என் மலர்
கள்ளக்குறிச்சி
- குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- மனமுடைந்த நிர்மலா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நிர்மலா (வயது 23) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவர்களுக்கு இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் மனமுடைந்த நிர்மலா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள், நிர்மலா ஏற்க னவே இறந்து விட்டதாக தெரி வித்த னர். இது தொடர்பாக சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- அங்கன் வாடியில் அமுதலட்சுமி பணியாற்றி வந்தார்.
- காயமடைந்த அமுத லட்சுமியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). இவரது மனைவி அமுதலட்சுமி (52). கடந்த 30 ஆண்டுகளாக அதே கிராமத்தில் அங்கன் வாடியில் அமுதலட்சுமி பணியாற்றி வந்தார். இந்நிலையில் அங்கன் வாடி தொடர்பான பணிக் காக உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவல கத்திற்கு தனது கணவ ருடன் அமுதலட்சுமி மோட் டார் சைக்கிளில் சென்றார். அப்போது எலவனாசூர் கோட்டை அருகில் இருந்த டீக்கடையில் டீ குடிப்ப தற்காக மோட்டார் சைக்கி ளை நிறுத்தினர்.
அமுதலட்சுமிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருந்ததால், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அமுத லட்சுமியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக புதுவை மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அமுதலட்சுமி பரிதாபமாக நேற்று உயிர் இழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் எலவனா சூர் கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
- தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார்.
- லாட்டரி சீட்டுகளுடன் இருந்த பார்த்த சாரதியை சுற்றி வளைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் டி.புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 40). இவர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். மேலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு லாட்டரி சீட்டுகளை விநியோக மும் செய்து வந்தார். லாட்டரி சீட்டு விற்றது தொடர்பாக பார்த்தசாரதியை கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம் மாவட்ட போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் உளுந்தூர் பேட்டை பஸ் நிலையத்தில் பார்த்தசாரதி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தாக போலீசாருக்கு ரகசிய தகவல் நேற்று இரவு கிடைத்தது. உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளுடன் இருந்த பார்த்த சாரதியை சுற்றி வளைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரிட மிருந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் எங்கி ருந்து கிடைக்கிறது? யார் யாருக்கெல்லாம் விநியோ கம் செய்தார் என்பன போன்ற கோணங்களில் உளுந்தூர் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 9 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
- போலீசார் பிரிதிவிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையிலான போலீசார் பிரிதிவிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காலனி தகன மேடை அருகே சிலர் அமர்ந்து கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 10- க்கும் மேற்பட்ட வர்கள் தப்பி ஓடினர். போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து மகன் வரதன் (வயது 38) உள்ளிட்டோர் தப்பி ஓடியது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.560 பணம் மற்றும் 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் வரதன் உள்ளிட்ட தப்பி ஓடிய வர்களை தேடி வருகின்ற னர்.
- ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு இருப்பதால், பருவத்திற் காக காத்திருக்க வேண்டிய தில்லை.
- நீர் ஆவியாதலை தடுத்து நீர்த்தேவையை குறைக்கவும் உதவும்.
கள்ளக்குறிச்சி:
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்ட செயலாக்கத் திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிஷிவந்தியம் வட்டாரத்திற்கு எக்டர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ.115.7 லட்சம் பெறப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்படு வதுடன் மேலும், பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்திட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பருவமில்லாத காலங்கள் மற்றும் ஆண்டு முழு வதும் பயிர் சாகுபடி மேற்கொண்டு வருமான த்தை பெருக்கிட பாது காக்கப்பட்ட சூழலில் தக்காளி, வெள்ளரி, குடை மிளகாய் போன்ற காய்கறி பயிர்களை பயிர் செய்திட பசுமைக்குடில் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. பசுமைக்குடில் என்பது ஒளி ஊடுருவக்கூடிய பொருட்களால் கட்டமைக் கப்பட்ட கண்ணாடி வீடு போன்ற அமைப்பா கும். அங்கு தாவரங்கள் வெப்ப நிலை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்கின்றன. ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு இருப்பதால், பருவத்திற் காக காத்திருக்க வேண்டிய தில்லை. மேலும், சந்தை ஏற்ற இறக்கங்களின் சூழ்நிலை களுக்கு ஏற்றவாறு சரியான முறையில் திட்டமிடு தலின் மூலம் உரிய நேரத்தில் தோட்டக்கலைப் பயிர்க ளான காய்கறி மற்றும் பூக்கள் போன்ற பயிர்க ளை சாகுபடி செய்து விளை பொருட்களுக்கு கூடுதல் லாபம் ஈட்டலாம்.
