என் மலர்
கள்ளக்குறிச்சி
- தியாகதுருகத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குளமாக கழிவு நீர் தேங்கியது.
- கழிவு நீர் கால்வாய் மூலம் வந்து பிரதான கால்வாய் மூலம் செல்கிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் செல்வா நகர் பகுதியில் ஆசாரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் பேட்டை தெரு, செல்வா நகர், ஒட்ட தெரு, ஔவையார் தெரு, ஜின்னா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாய் மூலம் வந்து பிரதான கால்வாய் மூலம் செல்கிறது.
இந்த கழிவு நீர் செல்வ நகர் பகுதியில் உள்ள ஆசாரி குளத்தில் குளம் முழுவதும் நிரம்பியுள்ளது. இவ்வாறு கழிவுநீர் குளம் முழுவதும் தேங்கியதால் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் தண்ணீர் கழிவுநீராக உள்ள தாகவும், தண்ணீர் குடிக்க முடியாமல் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்பாக நேரில் சென்று ஆய்வு செய்து, செல்வா நகரில் இருந்து வரும் பிரதான கழிவு நீர் கால்வாயை பேரூராட்சி அருகே செல்லும் பிரதான கால்வாயுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
- விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டகலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்நல அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் 23 பள்ளி விடுதிகள், 2 தொழில்நுட்ப கல்வி விடுதிகள் மற்றும் 1 கல்லூரி விடுதி ஆகிய விடுதிகளுக்கான புதிய மாணவ, மாணவியர்சேர்க்கை தேர்வுக்குழு மூலம் நடைபெற உள்ளது. மேலும் பள்ளி விடுதிகளில் 4- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பாலிடெக்னிக் மாணவர், மாணவிகளும் விடுதிகளில் தங்கி பயில எவ்வித செலவினமும் இல்லாமல், அனைத்து விடுதி மாணவ,மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும்சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதிமாணவிகளுக்கு பொருந்தாது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத்தமிழர்களின்குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை க்எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கலாம்.
எனவே விடுதியில் தங்கி பயில விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் தங்கள்பயிலும் கல்வி நிலையங்களின் அருகில் உள்ள விடுதி காப்பாளரிடம்வி ண்ணப்பங்களை பெற்று தங்களின் உறுதிமொழி படிவம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அளிக்கும் உறுதிமொழி படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து தங்கள் பயிலும் கல்வி நிலைய தலைவரிடம் கையொப்பம் பெற்று பள்ளி விடுதி மாணவர்கள் வருகின்ற 06.07.2022-க்குள்மற்றும் கல்லூரி விடுதி மாணவர்கள் 31.08.2022- க்குள் விடுதி காப்பாளரிடம்அல்லது மாவட்டகலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சி றுபான்மையினர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி மாவட்ட ஐ.ஜே.கே தலைவராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டார்.
- கடந்த காலங்களில் சிறப்பாக கட்சிப் பணி செய்ததற்காக பழனிசாமியை பொறுப்பாளர்கள் பாராட்டினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே எரவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, இவர் விழுப்புரம் (மேற்கு) மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவ ராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 25 -ந் தேதி சென்னையில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வின் அறிவுரையின்படியும், பச்சமுத்து எம்.பி. பரிந்துரை யின்படியும், மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், அமைப்புச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோரின் ஆலோசனை படியும் மீண்டும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த ஐ.ஜே.கே. மாவட்ட தலைவராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டார். மேலும் கடந்த காலங்களில் சிறப்பாக கட்சிப் பணி செய்ததற்காக பழனிசாமியை பொறுப்பா ளர்கள் பாராட்டினர். தொடர்ந்து சிறப்பாக பணி யாற்றும்படி ஆலோசனை வழங்கினர். கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த ஐ.ஜே.கே. மாவட்ட தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட பழனிசாமியை மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
- சங்கராபுரம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
- அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதுபற்றி வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புத்திராம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி யடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதுபற்றி வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணத்தை காணவில்லை. நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் மற்றும் அம்மன் கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றி ருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீ சார் வழக்குப்பதிந்து, கோவிலுக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- சங்கராபுரம் அருகே விவசாயி பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.
- பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே உள்ள பொய்க்குணம் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (52), விவசாய கூலி தொழிலாளி. இவர் அதே ஊரில் உள்ள ஒரு தரைபாலத்தின் தடுப்புச்சுவரில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராமல் பாலத்தில் இருந்து தவறி கீழே பள்ளத்தில் விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசோகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை வழங்கினார்.
- மாணவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாவண்ணம் தடுத்திட பள்ளிகளில் சமூக நல்லிணக்கம் மேற்கொள்ள வேண்டும் .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமை தடுப்பு சட்டம்-1989 மற்றும் விதிகள் 1995-ன்கீழ் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்ஒவ்வொரு ஆண்டும் காலாண்டுவாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காணிப்புக் குழு கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு காலாண்டில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்குகள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில், சென்ற ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தொடர்பாக நிலுவையில்உள்ள வழக்குகள்குறித்தும், நீதிமன்றவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப டாத நிலையில் உள்ள வழக்குகளின் எண்ணி க்கை குறித்தும், நீதிமன்ற விசாரணையில் நிலுவை வழக்குகள்குறித்தும், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் குறித்தும், அவ்வழக்குகளின் மீதுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அனைத்து வன்கொடுமை வழக்குகள்மீதும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்குத் தீருதவி உதவித்தொகை விரைந்து வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு அளிக்கும் தீருதவி, ஓய்வூதியம், வேலைவாய்ப்பு போன்ற சலுகைகள் விரைந்து கிடைத்திட அறிவுறுத்தப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் விழிப்புணர்வு முகாம் பெருமளவில் நடத்திட காவல்துறையினருக்கும் இக்குழு உறுப்பின ர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மேல்நிலைபள்ளிகளில் மாணவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாவண்ணம் தடுத்திட பள்ளிகளில் சமூக நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வினை பள்ளி மேலாண்மைக்குழு, இக்குழு உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில்குழு உறுப்பினர்மணி க்கண்ணன்எம்.எல்.ஏ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, வேளாண்மை துணை இயக்குநர் விஜயராகவன், இணை இயக்குநர் வேளாண்மை (திட்டம்) சுந்தரம், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) நடராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- தியாகதுருகம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- ராமுவின் செயலானது புது உச்சிமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துவதுடன் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 26), இவர் தனது உறவினருடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரை முன்விரோதத்தின் காரணமாக கடந்த மாதம் கொலை செய்தார். இந்த வழக்கில் காவல்துறையினரால் ராமு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் இந்நிலையில் ராமுவின் செயலானது புது உச்சிமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துவதுடன் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதாலும், இவர் வெளியே இருந்தால் வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவரது நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்கண்ட ராமுவை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் நேற்று ராமுவை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மளிகை கடைக்காரர் எரித்துக்கொலை கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
- அவர்களிடம் தங்களது செல்போன் நம்பரை வாங்கிய முருகன் நல்லவன் போல பேசி வசந்தகுமார் இடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சந்தோஷ்குமார் வயது 34. இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தோஷ் குமார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அருகே உள்ள நகர் கிராமத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் குமாரை காணவில்லை என புகார் அளித்தனர். அந்த புகாரைப் பெற்ற உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரை தீவிரமாக தேடி வந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் ஆற்றங்கரையோரம் சந்தோஷ் குமார் உடல் பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் குமாரை கொலை செய்தது யார் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் தலைமையில் இரண்டு தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.
