என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது
    X

    வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது

    • வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்
    • இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). இவர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்க சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த வையாபுரி நகரை சேர்ந்த ராமசுப்பிரமணி (37) என்பவர், சிலம்பரசனிடம் மது குடிக்க பணம் கேட்டு உள்ளார். அப்போது 2 பேருக்கும் இடைேய வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணி, சிலம்பரசனை தகாத வார்த்தையால் திட்டி, பீர்பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிலம்பரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, ராமசுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×