பாதுக்காக்கப்பட்ட சூழலில் விளைவிக்கப்படு வதால் விளைபொருட்கள் கூடுதல் தரத்துடனும், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இன்றி காணப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் மற்றும் நீரில் கரையும் உரங்களைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம். நிலப்போர்வை பயன்படுத் தப்படுவதால் களைகளைக் கட்டுக்குள் வைப்பதுடன், நீர் ஆவியாதலை தடுத்து நீர்த்தேவையை குறைக்கவும் உதவும். ஒருங்கிணைந்த சாகுபடி முறைகளை கடைபிடிப்ப தால் மகசூல் 5 முதல் 10% அதிகரிக்கும். இத்திட்டத்தில் 1000 ச.மீ. அளவுள்ள பசுமைக்குடில் அமைத்திட 50% மானியத்தில் அதிகபட்ச மாக ரூ.4,67,500 வழங்கப்ப டும். பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்க ளது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் 2, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் ரிஷி வந்தியம் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு ரிஷிவந்தியம் தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ரிஷிவந்தியம் அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சக்திவேல் என்பவருக்கும், வீட்டுமனை பிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 46). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பிச்சன் மகன் சக்திவேல் என்பவருக்கும், வீட்டுமனை பிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ராமநாதன் அவரது வீட்டுமனையில் மின்இணைப்பு பெற சர்வீஸ் பெட்டியை வைத்துள்ளார். இதை பார்த்த பிச்சன் மற்றும் அவரது மகன்கள் சக்திவேல், மூர்த்தி ஆகியோர் சர்வீஸ் பெட்டியை சேதப்படுத்தி, இந்த இடம் தங்களுக்கு சொந்தம் என்றும், இடத்தை உரிமை கொண்டாடினால் கொலை செய்து விடுவோம் என்று ராமநாதனை மிரட்டிய தாக தொிகிறது. இதுகுறித்து ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் பிச்சன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தனர்.
- இரும்பு கம்பியால் ஸ்டாலி னை திட்டி தாக்கி கொலை மிர ட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது.
- போலீசார் வழக்குப்ப திவு செய்து இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த சின்னக் கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன்ஸ்டாலின்(வயது 29) தொழிலாளி. சம்பவத் தன்று இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் சுபாஷ்(22) என்பவ ருக்கும் இடையே வாய்த்தக ராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக சுபாஷ் மற்றும் அவரது உற வினர்கள் 4 பேர், இரும்பு கம்பியால் ஸ்டாலி னை திட்டி தாக்கி கொலை மிர ட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இது குறித்து ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் சுபாஷ், வேலுசாமி, முருகன், இவரது மனைவி சின்னப் பிள்ளை ஆகிய 4 பேர் மீது பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்குப்ப திவு செய்து சுபாஷ், வேலுசாமி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- வீட்டின் கதவை திறக்கும் சத்தம் கேட்டு ராஜ்குமார் திடுக்கிட்டு எழுந்தார்.
