்பந்தப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் கண்காணிக்க தவறிவிட்டார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    மேலும் வெடித்துச்சிதறியது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சிலிண்டர்கள் எங்கு வாங்கப்பட்டுள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுவாக வீட்டு உபயோக சிலிண்டர்களை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது. மேலும் பொது இடங்களிலோ, எளிதில் தீப்பற்றக் கூடிய பகுதிகளிலோ இந்த சிலிண்டர்களை வைத்து அடுப்புகள் பற்ற வைக்கக்கூடாது. ரெயில் பெட்டிக்குள் எவ்வித அனுமதியும் இன்றி ரெயில்வே விதிகளை மீறி கியாஸ் அடுப்புகளை பற்ற வைத்தது தான் இந்த தீ விபத்துக்கான முழு காரணம் என்றும் சுற்றுலா பயணிகளின் விதிமுறை மீறல் காரணமாக இந்த கொடூர தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ரெயில் பெட்டியில் தீ விபத்து நடந்த சம்பவம் ரெயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு தள்ளி நடைபெற்றதால் மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல ரெயில்கள் தப்பின. பெரும் சேதமும் தவிர்க்கப்பட்டது. 

    • தீ விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.
    • 6 பேர் விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் இருந்து குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையம் அருகே இன்று காலை நடந்த தீ விபத்தில் சிக்கியவர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். இந்த விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இதில் 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். பெண்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். 6 பேர் விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் இருந்து குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.

    காயமடைந்த 20 பேரில் 2 பேர் மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியிலும், 5 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.
    • உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உத்தரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரெயிலில் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    மதுரை மாவட்ட ஆட்சியரை உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று உரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

    உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரெயில் தீ விபத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்யவும் லக்னோ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மதுரை:

    உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் மீது தென்னக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்யவும் லக்னோ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சுற்றுலா தொடர்வண்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமும், பயணிகளின் பொறுப்பற்றத் தன்மையும் தான் காரணமாகும்.
    • விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடை பிடிக்கப்படுவதை தொடர்வண்டித்துறை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா தொடர்வண்டி பெட்டிகளில் இன்று காலை ஏற்பட்ட கொடிய தீ விபத்தில், அதில் பயணம் செய்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 9 பயணிகள் உயிரிழந்திருப்பதும், மேலும் பலர் காயமடைந்திருப்பதும் மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுற்றுலா தொடர்வண்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமும், பயணிகளின் பொறுப்பற்றத் தன்மையும் தான் காரணமாகும்.

    இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி, தீ விபத்துக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பானவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடை பிடிக்கப்படுவதை தொடர்வண்டித்துறை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை ரெயில் நிலையத்தில் சுற்றுலா ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையைத் தருகிறது.
    • ரெயில் பயணங்களில் மக்கள் பாதுகாப்பினை உறுதிசெய்ய ஒன்றிய ரெயில்வே அமைச்சகம் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இச்சம்பவத்திற்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தள பக்கத்தில், மதுரை ரெயில் நிலையத்தில் சுற்றுலா ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையைத் தருகிறது.

    இந்த கோர தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதலை தெரிவிக்கும் அதேவேளையில், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் நலம்பெற விரும்புகிறோம்.

    ரெயில் பயணங்களில் மக்கள் பாதுகாப்பினை உறுதிசெய்ய ஒன்றிய ரெயில்வே அமைச்சகம் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    • சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் மீது தென்னக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் மதுரை ரெயில் விபத்து குறித்து ரெயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா கூறியிருப்பதாவது:-

    ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைகளுக்கான சாத்தியம் ஏதும் இல்லை. ரெயில் பெட்டியில் சிலிண்டர் அடுப்பில் தேநீர் போட்டுக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. பிரேத பரிசோதனை முடிந்தவுடம் 7 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு, விமானம் மூலம் உத்தரபிரதேசம் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி சட்டரீதியான விசாரணை நடத்த உள்ளார்.

    மதுரையில் நேற்று அதிகாலை சுற்றுலா ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தீ விபத்து குறித்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி சட்டரீதியான விசாரணை நடத்த உள்ளார். மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

    விபத்து குறித்து பொதுமக்களிடம் ஏதேனும் தகவல் அல்லது ஆதாரம் இருந்தால் அதை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கொடுக்கலாம். அல்லது ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர், தெற்கு வட்டம், 2-வது மாடி, சன்ராக்ஷா பவன், பெங்களூரு - 560 023 என்ற முகவரிக்கு கடிதம் வழியாகவும் தெரிவிக்கலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • லேசான காயமடைந்தவர்களை மீட்டு ரெயில்வே ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • அமைச்சர் மூர்த்தி அந்த சிறுவனுக்கு காலணி மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தார்.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில், உத்தரப்பிரதேசத்தில் ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் தங்கியிருந்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட பயங்க தீ விபத்தில் 9 பேர் பலியானார்கள். லேசான காயமடைந்தவர்களை மீட்டு மதுரை ரெயில்வே ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    அப்போது தனது தாத்தா, பாட்டியுடன் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக வந்த 4 வயது சிறுவன் ஸ்வேதாஸ் சுக்லா நடந்த நிகழ்வுகள் தெரியாமல் எப்போது ராமேசுவரம் செல்வோம்? என்னை ராமேசுவரம் அழைத்து செல்லுங்கள், நான் ராமேசுவரத்தை பார்க்க வேண்டும் என கூறியது அங்கிருந்தவர்களின் மனதை உருக்குவதாக அமைந்தது.

    மேலும் ரெயில் விபத்தில் சிறுவன் அணிந்திருந்த காலணி ரெயிலில் சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்த அமைச்சர் மூர்த்தி அந்த சிறுவனுக்கு காலணி மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தார். அமைச்சர் மூர்த்தியின் இச்செயல் அங்கிருந்தவர்களை நெகழ்ச்சி அடைய செய்தது.

    • முன்னதாக இந்த சிறப்பு ரெயிலில் மொத்தம் 63 பேர் வந்ததாக பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது.
    • ஊர் திரும்புபவர்கள் ஆகியோரை கணக்கெடுத்தபோது 2 பேர் மாயமான தகவல் கிடைத்தது.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் வந்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் இறந்தனர். 25 பேர் லேசான மற்றும் பலத்த காயம் அடைந்து ரெயில்வே மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிகிச்சையில் சற்று உடல் நலம் தேறியவர்கள் 22 பேர் இன்று மதியம் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    முன்னதாக இந்த சிறப்பு ரெயிலில் மொத்தம் 63 பேர் வந்ததாக பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது பலியானவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், ஊர் திரும்புபவர்கள் ஆகியோரை கணக்கெடுத்தபோது 2 பேர் மாயமான தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ரெயில்வே போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் தீ விபத்து சம்பவத்தில் அவர்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×