என் மலர்
கள்ளக்குறிச்சி
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்க வேண்டும்: கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார்.
- அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், அனைத்து துறைகளின் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மாற்றுத்தி றனாளிகளுக்கை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என அறிவறுத்தினார். அதன்படி அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறைகளில் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்திடும் வகையில் வட்டார அளவில் முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி அட்டை வழங்கி, பணி வழங்குதல், வருவாய்த்துறை வாயிலாக உதவித்தொகை வழங்குதல் மற்றும் இதர சான்றுகள் வழங்குதல், மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, கூட்டுறவு வங்கிகள் மூலமாக தொழிற்கடனுதவிகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொண்டு சேர்த்திடவும், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவிஇயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- விக்கிரவாண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர் .
விழுப்புரம்.
விக்கிரவாண்டி பேரூராட்சியில் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பஸ் நிலையத்தில் நடந்த பேரணியை பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் , துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மீண்டும் மஞ்சள்பை கோஷத்தை எழுப்பியபடி,பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர் .
முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர் . பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை ,துணை சேர்மன் பாலாஜி, சப்–இன்ஸ்பெக்டர் ஆம்ஸ்டிராங், சுகாதார ஆய்வாளர் பிருத்திவிராஜ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்தி, சுதா, வீரவேல், சுரேஷ், வர்த்தகர் சங்க செயலாளர் ஜியாவுதீன் , பொருளாளர் சாதிக் பாட்ஷா. துணை தலைவர் சர்புதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் வெளியிட்டுள்ளார்.
- விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்நல அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் 23 பள்ளி விடுதிகள், 2 தொழில்நுட்ப கல்வி விடுதிகள் மற்றும் 1 கல்லூரி விடுதி ஆகிய விடுதிகளுக்கான புதிய மாணவ, மாணவியர்சேர்க்கை தேர்வுக்குழு மூலம் நடைபெற உள்ளது.
மேலும் பள்ளி விடுதிகளில் 4- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பாலிடெக்னிக் மாணவர், மாணவிகளும் விடுதிகளில் தங்கி பயில எவ்வித செலவினமும் இல்லாமல், அனைத்து விடுதி மாணவ,மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும்சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த தூர விதிமாணவிகளுக்கு பொருந்தாது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத்தமிழர்களின்குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களைக்எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கலாம்.
எனவே விடுதியில் தங்கி பயில விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் தங்கள்பயிலும் கல்வி நிலையங்களின் அருகில் உள்ள விடுதி காப்பாளரிடம்விண்ணப்பங்களை பெற்று தங்களின் உறுதிமொழி படிவம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அளிக்கும் உறுதிமொழி படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து தங்கள் பயிலும் கல்வி நிலைய தலைவரிடம் கையொப்பம் பெற்று பள்ளி விடுதி மாணவர்கள் வருகின்ற 06.07.2022-க்குள்மற்றும் கல்லூரி விடுதி மாணவர்கள் 31.08.2022- க்குள் விடுதி காப்பாளரிடம்அல்லது மாவட்டகலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சி றுபான்மையினர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டினார்.
- கள்ளக்கு றிச்சி மாவட்டத்தில் 27 இடங்கள் இயற்கை இடற்பாடுகளின் போது ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம் :
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். அவரது மகன் ராஜ்பிரியன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவன் ராஜ்பிரியன் தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். உடனே சக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். என்றாலும் ராஜ்பிரியன் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.
சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ராஜ்பிரியன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ராஜ்பிரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- தியாகதுருகம் அருகே குண்டும் குழியுமான சாலையால் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.
- தார் சாலை சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இருந்து புக்கிரவாரி செல்லும் சாலை உள்ளது.இந்த தார் சாலை சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்நிலையில் இந்த தார்சாலை தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் உடையார்பாளையம், உச்சி மணக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எஸ்.ஒகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் சாலை வழியாக சைக்கிளில் வரும்பொழுது அவ்வப்போது கீழே விழுகிறது.
மேலும் இந்தப் பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் விளைபொருட்களை விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் புக்கிரவாரி ரயில் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து தலைவாசல் காய்கறி சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு விவசாயிகள் விளை பொருளை இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லும் போது ஜல்லிகள் பெயர்ந்து போன குண்டும், குழியுமான சாலையில் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடிபோதையில் வந்த அர்ஜூணன் தனது மனைவியை தாக்கினார். இதனால் வேதனை அடைந்த அவர் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- இதனை நேரில் பார்த்த அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரும் அந்த மரத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் மேல்வாழை கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 55). விவசாயி. இவரது மகன் உதயகுமார் (25).
கடந்த சில நாட்களாக அர்ஜூணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். எனினும் இந்த பிரச்சினை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வந்தது.
நேற்று இரவும் இந்த பிரச்சினை வெடித்தது. எனவே, குடிபோதையில் வந்த அர்ஜூணன் தனது மனைவியை தாக்கினார். இதனால் வேதனை அடைந்த அவர் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதனை நேரில் பார்த்த அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரும் அந்த மரத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை தந்தை-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீபோல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தற்கொலை செய்த தந்தை-மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சங்கராபுரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.
- கல்வீசி பேருந்து கண்ணாடியை உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை வேலு என்பவர் ஓட்டினார். நடத்துநராக பாலகிருஷ்ணன் என்பவர் பணியில் இருந்தார்.
இந்த பஸ் கிடங்கல் பாண்டலம் வழியாக சென்றபோது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றது. அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசி உடைத்தனர்.
தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு, தொடர்ந்து கல்வீசி பேருந்து கண்ணாடியை உடைத்தவர்களை தேடி வருகின்றனர்.
