என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் நெய்யூர் பேரூராட்சி ஆக்கப்பத்துகுளம் முதல் பட்டணத்துக்குளம், ஆலங்கோடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி முதல் காட்டுக்குளம் சாலை, காட்டுக்குளம் முதல் அம்மாள்குளம் சாலை, பால்தெரு காட்டுக்குளம் சாலை முதல் பேரூராட்சி கிணறு வழியாக முரசங்கோடு செல்லும் சாலை, எரிவிளாகம் கிணறு முதல் கடம்பவிளை சாலை, திங்கள்நகர் - கருங்கல் மெயின் ரோடு முதல் வடக்கன்கரை சாலை வரை பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் நகர்ப்புற சாலைகள், குடிநீர் தொட்டி அமைக்க, சிமெண்ட தளம் அமைத்தல் என பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் ரூ.1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மகேஷ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, பேரூராட்சி செயல் அலுவ லர் சகாயமேரி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பொதுக்குழு உறுப்பினர் ஜாண் லீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன், பேரூராட்சி துணை தலைவர் பென் டேவிட், கவுன்சிலர்கள் புஷ்பதிரேஷ், கவிதாராணி, சாராள்மேரி, ராஜகலா, எழில் டைசன், ததேயுராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், சுமன், ராப்சன் மற்றும் விஜி, ஜெகன், பிரான்சிஸ், வழக்கறிஞர் அலெக்ஸ், தனு கென்னடி, ஜெரோம், சாம் ஜெபசிங், ரஞ்சித், தா.ஜெபராஜ், ஆசிரியர் பால், ஜெகதீஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 28 இடங்களில் காமிரா அமைப்பு
    • குமரி வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை வனப்பகுதிகளை யொட்டியுள்ள சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைக்கல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் புலி அட்டகாசம் செய்து வருகிறது. மாடு, 2 ஆடுகளை கடித்து கொன்றது. ஒரு நாயையும் புலி கவ்வி சென்றது. இது ரப்பர் தோட்ட தொழிலா ளர்கள் மற்றும் பழங்குடி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்படும் பகுதிகளில் காமிராக்கள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது 28 காமிராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 2 இடங்களில் புலியை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    கூண்டு அமைக்கப்பட்ட பகுதியிலும் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்ட பகுதியிலும் கடந்த 2 நாட்களாக புலி நடமாட்டம் இல்லை. இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து வன அதி காரி ஒருவர் கூறியதாவது:-

