search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதி கேட்டு நகராட்சி அலுவலகம்  முற்றுகை
    X

    நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

    அடிப்படை வசதி கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை

    • உசிலம்பட்டியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக் குட்பட்ட கருக்கட்டான்பட்டி ரோடு 13-வது வார்டு சின்னச்சாமி தெரு, ஜே.பி.ஆர். மகால் தெரு, வ.உ.சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் கடந்த 2005முதல் தற்போது வரை சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த பகுதியில் சாலை மற்றும் குடிநீர், கழிவு நீர், சாக்கடை, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பலமுறை நகராட்சி நிர்வா கத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பின்னர் சாலை, கழிவு நீர் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கை விடப்பட்டது.

    Next Story
    ×