என் மலர்tooltip icon

    கரூர்

    • செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை நடத்தியதில் இருதய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
    • அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று இரவு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து காவேரி ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

    கரூர்:

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இல்லங்கள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி விசாரணை நடத்தினர். இறுதியில் அவரை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக கெண்டு வந்த காரில் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தியதில் இருதய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் அவருக்கு அடுத்தகட்டமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்து இருந்தனர்.

    அந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்வதற்கு அனுமதி கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினர் கோர்ட்டை நாடி இருந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

    இந்த உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று இரவு சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சக்திவேல், கவுன்சிலர் பூபதி, மத்திய நகர இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மத்திய நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுபாஷ் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தினர்.

    மேலும், கோவில் வளாகத்தை சுற்றி அங்கபிரதட்சணம் மேற்கொண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    • கரூரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்ற பெண் உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மண்மங்கலம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி புனிதா (வயது 35). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்தநிலையில் புனிதா சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் புனிதாவை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி புனிதா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
    • 1,400 கிலோ அரிசி, சரக்கு வேனோடு பறிமுதல்

    கரூர்,

    கரூர் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ், கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் ரேஷன் அரிசி முட்டைகளை கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 49), நன்செய் இடையாறு தெற்கு தெருவை சேர்ந்த பிரதீப் (27), பாலப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த விஜய்(31) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 28 மூட்டைகளில் இருந்த 1,400 கிலோ ரேஷன் அரிசியுடன், அந்த சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செந்தில் பாலாஜி உடல் நலம் பெற வேண்டி தி.மு.க.வினர் மொட்டையடித்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
    • பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

    கருர், 

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இல்லங்கள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி விசாரணை நடத்தினர். இறுதியில் அவரை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக கெண்டு வந்த காரில் சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தியதில் இருதய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் அவருக்கு அடுத்தக்கட்டமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்து இருந்தனர்.அந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்வதற்கு அனுமதி கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினர் கோர்ட்டை நாடி இருந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.இந்த உத்தரவை தெடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று இரவு சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சக்திவேல், கவுன்சிலர் பூபதி, மத்திய நகர இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மத்திய நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுபாஷ் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தினர்.மேலும், கோவில் வளாகத்தை சுற்றி அங்க பிரதட்சணம் மேற்கொண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    • இணைய தளத்தில் வெளி மாநில தொழிலாளர் விவரம் பதிவேற்றம் செய்ய வேண்டும்
    • தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவு

    கரூர்,

    தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், விவசாயம், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள், முடிதிருத்தம் செய்யும் நிலையங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். அவர்களின் விவ ரங்களை வேலை அளிப்பவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தும் முன்பாக தொழிலாளர் நலத்துறையின் வெளிமாநில தொழிலாளர் வலைதள பக்கத்தில் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஏற்படுத்தி வெளி மாநில தொழிலாளர்களின் ஆதார் எண் விவரம், கைப்பேசி எண், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • செல்போனில் பேசியதை கண்டித்ததால் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் மாயமானார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் குமரகவுண்டனூரை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மனைவி ஈஸ்வரி (வயது 24).இவர் உப்பிடமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு கிரஷா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஈஸ்வரி அதிகமாக செல்போனில் பேசிவந்ததால் இவரின் தாய் ராணி திட்டியதாக தெரிகிறது. இதனால் கடந்த 14ம் தேதி காலை ஈஸ்வரி தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தான் வேலை பார்க்கும் உப்பிடமங்கலத்திற்கு செல்வதாக, தனது கணவரின் தாயார் லட்சுமியிடம் தெரிவித்துவிட்டு சென்று உள்ளார்.பின்னர் குழந்தையுடன் சென்ற ஈஸ்வரி இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட பல் வேறு இடங்களில் தேடிப்பார்த்து உள்ளார். இதில் மாயமான தனது மனைவி ஈஸ்வரி மற்றும் குழந்தை கிடைக்க வில்லை என்பதால் சிந்தாமணிபட்டி காவல்நிலையத்தில் குணசேகரன் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஈஸ்வரி மற்றும் 2 வயது பெண் குழந்தையை தேடிவருகின்றனர்.

    • குளித்தலை அருகே மதுப்பாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது செய்யபட்டனர்
    • போலீசார் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வந்த தகவலின்பேரில் குளித்தலை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் இரும்பூதிபட்டியில் இருந்து குப்பாச்சிபட்டி செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த 4 பேரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர்கள் 76 மது பாட்டில்களை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் போத்தராவுத்தன்பட்டி குமார் (வயது 48), வெள்ளாளப்பட்டி ராமகிருஷ்ணன் (40), கிளரிபட்டி சிவலிங்கம் (54), வேளாண்காட்டுப்பட்டி நீளமேகம் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
    • இதில் பவ்வேறு கோஷங்களை எழுப்பினர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் மாவட்டச் செயலாளர் அருள் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத சோதனை, கைது, சித்ரவதை செய்த பா.ஜ.க. மோடி அரசின் அமலாக்க துறையை கண்டித்தும், உடனே விடுதலை செய்ய கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு வீடு கட்டுவோர் கூட்டுறவு நல சங்க தலைவர் சாமியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • குளித்தலையில் மனைவி மாயமானதால் கணவர் போலீசில் புகார் கொடுத்தார்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    குளித்தலை அடுத்த தொண்டமாங்கிணம் பஞ்., குமரக்கவுண்டனூரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 25) லாரி டிரைவர். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு த்ரிஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஈஸ்வரி உப்பிடமங்கலத்தில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் ரத்தப்பரிசோதனை செய்ய சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து குணசேகரன் தனது மனைவியை காணவில்லை என சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்யபட்டது
    • போலீசார் திருமாநிலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

    கரூர்,

    கரூர் மாவட்ட அமராவதி ஆற்றங்கரையோரம் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வந்தாலும் மணல் திருட்டை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் மணல் கடத்தல் நடப்பதாக வந்த புகாரையடுத்து கரூர் பசுபதிபாளையம் போலீசார் திருமாநிலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரட்டை மாட்டு வண்டியில் கரூர் செல்லாண்டி பாளையத்தை சேர்ந்த ராம்ராஜ் (வயது 40) என்பவர் மணல் கடத்தி சென்றார். இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க சென்ற போது ராம்ராஜ் தப்பி ஓடினார். பின்னர் போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகழூர் நகர தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்திற்கு புகழூர் நகர அவைத்தலைவர் வாங்கிலி தலைமை தாங்கினார்.

    கரூர்,

    புகழூர் நகர தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நகர கழக அலுவலகத்தில் நடைபெற்றது. புகழூர் நகர அவைத்தலைவர் வாங்கிலி தலைமை தாங்கினார். புகழூர் நகர்மன்ற தலைவரும், நகர கழக செயலாளருமான நொய்யல் சேகர் (எ) குணசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்தும், இந்த கைதை கண்டித்து கோவையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் புகழூர் நகர பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாநில, மாவட்ட, நகர, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் அணி அமைப்பாளர்கள் வாக்குச் சாவடி முகவர்கள் மற்றும் கழகத்தின் மூத்த முன்னோடிகள் உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • கரூரில் மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 98 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கரூர்,

    மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் குளித்தலை சுங்ககேட் மற்றும் குப்பாச்சிப்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் குளித்தலை போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, மது விற்ற அதே பகுதியை சேர்ந்த சுகதேவ் (வயது 27), குமார் (48), ராமகிருஷ்ணன் (40), சிவலிங்கம் (54), நீலமேகம் (33) ஆகிய 5 பேரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 98 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×