- இருவரும் திருடுவதற்காக வீட்டின் கதவை திறக்க முயன்றபோது சிக்கியதும் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த பாவந்தூர் தக்காவை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் ராஜ்குமார்(37). இவர் சம்பவத்தன்றுஇரவு வீட்டின் முன்புறம்தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறக்கும் சத்தம் கேட்டு ராஜ்குமார் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் வீ்ட்டின் கதவை திறந்து திருட முயற்சித்துக்கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் 2 மர்ம நபர்களையும் துரத்தி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னா த்தூர் மெயின்ரோட்டை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேஷ்(36), ஆறுமுகம் மகன் விஜய்(30) என்பதும் இருவரும் திருடுவதற்காக வீட்டின் கதவை திறக்க முயன்றபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷ், விஜய் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதிகளான குரால் வீர பயங்கரம் கூகையூர் பாக்கம் பாடி, காளசமுத்திரம், நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஜி3 ஆலைய மூவிஸ் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு ஐயப்பன் துணை இருப்பான் என வைக்கப்பட்டுள்ளது.படத்தை தனலட்சுமி கணேசன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, பாடல், இயக்கம் மகாகணேஷ், இணை தயாரிப்பு சரஸ்வதி செல்வராஜ், அசோசியட் விஜயராஜ், உதவி இயக்குனர் திருமலை மாயக்கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை ராஜமுத்து, தயாரிப்பு நிர்வாகம் சந்திரசேகரன், இசை சதாசிவம் ஜெயராமன், ஒளிப்பதிவு துருகம் சதா, எடிட்டிங் ஆனந்த் செய்து வருகிறார். படப்பிடிப்பு சின்னசேலம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சினிமா படபிடிப்பை அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
- குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரப்பர் மற்றும் வாழை அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது.
- வெளியூர்களுக்கும், கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது
நாகர்கோவில் :குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரப்பர் மற்றும் வாழை அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் குறிப்பாக மட்டி, செவ்வாழை, ரசக்கதலி, ரோபஸ்டா உள்பட பல்வேறுவிதமான வாழைப்பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் வாழைத் தார்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி வெளியூர்களுக்கும், கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பருவமழையை நம்பியும் பாசன குளங்களை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை குமரி மாவட்டத்தில் பொய்த்து போய்விட்டது. இதனால் பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட வாழைகளுக்கு தண்ணீர் இல்லாமல் கருகிப்போய் உள்ளது. சில விவசாயிகள் மோட்டார் மூலமாக தண்ணீரை வைத்து வாழை பயிரிட்டுள்ளனர். ஆனால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதனுடைய உற்பத்தி குறைவாகவே உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு வரக்கூடிய வழைத்தார்களின் வரத்து குறைந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் வரத்து குறைந்துள்ளதால் வாழைத்தார்கள் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக நாகர்கோவில் மார்க்கெட்டில் ஒரு கிலோ மட்டி பழம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. மட்டி வாழைத்தார் ரூ.1000-க்கு மேல் விற்பனை ஆகிய வருகிறது. இதேபோல் ரசக்கதலி வாழைப்பழத்தின் விலையும் 4 மடங்கு உயர்ந்துள்ளது.
