என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தையுடன் இளம்பெண் மாயம்
    X

    குழந்தையுடன் இளம்பெண் மாயம்

    • செல்போனில் பேசியதை கண்டித்ததால் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் மாயமானார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் குமரகவுண்டனூரை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மனைவி ஈஸ்வரி (வயது 24).இவர் உப்பிடமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு கிரஷா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஈஸ்வரி அதிகமாக செல்போனில் பேசிவந்ததால் இவரின் தாய் ராணி திட்டியதாக தெரிகிறது. இதனால் கடந்த 14ம் தேதி காலை ஈஸ்வரி தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தான் வேலை பார்க்கும் உப்பிடமங்கலத்திற்கு செல்வதாக, தனது கணவரின் தாயார் லட்சுமியிடம் தெரிவித்துவிட்டு சென்று உள்ளார்.பின்னர் குழந்தையுடன் சென்ற ஈஸ்வரி இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட பல் வேறு இடங்களில் தேடிப்பார்த்து உள்ளார். இதில் மாயமான தனது மனைவி ஈஸ்வரி மற்றும் குழந்தை கிடைக்க வில்லை என்பதால் சிந்தாமணிபட்டி காவல்நிலையத்தில் குணசேகரன் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஈஸ்வரி மற்றும் 2 வயது பெண் குழந்தையை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×