- சங்கராபுரம் நியூபவர் மெட்ரிக்பள்ளி 10 ஆண்டுகளாக தொடர்ந்து கல்விசேவையில் முதலிடம் பிடித்துள்ளது,
- மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து எங்கள் பள்னி மாணவர்கள் சாதனை டைத்து வருகின்றனர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள நியூபவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து கல்விப்பணியில் மிகப்பெரும் சாதனை படைத்து வருகிறது.
இது குறித்து பள்ளி நிறுவனர் பெரியசாமி கூறுகையில், எங்கள் பள்ளி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு தொடக்கம் முதல் இன்று வரை கடைசி மாணவனும் முதல் மாணவனாக திகழ அரும்பாடுபட்டு சிறந்த கல்வியை வழங்கி வருகிறது. மேலும் எங்கள் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் அனைவரும் சிறந்த கல்வி வல்லுநர்களாக அரசுப்பணியில் உயர் பதவியில் உள்ளனர். மேலும் மருத்துவம், பொறியியல் வேளாண்மைத்துறை போன்ற பல்வேறு படிப்புகளில் முதன்மை மாணவர்களாக இருந்து வருகின்றனர்.
அனைத்து கல்வி ஆண்டுகளிலும் 100 சதவீதம் தேர்ச்சியோடு மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து எங்கள் பள்னி மாணவர்கள் சாதனை டைத்து வருகின்றனர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்தார்.
- தியாகதுருகம் அருகே நண்பர்களுடன் கோவிலுக்கு சென்ற மாணவன் மரணம் அடைந்தார்.
- ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன் (வயது 17), 10- ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான குமார் மகன் சந்தோஷ் (17), சங்கர் மகன் கார்த்திக் (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர்
கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். நண்பர்கள் இருவரும் பின்னால் அமர்ந்து வந்தனர். இந்நிலையில் கலைநல்லூர் அருகே சென்றபோது தனக்கு முன்னால் சென்ற காரை மணிகண்டன் முந்திச் செல்ல முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் காரின் மீது மோதியதில் கீழே விழுந்ததாகவும் அப்போது எதிர்திசையில் வந்த மினி பேருந்து இவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், சந்தோஷ், கார்த்திக் ஆகியோர் படுகாயமடைந்தனர்.இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மணிகண்டன் இறந்து போனார். சந்தோஷ், கார்த்திக் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதுகுறித்து மணிகண்டன் தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபேக்காள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- கள்ளக்குறிச்சியில் நகராட்சி சார்பில் தூய்மை பணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது.
- நகராட்சி சார்பில் வீடுதோறும் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் என்குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் சுப்பராயலு தலைமை தாங்கினார். நகராட்சிதுணை தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக், நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகர் 1-வது தெரு, விளாந்தாங்கல் ரோடு, மாரியம்மன் கோவில் தெரு, 4 முனை சந்திப்பு பகுதி, ஏமப்பேர் பஸ் நிறுத்தம் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதியான நான்கு முனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் கானா பாடல்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக நகராட்சி சார்பில் வீடுதோறும் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி கலைச்செல்வன், மீனாட்சி கேசவன், பாத்திமா அபூபக்கர், உமா வெங்கடேசன், நகராட்சி பொறியாளர் முருகன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சையத்காதர் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள், நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்மானம்
- மாவட்ட செயலாளர் சந்திரசேகர் வேலை அறிக்கை மற்றும் செலவு அறிக்கை வாசித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாராயணசாமி, குமார், மாவட்ட துணைத்.தலைவர் சரவணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணைத்தலைவர் மோகன்குமார் வரவேற்றார். கூட்டத்தில் கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் அலுவலக உதவியாளர், கணக்கர், சாலை ஆய்வாளர்கள் ஆகிய புதிய பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்கள் மற்றும் வட்டார முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பணி நிரந்ரம் செய்ய வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்ட செயலாளர் சந்திரசேகர் வேலை அறிக்கை மற்றும் செலவு அறிக்கை வாசித்தார். இதில் மாவட்ட இணை செயலாளர்கள் வீரபத்திரன், ஜெகதீசன், மாவட்ட தணிக்கையாளர் மனோகர் உள்ளிட்ட 9- வட்டாரங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார இணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- கல்வராயன்மலையில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு திறன்வளர் பயிற்சி கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
- 142 பழங்குடியின மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் வெள்ளிமலை அரசு ஏகலைவா மாதிரி ஆண்கள் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு திறன்வளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு திறன்வளர் பயிற்சி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பயிற்சி முகாமில் குண்டு எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீ, 200 மீ, 400 மீ, கபாடி மற்றும் வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முகாமில் திறன்மிக்க விளையாட்டு பயிற்சி ஆசிரியர்கள் 10 நாட்களுக்கு மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இதில் 142 பழங்குடியின மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
முகாமின் முக்கிய நோக்கமே மாணவர்களின் விளையாட்டுத்திறன்களை உடற்பயிற்சி ஆசிரியர்கள் வெளிக்கொணர்ந்து மாநில, தேசிய மற்றும் உலகளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்திடும் வகையில் இப்பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியின மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுகளிலும் தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ள பயிற்சி முகாம் உறுதுணையாக இருக்கும் என கூறினார்.அப்போது திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) இளங்கோ,கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி, கல்வராயன்மலை வருவாய் வட்டாட்சியர் அசோக், கல்வராயன்மலை ஒன்றியக்குழு பெருந்தலைவர் சந்திரன், வெள்ளிமலை ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாமலை, வெள்ளிமலை ஊராட்சிமன்ற தலைவர் இரத்தினம் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.