    புலியை பிடிக்க இரவு பகலாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கண்காணிப்பு காமிராவில் புலி சிக்கவில்லை. ஒரு இடத்தில் புலி வந்து சென்றால் மீண்டும் அந்த இடத்திற்கு 3 நாட்கள் கழித்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    எனவே தற்போது வந்து சென்ற பகுதியில் இன்று அல்லது நாளைக்குள் புலி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே அந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. புலி இன்று அல்லது நாளைக்குள் சிக்காத பட்சத்தில் புலியை பிடிக்க வெளியே இருந்து பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்களை அழைத்து வரலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது
    • குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை மின் கோட்டத்துக்கு உட்பட்ட புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, நம்பாளி, இரவிபுதூர்கடை, கிள்ளியூர், பள்ளியாடி, சூரியகோடு பிரிவுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் தளவாடங்கள் மாற்றும் பணி வருகிற 19-ந் தேதி முதல் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. 31-ந் தேதி வரை பணிகள் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு நாளும் பணி நடக்கும் நாளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.அதன்படி 19-ந் தேதி கொன்னறை, மங்காடு, பள்ளிக்கல், சரல்விளை, குழித்தோட்டம், திருஞானபுரம், பாலவிளை, மங்கலக்குன்றி, தொழிச்சல், வள்ளவிளை, இளம்பாலமுக்கு. மங்காடு, சரல்முக்கு, கோயிக்கத்தோப்பு, பணமுகம், பணமுகம், செறுகோல், அரசகுளம், கல்நாட்டி, குஞ்சாகோடு, பகுத்திக்காட்டு விளை, கோழிப்போர்விளை பகுதியிலும், 20-ந் தேதி மெதுகும்மல், குளப்புறம் பகுதி யிலும், 21-ந் தேதி மானான்விளை, கருக்குப்பனை, வடக்கன்கரை, கொல்லன்விளை, காக்கவிளை, வைக்கல்லூர், பருத்திக்கடவு, வாழ் வச்சக்கோஷ்டம், கொடு வனம்தோட்டம், முள்ளங்கனா விளை, இடவார், வளனூர் பகுதியிலும் மின் தடை ஏற்படும்.வருகிற 24-ந் தேதி பாத்திமாபுரம், பூவன்விளை, கோழிப்போர்விளை, இலவுவிளை, கல்லுக்கூட்டம், சடையன்குழி, மணக்காலை பகுதிக்கும், 25-ந் தேதி கொடுவனம்தோட்டம், மாராயபுரம், உதய மார்த்தாண்டம், மிடாலம், தையாலுமூடு, கோழிவிளை பகுதிகளுக்கும், 26-ந் தேதி கொல்லங்கோடு, மேடவிளாகம், மார்த் தாண்டன்துறை, நீரோடி, பாத்திமாபுரம், சுவாமியார்மடம், புலிப்பனம், விழுந்தயம்பலம், வெட்டுவிளை, ஆப்பிக்கோடு, நட்டாலம், இடவிளாகம் பகுதிகளுக்கும், 27-ந் தேதி ஓச்சவிளை, பேப்பிலாவிளை, ஓலவிளை, வாய்க்கால்கரை, விரிவிளை, வாவறை பகுதி களுக்கும், 28-ந் தேதி சங்குருட்டி, அடைக்காகுழி, செங்கவிளை, செம்முதல், தாழக்கான்வல்லி, செவ்வேலி, கூட்டமாவு, சூரியகோடு, பாத்திமாநகர் பகுதிகளுக்கும், 31-ந் தேதி தொண்டனாவிளை, தும்பாலி, மறுகண்டான்விளை, பிராகோடு, கடுவாக்குழி, சிராயன்குழி, குன்னம்பாறை, பழையகடை, வருக்கவிளை பகுதிகளிலும் முன்விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை குழித்துறை மின்விநியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • சி.சி.டி.வி காமிரா பதிவை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • கதவை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம மனிதன் யார்?

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையில் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை பணியாளர்கள் பணிக்கு வந்தனர். மேல்நிலைப்பள்ளிக்கு வந்தவர்கள் கதவை திறந்ததும் பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். கண்காணிப்பு காமிராவும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார். மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சி.சி.டி.வி. காமிரா பதிவு களை கைப்பற்றி ஆய்வு செய்த போது, மர்ம மனிதன் ஒருவன், இரும்பு கம்பியால் கதவு தாழ்ப்பாளை உடைத்து திறப்பதும் தலைமை ஆசிரியர் அறை யில் உள்ள பீரோவை திறப்பதும் பதிவாகி இருந்தது. அங்கு ஏதும் கிடைக்காததால் தொடக்கப் பள்ளிக்கும் மர்ம மனிதன் சென்றுள்ளான். அங்கும் எதுவும் கிடைக்காததால் கண்காணிப்பு காமிராவை சேதப்படுத்தி விட்டு சென் றுள்ளதும் தெரியவந்தது.

    பள்ளிக்கூடத்திற்குள் கொள்ளையன் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப் பள்ளியில் உள்ள குடிநீர் குழாய்களை மர்ம நபர் உடைத்து எடுத்து சென்ற சம்பவம் நடந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் இதுவரை திருடர்கள் யார்? என்பது கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் 2 பள்ளிகள் மற்றும் அதன் வளாகத்தில் 9 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இருப்பினும் மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதும் கண் காண்கணிப்பு காமிரா சேதப்படுத்தப்பட்டு இருப்பதும் அந்த பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. தற்போது காமிரா வில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • 5 வருட ஓப்பந்த அடிப்படையில் ஓட்டல் நடத்தி வருகிறார்
    • குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள செறுவாரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் அன்சாத். இவர் அந்த பகுதியில் கடந்த 3 வருடங்களாக கனகராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 5 வருட ஓப்பந்த அடிப்படையில் ஓட்டல் நடத்தி வருகிறார். தகராறு

