search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டாரத்தில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்
    X

    கொட்டாரத்தில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • 231 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்துக் குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா கன்னியா குமரி அருகே உள்ள கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் கட்டமாக கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 231 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    விழாவில் அகஸ்தீஸ்வ ரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்டபெருமாள், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால், மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி, துணை தலைவர் விமலா, பேரூ ராட்சி வார்டு கவுன்சிலர் சரோஜா, மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிதம்பரம், பள்ளி தலைமை ஆசிரியை பேபி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் நன்றி கூறினார்.

    இதேபோல் தென்தா மரைகுளம் பேரூராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் 1-வது வார்டு தென்தாமரைகுளம் முதல் தேரிவிளை-மன்னராஜா கோவில் சாலை, 6-வது வார்டு தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் முதல் பூவியூர் அம்பலம் சாலை அலங்கார கற்கள் பதிக்கும் பணியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் தன்னாட்சி அதிகாரம் பெற்று செயல்படும் அமலாக்க துறை போன்ற துறைகளை மத்திய அரசு கையில் வைத்து கொண்டு அரசியல் அடக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.

    பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நடவ டிக்கை எடுக்க அனுப்பப் பட்ட கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட வில்லை. தி.மு.க.வை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளும் எந்த சக்தியும் தமிழக பா.ஜ.க.விற்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் தாமரை பாரதி, தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், துணை தலைவி மல்லிகா, பேரூ ராட்சி கவுன்சிலர்கள் எட்வின் ராஜ், பூவியூர் காமராஜ், ஆல்வின், கான்ஸ்டன் டைன், அமுதா, தி.மு.க. பிரமுகர்கள். பேராசிரியர் டி.சி. மகேஷ், தாமரை பிரதாப் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×