ஏற்கனவே ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.95 ஆக உயர்ந்துள்ளது. ரசக்கதலி வாழைத்தார் ஏற்கனவே ரூ. ௨௫௦ முதல் ரூ.300 வரை விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது ரூ.800 முதல் ரூ.௮௫௦ வரை விற்பனையாகி வருகிறது. பாளையங்கோட்டை பழமும் கிலோ ரூ.15-ல் இருந்து ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. செவ்வாழை பழத்தை பொறுத்த மட்டில் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ செவ்வாழை ரூ.65-க்கு விற்பனை யானது. ஒரு வாழைத்தார் ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டது. ஏத்தன் பழத்தின் விலையும் அதிகமாகியுள்ளது. ரூ.40-க்கு விற்கப்பட்ட ஏத்தன்பழம் தற்போது ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. ரோபஸ்டா, நாட்டுபழம், சக்கை பேயன் விலை உயர்ந்துள்ளது. வாழைத்தார்கள் விலை 2 மடங்கு முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது.இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-குமரி மாவட்டத்தில் ஏற்கனவே வாழைத்தார்கள் அதிகளவு விற்பனைக்காக வரும்.ஆனால் தற்போது பருவமழை பொய்த்து விட்டதால் வழைத்தார்கள் வரத்துகுறைவாகி உள்ளது. மேலும் ஆவணி மாதம் திருமண சீசன் அதிகம் இருக்கும்.இதனால் மக்களுக்கு பழத்தின் தேவை அதிகமாக தேவைப்படும். வரத்து குறைவாகஉள்ள காரணத்தினால் விலை உயர்ந்துள்ளது. இது மட்டும் இன்றி ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் இருந்து வியாபாரிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துபழங்களை வாங்கி செல்வார் கள். தற்போது ஓணம் பண்டிகை 29-ந்தேதிகொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் வியா பாரிகள் கேரளாவில் இருந்துபழங்களை வாங்குவதற்கு வருகி றார்கள். ஆனால் போதிய அளவு வாழைத்தார்கள்இல்லாததால் விலை அதிகரித்து உள்ளது என்றார்.
- தொரடி ப்பட்டு ஊராட்சியில் ஆத்து வளவு என்கிற ஆத்துக்காடு கிராமம் உள்ளது.
- மின்சாரம் இல்லாத ஒரு கிராமமாக இந்த கிராமம் உள்ளது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஒன்றி யத்திற்கு உட்பட்ட தொரடி ப்பட்டு ஊராட்சியில் ஆத்து வளவு என்கிற ஆத்துக்காடு கிராமம் உள்ளது. தொரடிப்பட்டு கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஒத்தையடிப் பாதை வழியாகச் சென்றால் ஆத்துக்காடு என்கிற ஆத்து வளவு கிராமத்திற்கு செல்லலாம். அங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வந்தாலும் ,இதுவரை மின்சாரம் இல்லாமல் மின் துறையினரின் கண்ணில் படாத ஒரு கிராமமாக இந்த ஆத்துக்காடு கிராமம் உள்ளது. செல்போனுக்கு சார்ஜ் வேண்டுமென்றாலும் அருகில் உள்ள கிராம த்திற்குச் சென்று தான் செல்போன் சார்ஜ் செய்து வருகிறார்கள். உலகமே டிஜிட்டல் மயமாக இருந்து வரும் இந்த கால கட்டத்தில் கல்வரா யன்மலை ஆத்துக்காடு கிராமத்தில் மின்சாரம் இல்லாத ஒரு கிராமமாக இந்த கிராமம் உள்ளது என்பது வேடிக்கை யாகத்தான் உள்ளது. ஆகையால் இப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளின் கண்ணில் படாத ஒரு தனி தீவு போல் வசித்து வருகிறார்கள். ஆகையால் இப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ராமச்சந்திரன் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார்.
- சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32) டிரைவர். இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள கார், வேன் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் ராஜா (27), பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (27), மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கல்வராயன் மகன் ருத்திரன் (25) உள்ளிட்ட மற்றும் சிலர் அங்கு வந்து ஏற்கனவே மதியம் எங்களிடம் ஏன் பிரச்சனை செய்தாய் எனக் கூறி ராமச்சந்திரனை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதே போல் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரில் நானும் எனது நண்பர் ராஜாவும் தனியார் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை பார்த்து வருவதாகவும், வேலை முடித்துவிட்டு தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பின்புறம் உள்ள காலி மனையில் உணவு அருந்திய போது அங்கே வந்த வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (47), அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (43) மற்றும் மடம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (40) உள்ளிட்ட சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து இரு தரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ராஜா, தமிழ்ச்செல்வன், ருத்திரன் மற்றும் சுதாகர், சக்திவேல், ரஞ்சித் குமார் ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






