கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 வாலிபர்கள் கைது

பெரியார் பஸ் நிலையத்தில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 வாலிபர்கள் கைது
Published on

மதுரை

மதுரை திடீர்நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் போலீசார் சம்பவத்தன்று பெரியார் பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மாநக ராட்சி கட்டண கழிப்பிடம் அருகே 5பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சோதனையிட்டனர்.

அப்போது அவர்கள் வாள், அரிவாள், மிளகாய் பொடி பாக்கெட் ஆகியவை வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, தனியாக செல்பவர்களை குறிவைத்து கொள்ளையடிக்க திட்ட மிட்டிருந்தது தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், அவர்கள் திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் பாபு மகன் சதீஷ்குமார் என்ற தக்காளி சதீஷ் (வயது23), ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெரு பத்மநாபன் மகன் பத்ரு ஹரி (23), பசுமலை செல்வ குமார் மகன் எபிநேசர் தினேஷ் குமார் என்ற பேபி தினேஷ் (23), மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மாரியப்பன் மகன் இளங்கா பாண்டி என்ற அஜித் (25), திடீர் நகர் பர்மா காலனி ராம்குமார் மகன் சண்முக பாண்டி (22) என்று தெரியவந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com