என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்
கரூர்,
கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்" உறுதிமொழி எடுக்கப்பட்டது.முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.பொது மேலாளர் கலைச்செல்வன், முதுநிலை மேலாளர் சிவக்குமார், மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.
Next Story






