என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே  இருதரப்பினர் இடையே மோதல்  6 பேர் மீது வழக்கு பதிவு
    X

    தியாகதுருகம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் 6 பேர் மீது வழக்கு பதிவு

    • ராமச்சந்திரன் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார்.
    • சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32) டிரைவர். இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள கார், வேன் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் ராஜா (27), பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (27), மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கல்வராயன் மகன் ருத்திரன் (25) உள்ளிட்ட மற்றும் சிலர் அங்கு வந்து ஏற்கனவே மதியம் எங்களிடம் ஏன் பிரச்சனை செய்தாய் எனக் கூறி ராமச்சந்திரனை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதே போல் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரில் நானும் எனது நண்பர் ராஜாவும் தனியார் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை பார்த்து வருவதாகவும், வேலை முடித்துவிட்டு தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பின்புறம் உள்ள காலி மனையில் உணவு அருந்திய போது அங்கே வந்த வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (47), அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (43) மற்றும் மடம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (40) உள்ளிட்ட சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து இரு தரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ராஜா, தமிழ்ச்செல்வன், ருத்திரன் மற்றும் சுதாகர், சக்திவேல், ரஞ்சித் குமார் ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×