    இந்த நிலையில் 3 வருடங்கள் முடிந்ததும் கனகராஜ், கூடுதல் பணம் வேண்டும் இல்லை யென்றால் ஓட்டலை காலி செய்ய வேண்டும் என்று அன்சாத்திடம் கூறினாராம். இது தொடர்பாக அவர் களுக்குள் தகராறு ஏற்பட்டு களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. மேலும் குழித்துறை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அன்சாத் 5 வருடம் கடை நடத்தலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அன்சாத் ஓட்டலை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஒரு கும்பல் ஓட்டலுக்குள் திடீரென புகுந்துள்ளது. அவர்கள் அங்கிருந்த பொருட்களை சூறை யாடியதோடு, உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதலும் நடத்தியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் திரண்டதால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த தாக்குதலில் ஓட்டல் ஊழியர் அப்துல் சலாம் படுகாயமடைந்தார். அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டது யார்? தாக்கு தலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
    • சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் இந்த பூங்காவிற்கு விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகளவு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் நாகர்கோவில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பூங்காவிற்கு வருகின்றனர். கைக்குழந்தைகளுடனும், குடும்பத்தோடும் ஏராளமா னோர் வந்து செல்கிறார்கள். குழந்தை கள் இங்கு உள்ள விளையாட்டு உபகரணங்க ளில் விளையாடி மகிழ்வா ர்கள். செல்பி பாயிண்டில் நின்று பொதுமக்கள் புகைப்ப டம் எடுத்து மகிழ்வார்கள்.

    நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் சூழ்நி லையில் பூங்காவில் உள்ள ஒரு சில விளையாட்டு உபகர ணங்கள் மோசமாக காண ப்படு கிறது. ஊஞ்சல்கள் உடைந்து தொங்குகின்றன. மேலும் இங்குள்ள செயற்கை நீர் ஊற்றுகளும் செயல்ப டாமல் மோசமான நிலையில் காணப்படு கின்றன. அந்த செயற்கை நீரூற்று களை சீரமைத்து செயல்படுத்த மாநகராட்சி மேயர் நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    இது தவிர பூங்காவிற்குள் ஆங்காங்கே மது பாட்டி ல்களும் குவிந்து கிடக்கின்றன. மாலை நேரங்களில் ஒதுக்குப்புறமான இடத்தில் சிலர் அமர்ந்து மது அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் பூங்காவில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டு ம். உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகர ணங்கள் மற்றும் இருக்கைகளை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    இது குறித்து பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் கூறுகை யில், நுழைவு கட்டணம் கொடுத்து விட்டு பூங்காவிற்கு வந்து சிறிது நேரம் குழந்தைகளுடன் நேரத்தை போக்கி செல்லலாம் என்று வருகிறோம். ஆனால் இங்கு போதுமான விளையாட்டு உபகரணங்கள் இல்லாத நிலை உள்ளது. சில விளை யாட்டு உபகரணங்கள் உடைந்து காணப்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் கூடுதலாக விளை யாட்டு உபகரணங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பது டன் உடைந்து கிடக்கும் விளை யாட்டு உபகரணங்களை சரி செய்யவும் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

    • குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சிக்குட்பட்ட குப்பைகள் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக குவிக்கப்பட்டு வந்தன.

    இதனால் மலைபோல் குவிந்து காணப்பட்ட குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசியது. இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனை தொடர்ந்து குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசைத்தம்பி, ஆணையாளர் ராமதிலகம் முயற்சியால் தற்போது குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

    இந்த குப்பைகள் வெளி மாவட்டங்களுக்கு வாக னங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.4 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. குழித்துறை நகராட்சி சார்பில் தற்போது மக்கும் குப்பை. மக்காத குப்பை என பிரித்து எடுக்கப்படு கிறது. இதனால் மார்க்கெட் பகுதியில் உள்ள நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகி கிருஷ்ணதாஸ், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், முன்னாள் நகர செயலாளர்கள் சந்துரு, சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் அக்ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, அணி செயலா ளர்கள் ராஜாராம், சுகுமாரன், ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர்நாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 20-ந்தேதி அண்ணா விளை யாட்டு அரங்கம் முன்பு நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திர ளாக கலந்து கொள்வது, உறுப்பினர்கள் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்து வருகிற 19-ந்தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைப்பது, மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெற உள்ள பொன்விழா எழுச்சி மாநாட்டில் குமரி மாவட்டத் தில் இருந்து அதிகப்படியான தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொள்வது, வருகிற நாடாளுமன்ற தேர்த லில் அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமி சுட்டிக்காட்டும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது என்பன உள்பட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி நடவடிக்கை
    • சந்தேகத்திற்கிடமாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர்