இதற்கிடையே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பொறியியல் படித்துவிட்டு வாடகை கார் ஓட்டி வரும் முருகன் என்பவருக்கு சம்பந்தம் இருப்பதை அறிந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட சந்தோஷ்க்கு வசந்தகுமாரி (வயது 27) என்கிற மனைவியும் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு வசந்தகுமாரி மீண்டும் கருவுற்ற நிலையில் கருக்கலைப்பு செய்வதற்காக கணவன் மனைவி இருவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை முடித்துவிட்டு வாடகை கார் ஒன்றில் உளுந்தூர்பேட்டைக்கு கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். அந்த காரை ஓட்டி வந்த கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த முருகன் பொறியியல் பட்டதாரியான இவர் கணவன் மனைவி இருவரும் அன்பாக பேசி வந்துள்ளார். வீடு வந்து இறங்கும்போது அவர்களிடம் தங்களது செல்போன் நம்பரை வாங்கிய முருகன் நல்லவன் போல பேசி வசந்தகுமார் இடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
கணவன் மனைவி இருவரிடமும் நல்ல நட்பில் இருந்த சந்தோஷ் குமார் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வந்து செல்வதும் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும்போதெல்லாம் இவர்கள் பேசி பழகியும் உள்ளார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இவர்களது நட்பு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது கள்ளக்காதல் விவகாரம் வசந்தகுமாரியின் கணவரான சந்தோஷ்குமாருக்கு தெரிய வந்தது. இருவரையும் அவர் கண்டித்துள்ளார். இதனால் சந்தோஷ் குமாரின் குடும்பத்தில் அமைதியற்ற சூழல் நிலவியது. இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி தனது மகள்களுக்கு ஆதார் கார்டு திருத்த வேண்டும் எனவும் அதற்காக கணவரை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கிறேன் அவருக்கு ஒத்தாசையாக இருந்து உதவி செய்யுங்கள் என வசந்தகுமாரி முருகனிடம் செல்போனில் தெரிவித்தார். பின்னர் மகளின் எதிர்காலத்திற்காக கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்ற சந்தோஷ் குமார் அங்கு முருகனை சந்தித்து ஆதார் கார்டு திருத்த சென்றுள்ளார் பின்னர் இருவரும் சந்தோஷ் குமார் தற்காலிகமாக வாடகை எடுத்து தங்கி உள்ள கள்ளக்குறிச்சி அண்ணா நகர் வீட்டிற்கு சென்று மது அருந்த முடிவு செய்தனர். அங்கு இவர்களது கள்ளக்காதல் குறித்து மீண்டும் சந்தோஷ் குமார் மற்றும் முருகனுடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பியர் பாட்டிலால் முருகன் சந்தோஷ் குமாரின் கழுத்தில் குற்றி படுகொலை செய்தார். சந்தோஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து அதே இடத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை தார்ப்பாயில் கட்டி தனது அக்காவிற்கு சொந்தமான மூன்று சக்கர வாகனம் ஒன்றில் எடுத்து போட்டுக்கொண்டு உளுந்தூர்பேட்டை பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கிருந்த பெட்ரோல் பங்கில் 2 லிட்டர் பெட்ரோல் வாங்கிய அவர் கெடிலம் ஆற்றங்கரை ஓரம் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவரின் சடலத்தை போட்டு பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். பின்னர் அங்கு ஆள் நடமாட்டம் தெரிவதை பார்த்த முருகன் அங்கிருந்து தப்பிச்சென்று பின்னர் ஒன்றும் தெரியாது போல நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் வெளியில் சென்ற சந்தோஷ் குமார் காணவில்லை என அவரது குடும்பத்தார் புகார் அளிக்க சென்றபோது முருகனும் அவர்களுடன் புகார் அளிப்பதற்காக போலீஸ் நிலையம் சென்றது கூடுதல் தகவல். இதனை தொடர்ந்து சந்தோஷ் குமாரை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி வசந்தகுமாரி மற்றும் கள்ளக்காதலன் முருகன் இருவரையும் போலீசார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- சங்கராபுரம் அருகே பெண்ணை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- பணத்தை பெற்றுக் கொண்ட தனலட்சுமி அரிசி வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி(வயது 60). இவர் அதேஊரை சேர்ந்த அரிசி மொத்த வியாபாரியான தனலட்சுமி என்பவரிடம் அரிசி வாங்கி தருமாறு ரூ.15 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட தனலட்சுமி அரிசி வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. ஆத்திரமடைந்த வீராசாமி மற்றும் அவருடைய மகன் விக்னேஷ்(26) ஆகியோர் தனலட்சுமியின் தாய் ஆண்டாளை(55) அழைத்துச் சென்று கொலை செய்து புதூர் சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீராசாமி, விக்னேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஆண்டாளை சுடுகாட்டில் புதைக்க உடந்தையாக இருந்த திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த அல்லப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சீனு (34) என்பவரை வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
- கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு நகர்மன்ற தலைவரால் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகதலைவருமான சுப்ராயலுதலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகதலைவருமான சுப்ராயலுதலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் அபுபக்கர், துணை தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 12-ஆ ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் சாய்பிரசன்னா 516 மதிப்பெண்களும், 2-வது இடம் ஹரீஷ் ராகவேந்திரா 515 மதிப்பெண்களும், 3-வது இடம் பிடித்த மூவேந்திரன் 506 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மேலும் 10- ஆம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பெற்ற சமீர் 466 மதிப்பெண்களும், 2வது இடம் பிடித்த பூவரசன் 433 மதிப்பெண்களும், மூன்றாவது இடம் பெற்ற அதியமான் 426 மதிப்பெண்ணும்பெ ற்றுள்ளனர். இவ்வாறு பள்ளியளவில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்3 இடங்களை பிடித்த மாணவர்களை நகர மன்ற தலைவர் சுப்ராயலு பாராட்டி ரொக்க பரிசு மற்றும் நினைவு பரிசு வழங்கினார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ராமசந்திரனுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது தி.மு.க. நகர துணை செயலாளர்அப்துல்ரசாக், இயக்குனர் அருண்கென்னடி, நகராட்சி கவுன்சிலர்கள் செல்வம்மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- தியாகதுருகம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.
- தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி சுசீலா (49) இவர் தனது கணவர் மற்றும் மகன் சத்யராஜ் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று கொளஞ்சி திம்மலையில் இருந்து அலங்கிரி செல்லும் சாலையில் தனது விவசாய நிலத்தில் உள்ள நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்க்கு சென்றார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்திற்கு வந்தனர். அப்போது கிணற்றில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என சசீலா எட்டிப் பார்த்த போது தவறி கிணற்றில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட கொளஞ்சி, சத்யராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுசீலாவை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சத்யராஜ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார்.
- ரிஷிவந்தியம் தனி தாலுகா உருவாக்குவது குறித்த அரசுகோப்புகளை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்வசந்தம் கார்த்திகேயன்எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
ரிஷிவந்தியம் சட்டமன்றதொகுதி திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று தாலுக்காவில் அடங்கி உள்ளது. எனது ரிஷிவந்தியம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த கோரிக்கையை 50 ஆண்டு காலத்திற்கு பின் கருணை உள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர் கடந்த சட்டமன்ற கூட்ட தொடரின்போது ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட வாணாபுரம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டமாக அறிவித்தார். இதேபோல் ரிஷிவந்தியம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பயனடையும் வகையில் வரும் 2023-24 நிதி ஆண்டில் ரிஷிவந்தியம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டத்தை உருவாக்க அரசுக்கு பரிந்துரை செய்ய தொகுதி மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் உடனடியாக அரசின் கவனவத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறுகையில், நீண்டநாள் கோரிக்கையான ரிஷிவந்தியம் தொகுதியில் வாணாபுரம் தலைமை யிடமாககொண்டு தனி தாலுகா சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் ரிஷிவந்தியம் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். மேலும் வருகின்ற 9-ந் தேதி கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் முதல்-அமைச்சரிடம் ரிஷிவந்தியம் தனி தாலுகா உருவாக்குவது குறித்த அரசுகோப்புகளை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். எனவே வருகின்றசட்டமன்ற கூட்டதொடரில் ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.






