search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைக்கான சாத்தியம் எதுவும் இல்லை- ஏ.டி.ஜி.பி.  விளக்கம்
    X

    ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைக்கான சாத்தியம் எதுவும் இல்லை- ஏ.டி.ஜி.பி. விளக்கம்

    • சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் மீது தென்னக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் மதுரை ரெயில் விபத்து குறித்து ரெயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா கூறியிருப்பதாவது:-

    ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைகளுக்கான சாத்தியம் ஏதும் இல்லை. ரெயில் பெட்டியில் சிலிண்டர் அடுப்பில் தேநீர் போட்டுக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. பிரேத பரிசோதனை முடிந்தவுடம் 7 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு, விமானம் மூலம் உத்தரபிரதேசம் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×