    தக்கலை, ஜூலை.18-

    தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் மற்றும் குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஆகியோர் நேற்று மாலை குளச்சல் அக்கரை பள்ளி என்னும் இடத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மீனவர்களின் படகுகளுக்கு பயன் படுத்தப்படும் மானிய விலையிலான வெள்ளை நிற மண்எண்ணை சிக்கியது. 31 கேன்களில் சுமார் 1000 லிட்டர் அளவில் மறைத்து வத்திருந்ததை தொடர்ந்து, அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை குளச்சல் அருகே செயல்படும் அரசு குடோனில் ஒப்படைக்கப் பட்டது.

    இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் மானிய விலையிலான மண்எணை் ணையை வெளிச் சந்தையில் விற்பனை செய்த பயனாளிகள் யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசா ரணை செய்யப்பட்டு வருகிறது.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • 231 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்துக் குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா கன்னியா குமரி அருகே உள்ள கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் கட்டமாக கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 231 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    விழாவில் அகஸ்தீஸ்வ ரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்டபெருமாள், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால், மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி, துணை தலைவர் விமலா, பேரூ ராட்சி வார்டு கவுன்சிலர் சரோஜா, மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிதம்பரம், பள்ளி தலைமை ஆசிரியை பேபி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் நன்றி கூறினார்.

    இதேபோல் தென்தா மரைகுளம் பேரூராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் 1-வது வார்டு தென்தாமரைகுளம் முதல் தேரிவிளை-மன்னராஜா கோவில் சாலை, 6-வது வார்டு தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் முதல் பூவியூர் அம்பலம் சாலை அலங்கார கற்கள் பதிக்கும் பணியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் தன்னாட்சி அதிகாரம் பெற்று செயல்படும் அமலாக்க துறை போன்ற துறைகளை மத்திய அரசு கையில் வைத்து கொண்டு அரசியல் அடக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.

    பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நடவ டிக்கை எடுக்க அனுப்பப் பட்ட கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட வில்லை. தி.மு.க.வை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளும் எந்த சக்தியும் தமிழக பா.ஜ.க.விற்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் தாமரை பாரதி, தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், துணை தலைவி மல்லிகா, பேரூ ராட்சி கவுன்சிலர்கள் எட்வின் ராஜ், பூவியூர் காமராஜ், ஆல்வின், கான்ஸ்டன் டைன், அமுதா, தி.மு.க. பிரமுகர்கள். பேராசிரியர் டி.சி. மகேஷ், தாமரை பிரதாப் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாரதிய ஜனதா அரசு, நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது.
    • பாரதிய ஜனதா அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியல் உள்நோக்கம் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது ஓபன் சீக்ரெட் ஆகும். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராகவும், டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற மாநிலங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.

    பாரதிய ஜனதா அரசு, நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது. பாரதிய ஜனதா அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இவ்வாறு சோதனை நடத்தப்படவில்லை. இந்த சோதனைகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

    தமிழக கவர்னர் ரவி ஏராளமான கோப்புகளில் கையெழுத்து போடாமல் உள்ளார். தி.மு.க., மிசா உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை கண்ட கட்சியாகும். எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. தி.மு.க. எதனை கண்டும் அஞ்சப்போவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியாக இதை அணுகுவார்கள்.

    இந்த சோதனைகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநரும், மத்திய அரசும் தேர்தல் பிரசாரத்தை தி.மு.க.விற்கான தேர்தல் பிரசாரமாக செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • குருந்தன்கோடு வட்டார துணைத் தலைவர் எனல் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடியில் மீனவர் ஓய்வறை மற்றும் மீனவர்கள் வலை பின்னும் இடம் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் தொகுதி எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    பங்குத்தந்தை சகாய ஆனந்த், குருந்தன்கோடு வட்டார துணைத் தலைவர் எனல் ராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ×