என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூரில் காங்கிரஸ் சார்பில் ராகுல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது
    • ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

    கரூர், 

    ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் வெள்ளியணையில் உள்ள ராகவேந்திரா அறக்கட்டளையில் படிக்கின்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.அதேபோல செல்லாண்டிபட்டி ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மாணவர் காங்கிரஸின் மாநில செயலாளர் சசிகுமார் சார்பாக நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சில் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவர் சின்னையன், நாகேஸ்வரன், முன்னாள் நகர தலைவர் சுப்பன், சனப்பிரட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் முத்துசாமி, பரமசிவம், செல்வராஜ், வெள்ளியணை பத்மநாபன் மற்றும் பரமத்தி வட்டார காங்கிரஸ் கமிட்டி துனைத் தலைவர் விசுவை செந்தில், வெள்ளியணை லோகநாதன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.இதே போல் கரூர் வெங்கமேடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றி ஐயப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து லைட் ஹவுஸ் காந்தி சிலை மற்றும் தான்தோன்றி மலை பேருந்து நிறுத்தத்தில் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையேற்று கொடி ஏற்றினார். கரூர் மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு, மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட சேவாதள தலைவர் தாந்தோணி குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கிழக்கு நகர தலைவர் சண்முகசுந்தரம், மாநகர துணை தலைவர் கண்ணப்பன், மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் மெய்ஞான மூர்த்தி நிர்வாகிகள் சரவணன், பாலமுருகன், சண்முகம், குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோகுலே, பரமத்தி நல்ல சிவம், எஸ்சி எஸ்டி பிரிவு முனீஸ்வரன், ரவிச்சந்திரன், முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்" உறுதிமொழி எடுக்கப்பட்டது.முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.பொது மேலாளர் கலைச்செல்வன், முதுநிலை மேலாளர் சிவக்குமார், மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.

    • அடையாளம் தெரியாத வாலிபர் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • ரெயில்வே போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், வாங்கல் அருகே நேற்று இரவு பாலக்காட்டில் இருந்து சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் லோகோ ஓட்டுநர் மலைச்சாமி ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் தலை வைத்து படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உடனடியாக ரெயிலின் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனாலும் ரெயிலை நிறுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த ரெயில் தண்டவாளத்தின் மீது தலை வைத்து படுத்திருந்த அடையாளம் தெரியாத வாலிபரின் மீது சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே சிறப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இறந்த வாலிபர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் வந்தாரா, அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குளித்தலையில் ஒரே நேரத்தில் ஆண்,பெண் இருவர் மாயமாகி உள்ளனர்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 37). நிதிநிறுவன அதிபரான, இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் சரவணன் சம்பவத்தன்று தனது தொழில் விஷயமாக பணம் வசூல் செய்ய வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.இதையடுத்து மல்லிகா தனது கணவர் சரவணனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான சரவணனை தேடி வருகின்றனர்.இதேபோல் குளித்தலை அடுத்த, இரணிய மங்கலம் வலையப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 28). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் வீட்டில் இருந்த ராஜேஸ்வரியை காணவில்லை என சக்திவேல் குளித்தலை போலீசில் புகாரளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரியை தேடி வருகின்றனர்.

    • தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை
    • கரூர் மின் ஊழியர் சி.ஐ.டி.யு. மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம்

    கரூர்,

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) கரூர் மண்டல குழு கூட்டம், சி.ஐ.டி.யு. சங்க அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட செயலாளர் கோவிந்தராசு வரவேற்று பேசினார். கரூர் மண்டல செயலாளர் தனபால், மாநிலத் துணை தலைவர்கள் ஸ்ரீதேவி, கோபலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். குளித்தலை கோட்ட செயலாளர் நெடுமாறன் நன்றி கூறினார்.கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் சங்க அலுவலக கட்டிடம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு, ஊழியர்களுக்கும் தனி த்தனியாக கழிவறை மற்றும் ஓய்வு அறைகள் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு ஊர் மாற்றம் செய்திட வேண்டும், 60 ஆயிரம் காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5,000 கேங்மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட பிற சலுகைகள் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • க.பரமத்தி பகுதியில் மதுபாட்டில் பதுக்கி விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
    • அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    கரூர்,

    க.பரமத்தி பகுதியில் மது பாட்டில் பதுக்கிய வழக்கில் ஒருவர் மீது க.பரமத்தி போலீசார் வழக்குபதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். க.பரமத்தி அடுத்த முள் காட்டு பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் க.பரமத்தி போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப் போது திருவாரூர் மாவட்டம் கருவகுறிச்சி பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் வீரமணி(வயது 42) என்பவர் க.பரமத்தி அடுத்த முள் காட்டு பகுதியில் மது விற்ப னைக்காக 5 பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட் டது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் க.பரமத்தி போலீசார் வீரமணி மீது கைது செய்து விசாரித்து வருகின்றனர்

    • தென்னை சாகுபடி பயிற்சியில் கலந்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • வேளாண் அறிவியல் மைய தலைவர் அழைப்பு

    கரூர்,

    'இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் கரூர் மாவட்ட வேளாண் அறி வியல் மையம் சார்பில் நாளை, தென்னை சாகுபடி குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடக்கிறது' என, வேளாண் அறிவியல் மைய தலைவர் திரவியம் ஜெயராஜ் தெரி வித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டம், தோகைமலை அருகே புழுதேரியில் உள்ள, வேளாண் அறிவியல் மையத்தில் நாளை (20ல்) லாபகரமான தென்னை சாகுபடி குறித்த, ஒருநாள் பயிற்சி அளிக் கப்படுகிறது. அதில், தென்னை நாற் றங்கால் தொழில்நுட்பம், பிஞ்சு உதிர் வதை தடுத்தல், ஒருங்கிணைந்த உரம், நீர்மேலாண்மை, பூச்சிநோய் மேலாண்மை மற்றும் கூட்டு பொருட்கள் தயாரித்தல் குறித்து செயல் விளக்கம் அளிக்கப் படும். பயிற்சியில் பங்கேற்க விருப் பமுள்ள விவசாயிகள், 95665-20813, 86678-82566 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நடுவதியம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் கோபிகா ஸ்ரீ (வயது 16). இவர் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.கோபிகா ஸ்ரீ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் பெற்றோர் படிப்பு சம்பந்தமாக கண்டித்தும், டியூசன் சென்று நன்றாக படிக்கும்படியும் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். இதனால் ேகாபிகா ஸ்ரீ மனமுடைந்து காணப்பட்டார். இதையடுத்து கோபிகா ஸ்ரீயின் பெற்றோர் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் கோபிகா ஸ்ரீ வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    இதைப்பார்த்த கோபிகா ஸ்ரீயின் தங்கை யுவஸ்ரீ சத்தம் போட்டு உள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் கோபிகா ஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு கோபிகா ஸ்ரீயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த தற்கொலை குறித்து பாலு கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்
    • இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). இவர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்க சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த வையாபுரி நகரை சேர்ந்த ராமசுப்பிரமணி (37) என்பவர், சிலம்பரசனிடம் மது குடிக்க பணம் கேட்டு உள்ளார். அப்போது 2 பேருக்கும் இடைேய வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணி, சிலம்பரசனை தகாத வார்த்தையால் திட்டி, பீர்பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிலம்பரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு  மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, ராமசுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மோதி ஓட்டல் தொழிலாளி பலியானார்
    • இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே உள்ள மீமிசல் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 36). இவர் கரூரில் உள்ள ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுபாஷ் சந்திரபோஷ் ஓட்டல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி சுபாஷ் சந்திரபோஸ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிேசாதித்த டாக்டர்கள் சுபாஷ் சந்திரபோஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி புரசம்பட்டி காலனியை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மகன் சசிகுமார் (வயது 38). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் கடந்த 14-ந்தேதியன்று சசிகுமார் எலி மருந்து (விஷம்) தின்றார். இதனால் அலறி துடித்த அவரை மனைவி பானுப்பிரியா மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சசிகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து பானுப்பிரியா கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் வாலிபர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கரூர் அருகே வடமாநில தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
    • இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் அருகே புத்தாம்பூரில் ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு வெளியிடங்களில் இருந்து நூல்களை வாங்கி போர்வைகள், அலங்கார துணிகள், திரைச்சீலைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பல வடமாநிலத்தினரும் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் சத்தீஸ்கார் மாநிலம் ஜன்ஜிர் கம்பா குர்டாவை சேர்ந்த அசோக் தாஸ் மகந்த் (வயது 37) என்பவர் ஜவுளி பூங்காவின் விடுதியில் தங்கியிருந்து கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை விடுதியில் 44-வது அறையில் இருந்த அசோக் தாஸ் மகந்த் திடீரென மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அவரது உடல் முழுவதும் கருகியது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயம் அடைந்த அசோக் தாஸ் மகந்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக் தாஸ் மகந்த் பரிதாபமாக இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    அசோக் தாஸ் மகந்த் இறந்த செய்தி கேட்டு அவரது மனைவி அனிதா மகந்த் (34) மருத்துவமனையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே ஜவுளி பூங்காவில் பெண்கள் விடுதியில் தங்கி அனிதா மகந்த் அவரது மூத்தமகள் முஸ்கன் சூர்யாவும் ஊழியராக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து அசோக் தாஸ் மகந்த் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் ஜவுளி பூங்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×